மோடியின் ஒரே ஒரு மூவ்.. கதறிய மேற்கு உலகம்.. அரிசியால் அல்லோகலப்பட்ட நாடுகள்.. ஷாக் ரிப்போர்ட்
சென்னை: இந்தியாவின் அரிசி ஏற்றுமதி தடை காரணமாக உலக அளவில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட தொடங்கி உள்ளது. இதனால் அரிசி விலையும் உயர்ந்து உள்ளது.
அதன்படி ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் (FAO) அரிசி விலைக் குறியீடு ஜூலை மாதத்தில் 2.8 சதவிகிதம் உயர்ந்துள்ளது என்று கூறப்பட்டு உள்ளது. ஒரு மாதத்திற்கு முன்பு இருந்த விலைக் குறியீடு கிட்டத்தட்ட 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

முக்கிய ஏற்றுமதி நாடுகளில் விலைகள் உயர்ந்துள்ளது. இது போக ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தும் இந்தியாவின் நடவடிக்கையால் இந்த விலை ஏற்றம் ஏற்பட்டு உள்ளது. FAO உணவு விலைக் குறியீடு உலகளவில் வர்த்தகம் செய்யப்படும் உணவுப் பொருட்களின் சர்வதேச விலைகளில் மாதாந்திர மாற்றங்களைக் கண்காணிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
விலை ஏற்றம்: FAO இன் அனைத்து அரிசி விலைக் குறியீட்டை பற்றி வெளியான ரிப்போர்ட்டில், ஜூலை மாதத்தில் அரிசி விலை சராசரியாக 129.7 புள்ளிகளாக இருந்தது. அதற்கு முந்தைய மாதத்தில் 126.2 புள்ளிகளாக இருந்தது என்று தெரிவித்துள்ளது. கிட்டத்தட்ட மூன்றரை புள்ளிகள் இதனால் உயர்ந்துள்ளது.
FAO இன் படி, இந்த வருட ஜூலை புள்ளிகள் கடந்த ஆண்டின் ஜூலையில் பதிவான 108.4 புள்ளிகளை விட கிட்டத்தட்ட 19.7 சதவீதம் அதிகமாக உள்ளது. செப்டம்பர் 2011 க்குப் பிறகு மிக அதிகமான புள்ளிகளை இது எட்டி உள்ளது. உலகத்திலேயே அதிகப்படியான அரிசியை உற்பத்தி செய்யும் நாடு இந்தியா.

130 மில்லியன் டன் அரிசி உற்பத்தி செய்யும் இந்தியா அதில் சுமார் 20 மில்லியன் அளவுக்கு ஏற்றுமதி செய்கிறது. இந்த நிலையில்தான் இந்தியாவில் அரிசி ஏற்றுமதி தடை செய்யப்பட்டு உள்ளது. உலக அரிசி வர்த்தகத்தில் இந்தியாவின் பங்களிப்பு 40 சதவீதத்துக்கு மேல் உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் அரிசி தடையால் உலக அளவில் அரிசி விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.
தடை: இந்தியாவின் அரிசி ஏற்றுமதி தடை காரணமாக உலக அளவில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட தொடங்கி உள்ளது. இதனால் அரிசி விலையும் உயர்ந்து உள்ளது. அரிசி மட்டுமின்றி ஒட்டுமொத்த உலக உணவு விலைக் குறியீடு ஜூலை மாதத்தில் உயர்ந்துள்ளது.
FAO இன் படி, உலக உணவு விலைகள் ஜூலை மாதத்தில் சராசரியாக 123.9 புள்ளிகளாக இருந்தன, இது முந்தைய மாதத்தை விட 1.3 சதவீதம் அதிகமாகும், அதே சமயம் ஜூலை 2022 அளவை விட 11.8 சதவீதம் குறைவாக உள்ளது. மொத்தமாக உணவு விலை குறைந்தாலும் கூட ஒட்டுமொத்த உலக உணவு விலைக் குறியீடு ஜூலை மாதத்தில் உயர்ந்துள்ளது.
இந்திய அரசாங்கம் ஜூலை 20 அன்று பாசுமதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்தது, உள்நாட்டு விநியோகத்தை அதிகரிக்கவும், வரவிருக்கும் பண்டிகை காலத்தில் சில்லறை விலையை கட்டுக்குள் வைத்திருக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் காரணமாகவே விலை ஏற்றம் ஏற்பட தொடங்கி உள்ளது.
இந்த விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த, தடையை நீக்க வேண்டும் என்று ஐஎம்எப் இந்திய அரசிடமும் கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications