வருவாய் பற்றாக்குறை குறைத்துவிட்டோம்.. தேசிய அளவில் நாம்தான் பெஸ்ட்.. அடித்து சொன்ன பிடிஆர்!

சுற்றுலா துறையை மையமாக வைத்து பல முக்கிய அறிவிப்புகள் இன்று வெளியாகும் வாய்ப்புகள் உள்ளன.

Subscribe to Oneindia Tamil

சென்னை: வருவாய் பற்றாக்குறை கடந்த ஆட்சியில் 62 ஆயிரம் கோடியாக இருந்தது. இதை 30 ஆயிரம் கோடி ரூபாயாக குறைத்து உள்ளோம். கடும் நிதி நெருக்கடியிலும் மிகக்கடினமான சீர்திருத்தங்களை மேற்கொண்டு மாற்றத்தை செய்து இருக்கிறோம் என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.

2023-24ம் ஆண்டிற்கான தமிழ்நாடு பட்ஜெட் இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

2021 சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திமுக அரசு தமது முதலாவது இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்தது.திமுக அரசு தாக்கல் செய்யும் 3-வது பட்ஜெட் இது. நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்யும் 3-வது பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.

பட்ஜெட் உரை

பட்ஜெட் உரை

அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனது பட்ஜெட் உரையில், தேசிய அளவில் ஒப்பிடுகையில் தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சி அதிகம் உள்ளது. வருவாய் பற்றாக்குறை கடந்த ஆட்சியில் 62 ஆயிரம் கோடியாக இருந்தது. இதை 30 ஆயிரம் கோடி ரூபாயாக குறைத்து உள்ளோம். கடும் நிதி நெருக்கடியிலும் மிகக்கடினமான சீர்திருத்தங்களை மேற்கொண்டு, வருவாய் பற்றாக்குறையில் ₹30,000 கோடி குறைத்துள்ளோம். வரும் ஆண்டுகளில் இது மேலும் குறைக்கப்படும். வருவாய் பற்றாக்குறை மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் குறைவாகவே உள்ளது.

 மகாராஷ்டிரா

மகாராஷ்டிரா

மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் வருவாய் பற்றாக்குறை குறைவாக உள்ளது. இதற்கு காரணம் கடந்த 2 வருட ஆட்சியில் கொண்டு வரப்பட்ட வருவாய் சீர்திருத்தங்கள்தான். கடந்த 2 ஆண்டுகளாக அரசு எடுத்த முயற்சியின் காரணமாக முன்னேற்றம் கண்டு வருகிறோம். நாட்டுக்கு கலங்கரை விளக்கமாக திகழ்கிறது திராவிட மாடல் அரசு . சமூக நீதி, அனைவருக்கும் வளர்ச்சி என 4 அம்சங்கள் அடிப்படையில் திராவிட மாடல் அரசு.

மொழிப்போர்

மொழிப்போர்

சென்னையில் மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து, நடராசன் பெயரில் நினைவு மண்டபம் அமைப்போம். ரூ. 5 கோடி மானியத்துடன் அம்பேத்கர் நூல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்படும். தமிழ் கணினி பண்பாட்டு மாநாடு நடைபெறும் . அம்பேத்கர் படைப்புகள் தமிழில் மொழிப்பெயர்க்கப்படும். மேலும் 591 அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு கட்டணமில்லா பேருந்து அட்டை. தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களிலும் சங்கமம் கலை விழா விரிவுபடுத்தப்படும், பகுதிநேர நாட்டுப் புற கலை பயிற்சி அமையங்கள் அமைக்கப்படும் . சோழப் பேரரசு பங்களிப்பை போற்றும் வகையில் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும் . என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.

அதிமுக

அதிமுக

இன்று பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியதுமே அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். இருக்கை விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். சட்டசபையில் பட்ஜெட் வாசிப்பு தொடங்கியதும் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூச்சல் போட்டு அமளி செய்தனர். அதிமுகவினர் அமைதி காக்க சபாநாயகர் அப்பாவு வலியுறுத்தினார். ஆனால் அதிமுகவினர் இதை கேட்காமல் தொடர்ந்து அமளி செய்தனர். அதிமுகவினர் பேசுவது எதுவும் அவை குறிப்பில் இடம்பெறாது என்று இதையடுத்து அப்பாவு கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+