இந்தியாவின் தலையெழுத்தை மாற்றப்போகும் சென்னை.. பலே வெள்ளையத்தேவா, பலே..!!
சென்னை: இந்திய அணுசக்தி துறையில் மிக முக்கியமான முன்னேற்றமாக, சென்னையில் உள்ள கல்பாக்கம் அணுசத்தி நிலையத்தில் உருவாக்கப்பட்ட 'ப்ரோடோடைப் ஃபாஸ்ட் ப்ரீடர் ரியாக்டர் (PFBR)' வெற்றிகரமாக செயல்பட்டு முக்கிய கட்டமான 'கிரிட்டிகல்' நிலையை எட்டியுள்ளது. இந்த சாதனைக்காக இந்திய விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
இந்த PFBR என்பது சாதாரண அணு உலை அல்ல. இதில் பயன்படுத்தும் எரிபொருளை விட அதிக அளவில் புதிய எரிபொருளை உருவாக்கும் திறன் கொண்ட ரியாக்டர். அதாவது, இது 'செல்ப் சஸ்டைனிங்' எனப்படும் வகையில், தானாகவே எரிபொருள் உற்பத்தி செய்யும் அமைப்பாக செயல்படும். இதனால், எதிர்காலத்தில் அணுசக்தி உற்பத்தி செலவை குறைக்கவும், நீண்டகால எரிபொருள் தேவையை பூர்த்தி செய்யவும் உதவும்.

சென்னை அருகே கல்பாக்கத்தில் அமைந்துள்ள இந்த 500 மெகாவாட் திறன் கொண்ட PFBR, முழுக்க முழுக்க இந்தியாவில் உருவாக்கப்பட்டது. இதை BHAVINI என்ற மத்திய அரசு நிறுவனம் இயக்குகிறது. இது இந்தியாவின் மூன்று கட்ட அணுசக்தி திட்டத்தில் இரண்டாவது கட்டத்தை தொடங்கும் முக்கிய படியாக கருதப்படுகிறது.
இந்த அணு உலையில், யுரேனியம் மற்றும் ப்ளூட்டோனியம் கலந்த 'MOX' (மிக்சட் ஆக்சைட்) எரிபொருளாக பயன்படுத்துகிறது. மேலும், இதன் குளிரூட்டியாக (கூலென்ட்) தண்ணீர் பதிலாக 'திரவ சோடியம்' பயன்படுத்தப்படுகிறது. இது அதிக வெப்பநிலையிலும் பாதுகாப்பாக செயல்பட உதவுகிறது.
அடுத்த முக்கியமான விஷயம் என்னவென்றால் தற்போது இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள பிற பிரஷரைஸ்டு ஹெவி வாட்டர் ரியாக்டர் (PHWR) உலைகளில் இருந்து வரும் பயன்படுத்தப்பட்ட எரிபொருளையும் (spent fuel) மீண்டும் பயன்படுத்தும் திறன் இந்த புதிய PFBR-க்கு உள்ளது.
மோடி வாழ்த்து
இந்த சாதனையை பிரதமர் மோடி 'இந்தியாவின் அணுசக்தி பயணத்தில் ஒரு முக்கிய திருப்புமுனை' என்று தனது டிவிட்டர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, இந்த PFBR செயல்பாட்டில் வந்ததும், இந்தியாவின் மூன்று கட்ட அணுசக்தி திட்டத்தின் இரண்டாவது கட்டம் அதிகாரப்பூர்வமாக தொடங்குகிறது என அறிவித்தார். மேலும் இதை இந்தியாவின் சிவில் நியூக்ளியர் ஜர்னி-யின் துவக்கம் என கூறுகிறார்.
மேலும், இந்த முன்னேற்றத்தின் மூலம் இந்தியாவில் அதிகமாக உள்ள தோரியம் (Thorium) வளங்களை பயன்படுத்தும் மூன்றாவது கட்டத்திற்கான அடித்தளத்தை இப்புதிய ப்ரோடோடைப் ஃபாஸ்ட் ப்ரீடர் ரியாக்டர் (PFBR) அமைக்கிறது. இந்தியா உலகில் மிகப்பெரிய தோரியம் வளம் கொண்ட நாடுகளில் ஒன்றாக இருப்பதால், இந்த திட்டம் நாட்டின் நீண்டகால எனர்ஜி பாதுகாப்புக்கு முக்கியமானதாகும்.
மொத்தத்தில், சென்னை கல்பாக்க அணுசக்தி நிலையத்தின் PFBR வெற்றி என்பது இந்தியாவின் எனர்ஜி பாதுகாப்புக்கு முக்கியமானதாகும். மேலும் இந்த PFBR வெற்றி என்பது நாட்டின் அறிவியல் திறன், பொறியியல் மேம்பாட்டுக்கு ஒரு பெரிய அடையாளமாக பார்க்கப்படுகிறது. இது நாட்டின் எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்வதோடு, உலக அளவில் இந்தியாவின் அணுசக்தி திறனை வெளிப்படுத்தும் ஒரு பெருமைமிக்க நிகழ்வாகவும் கருதப்படுகிறது.
-
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications