"கவனம்பா".. உதயநிதி சொன்ன அட்வைஸ்.. பேரனை வழியனுப்ப வந்த முதல்வர்.. ஏர்போர்ட்டில் என்ன நடந்தது?
சென்னை: மணிப்பூரில் கால்பந்து அணியில் விளையாட செல்லும் திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதியை முதல்வர் ஸ்டாலின் நேரில் வழியனுப்பி வைத்தார்.
Recommended Video
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினின் பேரனும், எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினின் மகனுமான இன்பநிதி ஸ்டாலின் கால்பந்து போட்டிகளில் தீவிரமாக ஆடி வருகிறார். தமிழ்நாட்டில் கிளப் அணிகளில் ஆடி கவனம் பெற்றவர் தற்போது மணிப்பூர் கிளப் அணிக்கு டிரான்ஸ்பர் ஆகியுள்ளார்.
மணிப்பூரில் உள்ள நெரோகா கிளப் அணிக்காக தேர்வாகி இருக்கும் இவர் அங்கு பயிற்சி பெற சென்றுள்ளார். அதன்பின் ஸ்பெயினில் நடக்கும் போட்டியில் அந்த அணிக்காக கலந்து கொண்டு ஆட உள்ளார்.

சென்னை
இதையடுத்து இன்பநிதி சென்னை விமான நிலையத்தில் இருந்து மணிப்பூர் புறப்பட்டார். அங்கு தனது அணியோடு இணைந்துவிட்டு பின்னர் ஸ்பெயினுக்கு செல்ல இருக்கிறார். இன்பநிதி கால்பந்து விளையாடும் போட்டோக்களும் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் வைரலானது.

அனுப்பி வைத்தார்
இந்த நிலையில் நேற்று சென்னை விமான நிலையத்தில் இன்பநிதியை அவரின் தந்தை உதயநிதி ஸ்டாலின் வழியனுப்பி வைத்தார். தனது மனைவியுடன் மற்றும் குடும்பத்தினருடன் வந்த உதயநிதி ஸ்டாலின் இன்பநிதியை கட்டி அணைத்து அனுப்பி வைத்தார். கவனமாக சென்றுவிட்டு வா.. பாதுகாப்பாக இரு என்று கூறிவிட்டு அனுப்பி வைத்தார்.

பேசினார்
இவருடன் பாதுகாவலர்கள் யாரும் செல்லவில்லை. மணிப்பூர் வரை மட்டுமே பாதுகாப்பிற்கு ஒருவர் செல்ல இருக்கிறார் என்பதால் மிகவும் கவனமாக இருக்கும்படி அறிவுரை வழங்கினார். எதிர்பார்க்காத விதமாக முதல்வர் ஸ்டாலினும் விமான நிலையம் வந்தார். கால்பந்து போட்டிக்கு செல்லும் பேரனை அரவணைத்து அனுப்பி வைத்தார்.

கூட்டம்
திடீரென முதல்வர் விமான நிலையம் வந்ததால் அந்த இடம் கொஞ்சம் பரபரப்பாக காணப்பட்டது. இன்பநிதியிடம் சில நிமிடங்கள் பேசியவர் அங்கிருந்து கிளம்பி சென்றார். துர்கா ஸ்டாலினும் இவருடன் உடன் இருந்தார். முதல்வர் ஸ்டாலின் இப்படி விமான நிலையம் வந்துவிட்டு சென்றது இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications
