‛டிமிக்கி’.. செந்தில் பாலாஜி தம்பி அசோக்கிற்கு வருமான வரித்துறை 3வது சம்மன்! அடுத்தது இதுதான்!
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் 2 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத நிலையில் 3வது முறையாக வருமான வரித்துறை சம்மன் அனுப்பி வரும் 27 ம் தேதி நேரில் ஆஜராகும்படி கூறியுள்ளது. இந்த சம்மனுக்கு அவர் ஆஜராகாவிட்டால் அவர் மீது எடுக்கப்படும் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அசோக்கிற்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இவர் அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அப்போது அவர் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பண வசூல் செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததாக கூறி அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. இந்த விசாரணையின் முடிவில் கடந்த மாதம் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தற்போது செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் மருத்துவமனையில் உள்ளார். அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையால் செந்தில் பாலாஜி தற்போது இலாகா இல்லாத அமைச்சராக நீடித்து வருகிறார்.
முன்னதாக கடந்த மே மாதம் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். சென்னை, கோவை மற்றும் கரூர் மாவட்டங்களில் மொத்தம் 40க்கும் அதிகமான இடங்களில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. கரூரில் அசோக் வீட்டில் சோதனை நடத்த சென்றவர்களை அவரது ஆதரவாளர்கள் தடுத்து நிறுத்தி வாக்குவாதம் செய்து தாக்கினர்.
அதன்பிறகு வருமான வரித்துறை அதிகாரிகள் மத்திய பாதுகாப்பு படையினரின் உதவியுடன் அசோக் வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தினர். சில நாட்கள் வரை நடந்த இந்த வருமான வரி சோதனை முடிவுக்கு வந்தது. அப்போது முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கட்டுக்கட்டாக பணமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
இதனால் தான் அசோக்கிடம் விசாரணை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்காக 2 முறை அசோக்கிற்கு வருமான வரித்துறை சார்பில் சம்மன் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அசோக் அதனை கண்டுக்கொள்ளவில்லை. தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகாமல் உள்ளார். மேலும் அவர் எங்கு இருக்கிறார்? என்ற தகவலும் தெரியாத நிலை உள்ளது.
இதன் தொடர்ச்சியாக தான் வருமான வரித்துறை சார்பில் அசோக்கிற்கு 3வது முறையாக சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் வரும் 27 ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்த முறையும் அசோக் விசாரணைக்கு ஆஜராகாவிட்டால் அவர் மீது சட்ட நடவடிக்கையை எடுக்க வருமான வரித்துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அசோக் புதிய சிக்கலில் சிக்கி உள்ளார்.
அதாவது சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை அடிப்படையாக வைத்து தான் அசோக்கை சம்மன் மூலம் வருமான வரித்துறையினர் விசாரணைக்கு அழைக்கின்றனர். ஆனால் அவர் தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகாமல் உள்ளார். இதனால் இதுதொடர்பான நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கையை மேற்கொள்ள் வருமான வரித்துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
-
செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
செந்தில் பாலாஜி மீண்டும் கைதா? ஆளுநரிடம் ‘கிரீன் சிக்னல்’ கேட்டு ஃபைல்களை அனுப்பிய தமிழக அரசு! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு












Click it and Unblock the Notifications