விருத்தாசலம் தொகுதியில் பிரேமலதா விஜயகாந்த் 3வது இடம்.. பாமகவுக்கு வெற்றி.. தந்தி டிவி சர்வே
சென்னை: விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடும் பிரேமலதா விஜயகாந்த் தோல்வியை சந்திக்க வாய்ப்பு இருப்பதாக தந்தி டிவி கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.
விருத்தாச்சலம் தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் தேமுதிக கூட்டணி சார்பாக தேமுதிக களமிறங்கியுள்ளது.
விஜயகாந்த் முதலில் வெற்றி பெற்ற தொகுதி என்பதால், செண்டிமெண்டாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நேரடியாக அங்கு களமிறங்கியுள்ளார்.

தேமுதிக நிர்வாகிகள்
ஒட்டுமொத்த தேமுதிக நிர்வாகிகளும், விருத்தாசலம் தொகுதியில் முகாமிட்டு உள்ளனர். பிரேமலதா விஜயகாந்தும் வேறு எந்த தொகுதியிலும் பிரச்சாரம் செய்யாமல் அந்த தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில்தான் தந்தி டிவி வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு முக்கியத்துவமாகிறது.

முதலிடம் பாமகவுக்கு
விருத்தாச்சலம் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் பாமக போட்டியிடுகிறது. அந்த கட்சி 39 சதவீதம் முதல் 45 சதவீதம் வரை வாக்குகள் பெற்று வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக தந்தி டிவி தெரிவிக்கிறது. இரண்டாவது இடத்தை திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் பெறும் என்று கூறுகிறது இந்த கருத்துகணிப்பு. 37 சதவீதம் முதல் 43 சதவீதம் வரை வாக்குகளை பெற கூடும்.

தேமுதிக மூன்றாவது இடம்
மூன்றாவது இடத்தில் தேமுதிக இருக்கிறது. 8 சதவீதம் முதல் 14 சதவீதம் வரை தான் அந்த கட்சி வாக்குகளைப் பெற முடியும் என்று சொல்கிறது தந்தி டிவி கருத்துக்கணிப்பு. அதற்கு அடுத்த இடத்தில் நாம் தமிழர் கட்சி 4 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை வாக்குகளைப் பெற்று நான்காவது இடம் பிடிக்கிறது.

பிரேமலதா விஜயகாந்த்
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தொகுதியில் பிரேமலதா விஜயகாந்த் பின்தங்கி இருக்கிறார் என்பது தந்தி டிவி கருத்துக்கணிப்பு சாராம்சம். இந்த தகவல் பாமக மகிழ்ச்சி அடையக் கூடிய செய்தியாக இருக்கிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications