"என்னது.. அந்த தொகுதியா".. கேட்டதுமே ஜெர்க் ஆன திருமாவளவன்.. இப்படி இழுத்துட்டு போனா எப்படி..!
திருமாவளவன் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்ற ஆர்வம் எழுந்துள்ளது
சென்னை: "என்னது.. அந்த தொகுதியா" என்று திருமாவளவன் அதிர்ச்சி அடைந்தாராம்.. திமுக கூட்டணியில் சீட் மற்றும் தொகுதி ஒதுக்கீடுகள் எதுவும் முடிவாகாததால், நித்தம் ஒரு உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன.. அப்படி வந்ததுதான் இந்த தகவலும்...!
வழக்கமாக தேர்தல் என்றால் முதலில் கூட்டணி கட்சிகள் மறைமுகமாக பேச்சுவார்த்தை நடத்துவார்கள்.. பிறகு பகிரங்கமாக பேச்சுவார்த்தை நடத்துவார்கள்.. இறுதியில் ஒரு சுமூக முடிவுக்கு வருவார்கள்.. இதுதான் நடக்கும்.
ஆனால் இந்த முறை கிட்டத்தட்ட 4 மாசமாக திமுக கூட்டணி பற்றிய ஒரு முடிவுக்கு யாராலும் வர முடியவில்லை.. இந்த நிமிஷம் வரை வேட்பாளர் லிஸ்ட்டும் வெளியாகவில்லை.. எனினும், ஒருவழியாக தொகுதி ஒதுக்கீடுகள் மெல்ல மெல்ல முடிவாகி வருகின்றன.

திருமாவளவன்
அந்த வகையில் விசிகவுக்கு 6 சீட் ஒதுக்கப்பட்டுள்ளது.. 25 தொகுதிகளை தேர்வு செய்து வைத்து கொண்டு, அதில் 15 தொகுதிகளை திமுகவிடம் கேட்க ஆரம்பித்தது விசிக.. ஆரம்பமே 15, 20 சீட் என்றுதான் பேச்சு தொடங்கியது.. அதாவது கண்டிப்பாக இரட்டை இலக்கத்திற்கு குறையாமல் தொகுதிகளை பெறுவோம் என்று விசிக நம்பிக்கை தெரிவித்தபடியே இருந்தது..

திமுக கூட்டணி
ஆனால், அது அப்படியே மெல்ல மெல்ல குறைந்து ஒற்றை இலக்கத்தில் வந்து நின்றது. இறுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு திமுக கூட்டணியில் 6 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.. அவற்றில் தனி சின்னத்தில் போட்டியிட போவதாக ஏற்கனவே திருமாவும் அறிவித்துவிட்டார். மேலும் எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்த பேச்சுவார்த்தையும் நடந்துள்ளது..

ஷாக்
அப்போதுதான், "பொதுத் தொகுதியிலும் போட்டியிடுவது என்ற அடிப்படையில் உடுமலைப்பேட்டை தொகுதியை எடுத்துக்கொள்ளுங்களேன்" என்று திமுக தரப்பில் கூற, அதை கேட்டு சற்று ஷாக் ஆனாராம் திருமாவளவன். "அந்த தொகுதி வேண்டாம், சோழவந்தான் தொகுதியை தரமுடியுமா" என்று விசிக தரப்பில் கேட்க, அதற்கும் திமுக தரப்பில் மறுப்பு சொன்னதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

விடுதலை சிறுத்தைகள்
உடுமலைப்பேட்டையை பொறுத்தவரை, அனைத்து சமூக மக்களும் உள்ள தொகுதி ஆகும்.. அதிலும் தெலுங்கு பேசும் மக்களும் அதிகளவில் இந்த தொகுதியில் வசிக்கின்றனர். இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் அதிமுக 7 முறையும், திமுக 4 முறையும், காங்கிரஸ் 3 முறையும், சுயேட்சை ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது.. அதனால், இந்த தொகுதியே விசிகவுக்கு ஒதுக்கப்படுமா என்பதும் உறுதியாகவில்லை.. மொத்தத்தில், கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதியையே திமுகவும் கேட்பதால்தான் இப்போது வரை லிஸ்ட் வெளியாகாமல் இழுபறி ஆவதாக தெரிகிறது.

விடுதலை சிறுத்தைகள்
உடுமலைப்பேட்டையை பொறுத்தவரை, அனைத்து சமூக மக்களும் உள்ள தொகுதி ஆகும்.. அதிலும் தெலுங்கு பேசும் மக்களும் அதிகளவில் இந்த தொகுதியில் வசிக்கின்றனர். இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் அதிமுக 7 முறையும், திமுக 4 முறையும், காங்கிரஸ் 3 முறையும், சுயேட்சை ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது.. அதனால், இந்த தொகுதியே விசிகவுக்கு ஒதுக்கப்படுமா என்பதும் உறுதியாகவில்லை.. மொத்தத்தில், கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதியையே திமுகவும் கேட்பதால்தான் இப்போது வரை லிஸ்ட் வெளியாமல் இழுபறி ஆவதாக தெரிகிறது.
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்ற திருமாவளவன்.. காரணம் இதுதானாம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications