உலக சாதனை படைத்த சந்திரயான் 3.. முதல் தேசிய விண்வெளி தினத்தை கொண்டாட தயாராகும் இந்தியா!
சென்னை: நிலவின் தென்துருவத்தில் இந்தியாவின் இஸ்ரோ அனுப்பிய விக்ரம் லேண்டர் பத்திரமாக தரையிறங்கி உலக சாதனையை படைத்தது. இந்த தினத்தை மத்திய அரசு தேசிய விண்வெளி தினமாக அறிவித்திருந்தது. இந்நிலையில் வரும் 23ம் தேதி இந்தியா தனது முதல் தேசிய விண்வெளி தினத்தை கொண்டாட இருக்கிறது.
விண்வெளி துறையில் இந்தியாவுக்கு என தனிப் பெயரை உருவாக்கி கொடுத்தது சந்திரயான் 3 திட்டம்தான். இதுவரை நிலவின் தென் துருவத்தை எந்த நாட்டின் விண்கலமும் தொட்டது கிடையாது. ஆனால், முதல் முறையாக இந்தியா இந்த மகத்தான வரலாற்று சாதனையை படைத்தது. இந்த சாதனை ஒட்டுமொத்த மனித சமூகத்திற்குமான சாதனை என இஸ்ரோ கூறியுள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் 14ம் தேதியன்று நிலவுக்கு சந்திரயான் 3 விண்கலத்தை இஸ்ரோ அனுப்பியது. சந்திரயான் -3 விண்கலன் பூமியை 6 முறை பின்னர் ஆகஸ்ட் மாதம் 23ம் தேதியன்று நிலவின் தென் துருவத்தில் இறங்கி வரலாற்று சாதனையை படைத்தது. இதுவரை உலகின் எந்த ஒரு நாடும் நிலவின் தென் துருவத்தில் விண்கலனை தரையிறக்கியது கிடையாது.
நிலவில் ஆக்சிஜன், சல்பர், அலுமினியம், கால்சியம், அயர்ன், குரோமியம், டைட்டேனியம், மாங்கனீஸ், சிலிக்கான் உள்ளிட்ட தனிமங்கள் இருப்பதை சந்திரயான் 3 பிரக்யான் ரோவரில் இருந்த எல்ஐபிஎஸ் கருவி கண்டுபிடித்து சொன்னது. இந்தியாவுக்கு முன்னர் நிலவுக்கு ரஷ்யாவும், அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளும் விண்கலன்களை அனுப்பி ஆய்வு செய்திருந்தாலும் இஸ்ரோவின் பிரிக்யான் ரோவர்தான் முதல் முதலில் நிலவில் சல்பர் இருப்பதை கண்டுபிடித்தது. இது இஸ்ரோ படைத்த இரண்டாவது சாதனை.
அதேபோல டைட்டேனியம் கண்டுபிடித்திருப்பது நிலவின் தென் துருவத்தின் மீதான ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளது. அதாவது, இந்த தனிமம் உலகின் மிகவும் அரிதானது. பூமியில் வெறும் 0.63 சதவிகிதம் மட்டுமே இருக்கக்கூடிய தனிமம் இது. இதை கொண்டுதான் விமானங்கள் மற்றும் ராக்கெட்டுகள் உருவாக்கப்படுகின்றன. இரும்பை போல கனமாக இல்லாமல் லேசானதாக இருக்கும். ஆனால் இதன் உறுதி திறன் அபாரமானதாக இருக்கும். எனவே இந்த தனிமத்திற்கு பூமியில் டிமான்ட் அதிகம்.
சல்பரும் வெடி மருந்துகள் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. இதை கொண்டு மிக குறைந்த தூரம் செல்லும் ராக்கெட்டுகளையும் உற்பத்தி செய்ய முடியும். எதிர்காலத்தில் நிலவை காலணிப்படுத்த முயலும் போது இந்த தனிமங்கள் நிச்சயம் பயன்படும். இதையெல்லாம் கண்டுபிடித்து சொன்ன பின்னர் விக்ரம் லேண்டரும், பிரக்யான் ரோவரும் உறக்க நிலைக்கு சென்றன. நிலவில் இரவு நேரத்தில் மைனஸ் 200 டிகிரிக்கும் அதிகமாக குளிர் இருக்கும். எனவே உறக்க நிலைக்கு சென்ற ரோவரை மீண்டும் எழுப்ப முடியாமல் போனது.
இருப்பினும் சந்திரயான் 3 விண்கலன் 2023ம் ஆண்டு செய்த சாதனை, விண்வெளித்துறையில் இந்தியாவுக்கு என தனித்த அடையாளத்தை உருவாக்கியிருக்கிறது என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.
இந்த சாதனை நடந்து ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், சந்திரயான்-3க்கு வரலாற்று சிறப்பு மிக்க விண்வெளி விருது வழங்கப்பட்டிருக்கிறது. அதாவது சர்வதேச விண்வெளி கூட்டமைப்பால், 'உலக விண்வெளி விருது' வழங்கப்பட்டிருக்கிறது. இத்தாலியின் மிலனில் 75 வது சர்வதேச விண்வெளி மாநாட்டின் தொடக்க விழாவின் போது அக்டோபர் 14 அன்று விருது வழங்கும் விழா திட்டமிடப்பட்டுள்ளது.
அதேபோல நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டர் தரையிறங்கிய ஆக்ஸ்ட் 23ம் தேதியை இந்தியா, தேசிய விண்வெளி தினமாக அறிவித்திருக்கிறது. அதன்படி தனது முதல் தேசிய விண்வெளி தினத்தை இந்தியா வரும் 23ம் தேதி கொண்டாடுகிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications