வேகமாக பரவும் "டெங்கு காய்ச்சல்.." மாவட்ட நிர்வாகங்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் அதிரடி உத்தரவு
சென்னை: தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து வரும் நிலையில், 5 நாட்களுக்கு மேல் கடும் காய்ச்சல் இருப்போருக்கு எலிசா பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என்றும் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகங்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கொசுக்கள் மூலமாக பரவும் வைரஸ் தொற்று நோய் டெங்கு காய்ச்சல். தற்போது தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் தீவிரமாகப் பரவி வருகிறது. சில நேரங்களில் டெங்கு காய்ச்சல் உயிரிழப்பையும் ஏற்படுத்திவிடும் என்பதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். சமீபத்தில் சென்னை மதுரவாயலை சேர்ந்த 4 வயது சிறுவன் டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்துவிட்டான்.

இதன் காரணமாக டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும், நோயின் அறிகுறி இருப்பவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு உரிய சிகிச்சைகளை அளித்து, நோய் நீங்குவதற்கான மருத்துவத்தினை செய்ய வேண்டும் என்றும், டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பு என்ற நிலை உருவாவதை தடுக்கவும் வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும் மருத்துவத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். 5 நாட்களுக்கு மேல் கடும் காய்ச்சல் இருப்போருக்கு என்எஸ்1 என்ற எலிசா பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்.
அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் காய்ச்சல் வார்டுகளை அதிகரிக்க வேண்டும். மேலும் அனைத்து மருத்துவனைகளிலும் போதிய ரத்த இருப்பு உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். கொசு மருத்து தெளித்தல் புகை அடித்தல் உள்ளிட்ட பணிகளை மலேரியா தடுப்பு பணியாளர்கள் செய்ய வேண்டும். அரசின் வழிகாட்டுதல்களை மக்கள் பின்பற்றுகிறார்களா என்பதை வீடு வீடாக சென்ற ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக கடலூர் வண்டிப்பாளையம், மஞ்சக்குப்பம், முட்டம், பண்ருட்டியைச் சேர்ந்த 4 பெண்கள் உட்பட ஆறு பேர் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளனர். இந்த நிலையில், அவர்களுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் 6 பேரும் டெங்கு காய்ச்சலுக்கான தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதேபோல் கடலூரை ஒட்டியுள்ள புதுச்சேரியில், தனியார் மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட கல்லூரி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருக்கும் டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications