வருமான வரி கட்டிட்டீங்களா.. மத்திய அரசின் அடுத்த அதிரடியை பாருங்க.. புதுசு புதுசா வருதே.. சூப்பர்ல
சென்னை: வருமான வரி தாக்கல் செய்வதற்காக புதிய வசதி ஒன்று அறிமுகமாகி உள்ளது.. எதற்காக இந்த புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது தெரியுமா?
வருமான வரி விதிகளின்படி, வரிக்கு உட்பட்டவர்கள் வருடந்தோறும் வருமான வரி மற்றும் அதன் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்பது அடிப்படை விதியாகும்.

வருமான வரி: இதற்கு பின்பற்ற வேண்டிய தேவையான நடைமுறைகளை வருமான வரித்துறை நிர்ணயம் செய்துள்ளது.. குறிப்பாக வரிக்கு உட்பட்ட வருமானம் விலக்குகள் மற்றும் விலக்குகள் மூலம் குறைக்கப்படும்போது பலர் வரிக்கணக்கை தாக்கல் செய்வதில்லை.
வருமான வரி கணக்கு ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவும் நெருங்கியபடியே உள்ளது.. ஜூலை 31-தான் கடைசி நாளாகும்.. அதற்கு பிறகு, காலக்கெடுவை நீட்டிக்க நிதி அமைச்சகம் பரிசீலிக்கவில்லை.. அதனால்தான், வருமான வரி தாக்கல் செய்ய டைம் நெருங்கிவருவதாகவும், உடனே கணக்கை தாக்கல் செய்யுங்கள் என்றும் மெசேஜ்களை அனுப்பி வருகிறது.
மேலும் ஜூலை 31ம் தேதிக்கு பிறகு வருமான வரி தாக்கல் செய்பவருக்கு ரூபாய் 5000 அபராதம் வசூலிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழலில், வருமான வரியை செலுத்த புது வசதியை வருமான வரித்துறை அறிமுகப்படுத்தி உள்ளது.
வணிகர்கள்: அதாவது, ஆன்லைனிலேயே வரியை செலுத்திக்கொள்ளும் வசதியான, Phonepe என்ற ஆப் வசதி அறிமுகப்படுத்தியுள்ளது.. வருமான வரி செலுத்தக்கூடிய, நபர்கள் அல்லது வணிகர்கள், யாராக இருந்தாலும், இந்த ஆப் மூலம் வருமான வரி செலுத்தி கொள்ளலாம். அந்தவகையில், வரி செலுத்துவோர், கிரெடிட் கார்டு அல்லது யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) மூலம் தங்கள் வரிகளை செலுத்த தேர்வு செய்து கொள்ளலாம்..
புதிய ஆப்: இந்த புதிய செயலி எதற்காகவென்றால், வருமான வரி தாக்கல் செய்வதற்கான இணைய பக்கத்தில் சில தொழில்நுட்ப கோளாறுகள் இருக்கலாம்.. ஒருவேளை அப்படி இருந்தால், டிஜிட்டல் கட்டண முறையான Phonepay மூலமாக எளிதில் வருமான வரி செலுத்தி கொள்ளலாம் என்பதற்காகவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த PhonePe ஆப் மூலம், பயனாளர்கள் எப்படி வரிகளை செலுத்த வேண்டும் தெரியுமா? இதோ அதற்கான வழிமுறைகள்:
- இந்த புதிய ஆப் PhonePe பக்கத்திற்கு செல்ல வேண்டும்.. அங்கே "வருமான வரி" என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
- பிறகு, நீங்கள் செலுத்த விரும்பும் வரி வகை என்ன? மதிப்பீட்டு வருடம் என்ன? பான் கார்டு விவரங்கள்? என்ன போன்றவற்றை தேர்ந்தெடுக்க வேண்டும்
- இப்போது, வரித்தொகையை பதிவிட்டு, உங்களுக்கு விருப்பமான கட்டண முறையை பயன்படுத்தி செலுத்த வேண்டும்.
- பணம் செலுத்திய பிறகு, அந்த தொகை 2 வேலை நாட்களுக்குள் வரி போர்ட்டலில் வரவு வைக்கப்படும்.

Click it and Unblock the Notifications