அதிக வருமானம் ஈட்டிய மாநிலக் கட்சிகள்.. திமுக வருவாய் ரூ.180 கோடி.. அதிமுகவின் வருவாய் ரூ.46 கோடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2023-24 நிதியாண்டில் நன்கொடை மற்றும் தேர்தல் பத்திரங்கள் மூலமாக திமுக ரூ.180.94 கோடியும், அதிமுக ரூ.46.98 கோடியும் வருமானம் ஈட்டி இருக்கின்றன. திமுகவின் வருமானம் கடந்த நிதியாண்டை விடவும் ரூ.33 கோடி குறைந்துள்ள நிலையில், அதிமுகவின் வருமானம் ரூ.26 கோடி வரை அதிகரித்துள்ளது.

2023-24 நிதியாண்டில் நாடு முழுவதும் உள்ள மாநிலக் கட்சிகள் நன்கொடை மற்றும் தேர்தல் பத்திரம் மூலம் கிடைத்த வருமானம் குறித்து ஜனநாயக சீர்திருத்தத்திற்கான சங்கம் தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி 2023-24 நிதியாண்டில் 40 மாநிலக் கட்சிகளின் ஒட்டுமொத்த வருமானமாக ரூ. 2,532.09 கோடியாக அதிகரித்துள்ளது. இதில் சுமார் 70 சதவிகித வருமான தேர்தல் பத்திரங்கள் மூகம் கிடைத்திருக்கிறது.

aiadmk dmk income

அதாவது ரூ.1,796.02 கோடி தேர்தல் பத்திரம் மூலம் கிடைத்துள்ளன. அதேபோல் அதிக வருமானம் ஈட்டிய பட்டியலில் 5 கட்சிகள் இடம்பிடித்துள்ளன. அதில் முதலிடத்தில் பிஆர்எஸ் கட்சி உள்ளது. மொத்தமாக ரூ.685.51 கோடி வருமானமாக இருக்கிறது. அதேபோல் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வருமானமாக ரூ.646.39 கோடி கணக்கிடப்பட்டுள்ளது.

அதேபோல் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிஜு ஜனதா தளம் கட்சியின் வருமானம் ரூ.297.81 கோடியாகவும், தெலுங்கு தேசம் கட்சியின் வருமானம் ரூ.285.07 கோடியாகவும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் கருமானம் ரூ.191.04 கோடியாகவும் உள்ளது. 40 மாநிலக் கட்சிகள் பெற்ற நன்கொடை மற்றும் தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்ற வருமானத்தில், இந்த 5 கட்சிகள் மட்டும் 83.17 சதவிகித வருமானத்தை பெற்றுள்ளன.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுகவின் வருமானமாக ரூ.180.94 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டை விடவும் ரூ.33 கோடி குறைவாகும். அதேபோல் அதிமுகவை பொறுத்தவரை ரூ.46.98 கோடி வருமானம் ஈட்டியுள்ளன. ஆனால் கடந்த நிதியாண்டை விடவும் ரூ.26 கோடி அதிகமாகும். அதுமட்டுமல்லாமல் இவ்வாறு வருமானம் பெற்ற 27 மாநிலக் கட்சிகள் எந்த செலவையும் செய்யவில்லை. ஆனால் 12 மாநிலக் கட்சிகள் வருமானத்தை விட அதிக செலவு செய்துள்ளது.

தங்களுக்கு கிடைத்த வருமானத்தில் பிஆர்எஸ் கட்சி ரூ.430.68 கோடியையும், திரிணாமுல் காங்கிரஸ் ரூ.414.92 கோடியும், பிஜு ஜனதா தளம் ரூ.253.79 கோடியையும் செலவு செய்யாமல் வைத்துள்ளன. ஆனால் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், சமாஜ்வாதி, ஐக்கிய ஜனதா தளம், திமுக உள்ளிட்ட கட்சிகள் வருமானத்தை விட அதிக செலவு செய்திருக்கின்றன.

மாநிலக் கட்சிகள் பெற்ற வருமானத்தில் ரூ.2,117.85 கோடி நன்கொடை மூலமாக கிடைத்துள்ளது. அதேபோல் பிஆர்எஸ், திரிணாமுல் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம், ஒய்எஸ்ஆர் காங்கிராஸ் மற்றும் திமுக உள்ளிட்ட 10 கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலமாக ரூ.1,796.02 கோடி வருமானம் ஈட்டி இருக்கின்றன. கடந்த ஆண்டை விடவும் மாநிலக் கட்சிகளின் வருமானம் 45.77 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+