குட்நியூஸ்.. ஆவினில் பால் கொள்முதல் விலை அதிகரிப்பு.. எவ்வளவு தெரியுமா? விவசாயிகளுக்கு ஜாக்பாட்!
சென்னை: தமிழகத்தில் ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் கட்டுப்பாட்டில் ஆவின் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதற்காகவே பால்வளத்துறை என்ற தனி அமைச்சகம் உள்ளது. இந்த அமைச்சகத்தின் அமைச்சராக மனோ தங்கராஜ் உள்ளார்.

இந்நிலையில் தான் ஆவினில் கொள்முதல் செய்யும் பாலின் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என விவசாயிகளிடம் இருந்து கோரிக்கைகள் சென்றன.
அந்த கோரிக்கையை பரிசீலனை செய்துள்ள தமிழக அரசு ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்துள்ளது. அதாவது அதிக கொழுப்பு மற்றும் இதர சத்துள்ள பால் கொள்முதல் விலையை உயர்த்தி உள்ளது. அதன்படி தரமான பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு ரூ.1 ஊக்கத்தொகை அளிக்கப்படும் என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவித்துள்ளார்.

தற்போது அதிக கொழுப்பு மற்றும் இதர சத்துள்ள பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டாலும் கூட பால் பாக்கெட் விற்பனை விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications