கொஞ்சமாவது மூச்சு விட டைம் கொடுங்க.. போட்டிக்கு பின் உடைத்து பேசிய அஸ்வின்.. என்ன நடந்தது?
சென்னை: நியூசிலாந்துக்கு எதிரான டி 20 போட்டியில் வெற்றிக்கு பின் இந்திய வீரர் அஸ்வின் முக்கியமான சில விஷயங்களை பேட்டியில் பகிர்ந்து கொண்டார்.
Recommended Video
நேற்று நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய வீரர் அஸ்வின் சிறப்பாக பவுலிங் செய்தார். 4 ஓவர் வீசிய அஸ்வின் 2 விக்கெட் எடுத்து வெறும் 23 ரன்கள் மட்டுமே கொடுத்தார். அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.
இந்த நிலையில் இந்திய அணியின் வெற்றிக்கு பின் அஸ்வின், கோச் டிராவிட் குறித்த சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

அஸ்வின்
அஸ்வின் அளித்த பேட்டியில், இது டி 20 போட்டி. மிகவும் ட்ரிக்கான ஒன்று. நீங்கள் எவ்வளவு மெதுவாக போடுகிறீர்களோ அதை வைத்துதான் ஆட்டத்தை கட்டுப்படுத்த முடியும். பிட்சில் அந்த அளவிற்கு உங்களுக்கு இடம் கிடைக்கும். அதே சமயம் நீங்கள் வேகமாக டாஸ் செய்து போட்டால் அது வேறு மாதிரியான பலன்களை கொடுக்கும். நீங்கள் எப்போது டாஸ் செய்ய வேண்டும், எப்போது வேகமாக போட வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

லென்த் முக்கியம்
இதில் பவுலிங் போடும் லென்த்தை மிஸ் செய்ய கூடாது. நியூசிலாந்து அடித்த ரன்கள் கொஞ்சம் குறைவாக இருந்தது. 180 அடித்து இருந்தால் ஆட்டம் கடுமையானதாக இருந்திருக்கும். நாங்கள் 15வது ஓவரிலேயே வெற்றிபெறுவோம் என்று நினைத்தோம். ஆனால் அதுதான் டி 20 போட்டி. எப்போது ஆட்டம் மாறும் என்று தெரியாது.

ராகுல்
பவர் பிளேவில் முதல்முறை நான் ஓவர் போட்டு இருக்கிறேன். பந்தின் வேகத்தை கண்டுபிடிப்பது கொஞ்சம் கடினமான வேலை. இதற்கு நான் கொஞ்சம் நேரம் எடுத்துக்கொண்டேன். பந்து போடும் வேகத்தை மாற்றுவதில்தான் சூட்சமம் அடங்கி இருக்கிறது. ஒரு பவுலர் வீசும் 24 பந்துகளையும் மிக கவனமாக வீச வேண்டும்.

டிராவிட்
அந்த 24 பந்துகளை நாம் ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி திட்டமிட்டு வீச வேண்டும். ராகுல் டிராவிட் இப்போதுதான் அணிக்குள் வந்து இருக்கிறார். அவருக்கான நேரத்தை கொடுக்க வேண்டும். அவரை இப்போதே எடை போட கூடாது. அவரின் கோச் எப்படி இருகிறது என்று இப்போதே கமெண்ட் செய்ய கூடாது.

மூச்சு விட நேரம் தாருங்கள்
அவருக்கு ரசிகர்கள் மூச்சு விடுவதற்கு இடம் கொடுக்க வேண்டும். அவர் ஏற்கனவே அண்டர் 19 அணியில் நிறைய மாற்றங்களை செய்துள்ளார். அண்டர் 19 அணியில் பல புரட்சிகளை செய்துள்ளார். அங்கு அவர் கண்டிப்புடன் இருந்துள்ளார். அவர் தனக்கு வரும் வாய்ப்புகளை எந்த நேரத்திலும் விட்டுக்கொடுக்க மாட்டார்.

பயிற்சி
அவர் நிறைய பயிற்சிகளை மேற்கொள்ள கூடியவர். நிறைய முன் தயாரிப்புகளை செய்ய கூடியவர். அவரின் வருகையால் மீண்டும் இந்திய அணியின் டிரெஸ்ஸிங் ரூமில் மகிழ்ச்சியை மீட்டு கொண்டு வர முடியும் என்று அஸ்வின் குறிப்பிட்டுள்ளார். ராகுல் டிராவிட் மீது நெட்டிசன்கள் பலர் பெரிய எதிர்பார்ப்பு வைத்துள்ளனர். அவர் உடனே அணியில் மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில்தான் டிராவிட் குறித்து இப்போது கமெண்ட் செய்ய வேண்டாம் என்று அவர் ரசிகர்களுக்கு கேட்டுக்கொண்டுள்ளார்.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications