வருமான வரி கட்டிட்டீங்களா? ஆவணங்களில் இந்த நம்பர் சரியா இருக்கா பாருங்க.. 26AS படிவம் முக்கியத்துவம்
சென்னை: ஒவ்வொரு வருடமும் வருமான வரி செலுத்துவதற்கு ஜூலை 31ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்படும். இதனை எந்த ஒரு காரணத்திற்காகவும் தேதியை வருமான வரித்துறை நீட்டிப்பது கிடையாது. ஆனால், இந்த ஆண்டு வருமான வரித்துறை தாக்கல் செய்யும்போது அதற்கான படிவங்களில் மாற்றங்கள் கொண்டு வரப்பட உள்ளதாக கூறப்படுகிறது. எனவே, வரித்தாக்கலுக்கான கால அவகாசமும் நீட்டிக்கப்பட்டிருக்கிறது.. கால அவகாசத்தை நீட்டித்திருப்பதற்கு வேறு என்னென்ன காரணங்கள் தெரியுமா? அதென்ன 26AS படிவம்? இவைகளை பற்றி சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
வருமான வரி விதிகளின்படி, வரிக்கு உட்பட்டவர்கள் ஆண்டுதோறும் வருமான வரியையும், அதன் கணக்கையும் தாக்கல் செய்ய வேண்டும் என்பது அடிப்படை விதியாகும்.. எனினும், சிலர் வரி ஏய்ப்பினை செய்துவிடுகிறார்கள்.

வரிஏய்ப்பு திட்டம்
எனவேதான், வரி ஏய்ப்பு பற்றி தகவல் அளிப்போருக்கு பரிசு வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்து ஊக்கப்படுத்தி வருகிறது.. அதாவது, கணக்கில் காட்டப்படாத வருமானம், சொத்துகள், வரி ஏய்ப்பு விவரங்கள் உள்ளிட்ட தகவல்களை தருவோருக்கு சிறப்பு பரிசு வழங்கப்படுகின்றன.
குறிப்பாக, பினாமி சொத்துகள் பற்றி தகவல் தந்தால், ரூ.1 கோடி வரை பரிசு தரப்படுகிறது.. எனவே, சட்டவிரோதமான முறையில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தவர்களை பற்றியோ அல்லது அவர்கள் வரி ஏய்ப்பில் ஈடுபட்டிருப்பது தெரிந்தாலோ, வருமானவரித் துறையிடம் யார் வேண்டுமானாலும், தாராளமாக தகவல் சொல்லலாம்.
இப்படியொரு பரிசு சலுகை அறிவித்திருப்பதால், வரிஏய்ப்புகள் குறைந்துள்ளன. எனினும், சில இடங்களில் வரி ஏய்ப்பு நடந்து கொண்டுதானிருக்கிறது..
மாத சம்பளம் வாங்குவோர்
குறிப்பாக, மாத சம்பளம் வாங்குபவர்களில் ஒருசிலர், தங்களது வீட்டு வாடகைக்கு போலி ரசீதுகளை சமர்பித்து, வருமான வரி விலக்கு பெறுகிறார்களாம்.. எனவேதான், இதுபோன்றவர்களை கண்டுபிடிக்கவும், மத்திய அரசு புதிய சாஃப்ட்வேரை கொண்டு வரப்போவதாகவும், இதனை பயன்படுத்தி, வரிஏய்ப்பு செய்பவர்கள் மீது 200 சதவீதம் வரை அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டிருப்பதாக செய்திகளும் வெளியாகியிருந்தன.
இதுபோன்ற கெடுபிடிகள், கறார் நடவடிக்கைகளால்தான், ஆண்டுவருமானமும் உயர்ந்து வருகிறது.. இந்தியாவில் 1 கோடிக்கு மேல் ஆண்டு வருமானம் பெறுவோரின் எண்ணிக்கையும் பெருகி வருவதாக கடந்த 2 வருடங்களுக்கு முன்பேயே வருமானவரித்துறை கூறியிருந்தது நினைவிருக்கலாம்.
கால அவகாசம் நீட்டிப்பு
இப்படிப்பட்ட சூழ்நிலையில், கடந்த நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டியிருக்கிறது.. அந்தவகையில், கால அவகாசத்தை ஜூலை 31-ம் தேதியில் இருந்து செப்டம்பர் 15-ம் தேதி வரையில் நீட்டித்துள்ளது வருமான வரித்துறை..
வருமான வரி கணக்கு தாக்கல் தொடர்பான படிவங்கள் மற்றும் TDS போன்றவற்றில் குறிப்பிடத்தக்க திருத்தங்கள் காரணமாக இந்த கால அவகாசம் தரப்பட்டுள்ளது..
வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான படிவத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள், அதை அப்லோடு செய்வதற்காக எடுத்து கொள்ளப்படும் நேரம் போன்ற காரணங்களுக்காகவும் இந்த அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
விரைவில் அறிவிப்பு
அதுமட்டுமல்லாமல், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வருமான வரி அறிக்கைகளில் அறிமுகப்படுத்தப்பட்ட விரிவான மாற்றங்களை கருத்தில் கொண்டும், வரும் 2025-26நிதியாண்டுக்கான வருமான வரி பயன்பாடுகளின் அமைப்பு தயார்நிலை மற்றும் வெளியீட்டிற்கு தேவையான நேரத்தைக் கருத்தில் கொண்டும் இந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் அனைவருக்கும் துல்லியமான வருமான வரி கணக்கு தாக்கல் அனுபவத்தை உறுதி செய்யும் என்றும் நம்பப்படுகிறது.. எனினும் இது தொடர்பான விரிவான அறிவிப்பு விரைவில் வரும் என்று வருமான வரித்துறை தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறது.
கடந்த வருடத்தை விடவும் கூடுதலாக 46 நாட்கள் கூடுதல் அவகாசம் வருமான வரி தாக்கல் செய்வதற்கு இந்த ஆண்டு வழங்கப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது. எனினும், முன்கூட்டியே கணக்கினை தாக்கல் செய்த விடுவது தான் நல்லது. ஏனெனில் கடைசி நாட்களில் வருமான வரி வெப்சைட்டில் பலரும் கணக்கு தாக்கல் செய்ய முன்வருவார்கள் என்பதால் அந்த சமயத்தில் இணையதளமே முடங்கிப் போகக் கூடிய நிலைமையும் வரலாம்.
படிவம் 26ஏஎஸ் (Form 26AS ) என்றால் என்ன
அதேபோல, படிவம் 26ஏஎஸ் (Form 26AS ) என்றால் என்ன என்பதையும் தெரிந்து கொள்வது அவசியம்.. 26ஏஎஸ் (Form 26AS ) என்ற படிவத்தை, ஆண்டு தகவல் அறிக்கை என்பார்கள்.. ஒரு குறிப்பிட்ட நிதியாண்டில் உங்களுடைய அனைத்து விதமான நிதி நடவடிக்கைகளும் உள்ளடக்கிய ஆவணம் இதுவாகும்..
எனவே அந்த நிதியாண்டில் உங்களது TDS பிடித்தம், TCS போன்ற வரி விவரங்களும் அடங்கியிருக்கும்.. இதனை டவுன்லோட் செய்துகொண்டு, அதிலுள்ள விவரங்களும், உங்களுடைய வருமான வரி கணக்கும் ஒரே மாதிரியாக இருக்கிறதா என்பதை சரிசெய்து கொள்ள வேண்டும்.
ஒருவேளை வித்தியாசம் இருந்தால், உங்களுக்கு வரவேண்டிய ரீஃபண்ட் தொகை தாமதமாகலாம் அல்லது வராமலும் போகலாம். எனவே வரி தாக்கல் செய்யும்,முன்பு படிவம் 26AS படிவத்தையும், TDS சரியாக டெபாசிட் செய்யப்பட்டிருக்கிறதா என்பதையும் ஆய்வு செய்வது அவசியம்
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications