கொரோனா டெஸ்ட்களை உடனே உயர்த்துங்கள்.. முக்கியம்.. மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை உத்தரவு
சென்னை: மாநிலங்களில் கொரோனா சோதனைகளை உயர்த்த மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதி உள்ளது.
இந்தியாவில் கொரோனா கேஸ்கள் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. ஓமிக்ரான் காரணமாக தினசரி பதிவாகும் கேஸ்களின் எண்ணிக்கை உச்சம் தொட்டுள்ளது. இந்தியாவில் தினசரி கொரோனா கேஸ்கள் 2.40 லட்சத்தை தாண்டி உள்ளது.
இந்தியாவில் தற்போது 1,736,605 பேர் சிகிச்சை பெறும் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். இந்தியாவில் இதுவரை கொரோனா காரணமாக 486,784 பேர் பலியாகி உள்ளனர்.

கொரோனா டெஸ்ட்
இந்த நிலையில் மாநிலங்களில் கொரோனா சோதனைகளை உடனே உயர்த்த மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது. பல்வேறு மாநிலங்கள் கொரோனா சோதனைகளை குறைத்த நிலையில் மத்திய அரசு இந்த அறிவுறுத்தலை செய்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதி உள்ளது, அதில், கொரோனா பரவல் முற்றிலுமாக முடியும் வரை சோதனைகளை தொடர வேண்டும்.

டெஸ்ட் எண்ணிக்கை
தொடர்ந்து கொரோனாவிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகள் தொடர வேண்டும். சில மாநிலங்களில் கொரோனா சோதனைகள் திடீரென குறைந்துள்ளது. கொரோனாவிற்கு எதிராக அலட்சியமாக இருந்துவிட கூடாது. உடனே சோதனைகளை உயர்த்தும் வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும். சில மாநிலங்களில் கேஸ்கள் உயர்ந்தாலும் சோதனைகள் குறைக்கப்பட்டு இருக்கின்றன.

ஓமிக்ரான்
சீக்கிரமே சோதனை செய்து, சீக்கிரமே கொரோனா நோயாளிகளை கண்டுபிடித்தால்தான் அவர்களை குணப்படுத்த முடியும். கொரோனா பரவலை தடுப்பதில் அலட்சியம் காட்ட கூடாது. தொடர்ந்து கட்டுப்பாடுகளை கண்காணிக்க வேண்டும். டெஸ்ட்களை உயர்த்துவதன் மூலம் கேஸ்கள் உச்சம் தொடும் முன் அதை கட்டுப்படுத்த முடியும்.
Recommended Video

கொரோனா ஓமிக்ரான் கேஸ்கள்
கொரோனா சோதனைகள் செய்தால்தான் புதிய கிளஸ்டர்களை, ஹாட் ஸ்பாட்களை கண்டுபிடிக்க முடியும். அப்போதுதான் கேஸ்கள் பரவாமல் தடுக்க முடியும். கொரோனா பரவல் மோசமாகாமல் தடுக்க ஒரே வழி சோதனைகளை அதிகரிப்பது மட்டுமே. அதிக ரிஸ்க் கொண்டவர்களை கண்டுபிடிக்கவும் டெஸ்டிங் அவசியம், என்று மத்திய அரசின் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications