எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு.. ஸ்டாலின் தங்கியிருந்த விடுதியிலும் சோதனை
சென்னை: திருவண்ணாமலையில் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர் எ.வ. வேலு பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கும் அதே வேளையில், எ.வ. வேலுவுக்கு சொந்தமான பல இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
Recommended Video

திருவண்ணாமலை சட்டப்பேரவை தொகுதியில் திமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு போட்டியிடுகிறார். இந்த நிலையில், இவருக்கு சொந்தமான கல்லூரி, அறக்கட்டளை அலுவலகம் ஆகிய பல இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

அதுமட்டுமின்றி, அவரது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களின் வீடுகள் மற்றும் 10க்கும் மேற்பட்ட இடங்களில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுவருவதாக தெரிகிறது.
வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 20க்கும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தெரிகிறது.
திருவண்ணாமலையில் தற்போது திமுக தலைவர் ஸ்டாலின், எ.வ.வேலுவுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அதே வேளையில், அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
குறிப்பாக, கடந்த ஒருமணி நேரமாக சோதனை நடைபெற்று வரும் எ.வ. வேலுவின் கல்லூரியில் தான், ஸ்டாலின் நேற்று இரவு தங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரசாரத்திற்காக அவர் கிளம்பிய அடுத்த சில நிமிடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்த வந்திருக்கின்றனர். அதன்பிறகு, கல்லூரி மூடப்பட உள்ளேயிருந்து யாரும் வெளியே செல்லவோ, வெளியிலிருந்து யாரும் உள்ளே செல்லவோ அனுமதிக்கப்படவில்லை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications