ஊரடங்கால் அடங்காத கொரோனா.. இந்தியாவில் 5 லட்சம் கேஸ்கள்! சென்னை உட்பட 10 நகரங்களில் 54.47% நோயாளிகள்
சென்னை: இந்தியாவின் மொத்த கொரோனா வைரஸ் கேஸ்கள் வெள்ளிக்கிழமை 5 லட்சத்தை தாண்டியுள்ளன. 17,000 க்கும் அதிகமான கேஸ்கள் நேற்று ஒரே நாளில் பதிவாகியுள்ளது.
5,000 க்கும் மேற்பட்ட புதிய கேஸ்களுடன் மகாராஷ்டிரா மொத்தம் 1,52,765 என்ற அளவில் உள்ளது. அதே நேரத்தில் மேற்கு வங்கம் மற்றும் தமிழகமும், தங்களது மிகப்பெரிய ஒற்றை நாள் எண்ணிக்கையை பதிவு செய்துள்ளன.
இந்தியாவில், நேற்று மொத்த கொரோனா நோயாளிகள் இறப்பு எண்ணிக்கை 407ஆக இருந்தது. எனவே இந்தியாவில் கொரோனா இறப்பு எண்ணிக்கை 15,301 ஆக உயர்ந்தது.

இந்தியா 4வது இடம்
தொடர்ச்சியாக 7வது நாளாக இந்தியா 14,000 க்கும் மேற்பட்ட கேஸ்களை பதிவு செய்தது. அமெரிக்கா, பிரேசில் மற்றும் ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக அதிகப்படியான கொரோனா நோயாளிகளை கொண்ட நாடாக இந்தியா உள்ளது. மகாராஷ்டிராவில் நேற்று 5,024 கோவிட் -19 கேஸ்கள், 175 இறப்புகள் பதிவாகியுள்ளன. மாநிலத்தில் 17.52 சதவீதம் பாசிட்டிவ் வீதமும், இறப்பு விகிதம் 4.65 சதவீதமும் உள்ளது. மும்பையின் மொத்த கொரோனா வைரஸ் கேஸ் எண்ணிக்கை நேற்று 72,175 ஐ எட்டின.

டெல்லி நிலவரம்
மருத்துவமனை படுக்கைகளின் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள டெல்லி, கடந்த 24 மணி நேரத்தில் 3,460 கொரோனா வைரஸ் கேஸ்களை பதிவு செய்துள்ளது. இது இன்னமும் மருத்துவத் துறை மீது பளுவை அதிகரித்துள்ளது.

டிஸ்சார்ஜ்
கொரோனா வைரஸ் கேஸ்கள் டெல்லியில், வெள்ளிக்கிழமை 77,240 ஐ எட்டியது. கடந்த 24 மணி நேரத்தில் 2,326 பேர் நோயால் குணப்படுத்தப்பட்டனர், இது மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கையை 47,091 என்ற அளவுக்கு உயர்த்தியுள்ளது.
Recommended Video

சென்னை நிலவரம்
டெல்லி, சென்னை, தானே, மும்பை, பால்கர், புனே, ஹைதராபாத், ரங்கா ரெட்டி, அகமதாபாத் மற்றும் ஃபரிதாபாத் ஆகிய 10 நகரங்கள் மற்றும் மாவட்டங்கள் நாட்டின் மொத்த கொரோனா கேஸ்களில் 54.47 சதவீத நோயாளிகளை தங்கள் வசம் வைத்துள்ளன. மார்ச் 24ம் தேதி முதல் தொடர்ச்சியாக இந்தியா லாக்டவுன் செய்யப்பட்ட நிலையிலும், இப்படி கேஸ்கள் அதிகரிப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications