துண்டு போடும் ஓபிஎஸ்.. ‘இந்தியா’ கூட்டணியில் அழைப்பு? நெருப்பை பற்ற வைத்த பெங்களூர் புகழேந்தி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: "ஓ.பன்னீர்செல்வத்தை'இந்தியா' கூட்டணி அழைக்கும்" என ஓபிஎஸ் அணியின் கொள்கை பரப்புச் செயலாளர் புகழேந்தி பேசியிருப்பது அரசியல் அரங்கில் பரபரப்பைப் பற்ற வைத்துள்ளது.

சென்னை எழும்பூரில் உள்ள தனியார் ஹோட்டலில் 'நமது புரட்சித் தொண்டன்' நாளிதழ் வெளியீட்டு விழா பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், "நமது புரட்சித் தொண்டன்" நாளிதழை வெளியிட்டார். வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர், புகழேந்தி, மருது அழகுராஜ் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

India alliance will call O Panneerselvam: says Pugazhendhi

இந்த நிகழ்ச்சியில் பேசிய ஓபிஎஸ் அணியின் கொள்கை பரப்புச் செயலாளர் பெங்களூர் புகழேந்தி, "ஓ.பன்னீர்செல்வத்தை இந்தியாவும் அழைக்கும், 'இந்தியா' கூட்டணியும் அழைக்கும்" எனப் பேசினார். அவரது இந்தப் பேச்சு அரசியல் அரங்கில் பரபரப்பைப் பற்ற வைத்துள்ளது.

காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு 'இந்தியா' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. பீகார் மாநிலம் பாட்னாவிலும், கர்நாடக மாநிலம் பெங்களூரிலும் எதிர்க்கட்சிகள் கூட்டணி ஆலோசனை நடத்தியுள்ள நிலையில், அடுத்த கூட்டம் மும்பையில் விரைவில் நடைபெற உள்ளது. இந்தச் சூழலில் ஓபிஎஸ்ஸுக்கு 'இந்தியா' கூட்டணியில் இருந்து அழைப்பு வரும் எனக் கூறியுள்ளார் புகழேந்தி.

ஏற்கனவே, டெல்லியில் நடைபெற்ற பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி ஆலோசனைக் கூட்டத்திற்கு ஓபிஎஸ்ஸுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அதேசமயம், எடப்பாடி பழனிசாமிக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது. இதனால், பாஜக தலைமையால் ஓபிஎஸ் ஓரங்கட்டப்பட்டு விட்டார் என்ற ரீதியில் பேச்சுகள் எழுந்தன.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், என்.டி.ஏ கூட்டணி கூட்டத்திற்கு எனக்கு அழைப்பு வரவில்லை. அதனால் நான் செல்லவில்லை. அவர்களாக (பாஜக) முறித்துக் கொள்ளும் வரையில் நான் அந்தக் கூட்டணியில் தொடருவேன் எனக் கூறி இருந்தார்.

India alliance will call O Panneerselvam: says Pugazhendhi

மேலும், எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு இந்தியா என்று பெயர் வைத்துள்ளது பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது, " கூட்டணிக்கு பெயர் இந்தியா என்று வைத்து இருக்கிறார்கள். அது நல்ல தலைப்புதான். உள்ளபடியே அதை வரவேற்கிறோம்" எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் அணியின் முக்கிய நிர்வாகி புகழேந்தி, ஓபிஎஸ்ஸை 'இந்தியா'கூட்டணி அழைக்கும் எனப் பேசியிருப்பதன் மூலம், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக இடம்பெற்றுள்ள என்.டி.ஏ கூட்டணிக்கு எதிராக, திமுக அங்கம் வகிக்கும் 'இந்தியா' கூட்டணியில் ஓபிஎஸ் இணையப் போகிறாரோ என்ற கேள்விகள் வட்டமடிக்கத் தொடங்கியுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+