சட்டசபையில் தலையில் அடித்துக் கொண்ட அமைச்சர்! விழுந்து விழுந்து சிரித்த முதலமைச்சர் ஸ்டாலின்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டசபையில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலையில் அடித்துக் கொண்ட நிகழ்வால் முதலமைச்சர் ஸ்டாலின் விழுந்து விழுந்து சிரித்தார்.

வேளாண் துறை திட்டங்கள் குறித்து பேசிவிட்டு அமரும் போது பொதுக்கூட்டம் மேடை ஞாபகத்தில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி எனக் கூறி அமர முயன்றார்.

பிறகு திடீரென சுதாரித்துக் கொண்ட அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், பேசுவது சட்டசபையில் என்பதை உணர்ந்து தலையில் அடித்துக் கொண்டார். இதனால் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் சிரித்தனர்.

சட்டசபை கூட்டம்

சட்டசபை கூட்டம்

தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரின் 6வது நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் வேளாண் துறை திட்டங்கள் குறித்து பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் எத்தனை பேர் பயன் அடைகிறார்கள் என்ற புள்ளி விவரத்தை மறந்து ஒரு லட்சம் பேர், இரண்டு லட்சம் பேர் என தோராயமாக கூறினார். சொல்ல வந்த தகவல் மறந்துவிட்ட நிலையில், அதனை லாவகமாக சமாளிக்கும் வகையில் அவருக்கே உரிய தொணியில் பேசினார் அமைச்சர் எம்.ஆர்.கே.

ஸ்டாலின் கமெண்ட்

ஸ்டாலின் கமெண்ட்

அப்போதே இதனை கவனித்துவிட்ட முதலமைச்சர் ஸ்டாலின் சிறிய புன்னகையுடன் அதைக் கேட்டுக் கொண்டிருந்தார். 1 கோடி பேருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுப்பது என்றால் சும்மாவா எவ்வளவு பெரிய திட்டம் எனக் கூறி திடீரென முதல்வர் பக்கம் தனது டிராக்கை மாற்றினார். இதைக் கேட்ட முதலமைச்சர் ஸ்டாலின் மீண்டும் என்ன நினைத்தாரோ தெரியவில்லை சிரித்தவாறே பின் இருக்கையில் அமர்ந்திருந்த அமைச்சர் சக்கரபாணியிடம் ஏதோ கமெண்ட் அடித்தார்.

ஒரே சிரிப்பு

ஒரே சிரிப்பு

இதனிடையே ஒரு வழியாக பேசி முடித்து அமரும் போது, பொதுக்கூட்டம் மேடை ஞாபகத்தில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி எனக் கூற முயன்றார்.பிறகு திடீரென சுதாரித்துக் கொண்ட அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், பேசுவது சட்டசபையில் என்பதை உணர்ந்து அச்சச்சோ என்பது போல் தனது தலையில் அடித்துக் கொண்டார். இதைப்பார்த்த முதலமைச்சர் ஸ்டாலின் உட்பட ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் சிரித்தனர்.

மூத்த அமைச்சர்கள்

மூத்த அமைச்சர்கள்

பொதுவாக மூத்த அமைச்சர்களான கே.என்.நேரு, பொன்முடி, எவ வேலு, துரைமுருகன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் போன்றவர்கள் அவையில் பேசும் போது தான் இது போன்ற சிரிப்பலைகள் ஏற்படும். ஏனெனில் அவர்கள் பேச்சு மொழியும், பதிலும் அனைவரையும் கவரக் கூடிய வகையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+