"நீங்கள் தோற்கவில்லை சித்தார்த்தா".. இளைஞர்களின் மீட்டிங் ஸ்பாட்டான காபி டே கடைகள்!
Recommended Video
சென்னை: பெருநகரங்களில் ஐடி நிறுவன ஊழியர்கள், காதலர்கள், இளைஞர்களின் மீட்டிங் ஸ்பாட்டாக காபி டே கடைகள் செயல்பட்டு வருகின்றன. இத்தகைய எழுச்சிக்கு சித்தார்த்தாவின் உழைப்பே காரணம் ஆகும்.
கஃபே காபி டே நிறுவனர் சித்தார்த்தா, தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக நேத்ராவதி ஆற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
1996-ஆம் ஆண்டு பெங்களூரில் முதல்முறையாக கஃபே காபி டே நிறுவனத்தை தொடங்கினார். தொடர்ந்து இந்தியா முழுவதும் 1000-க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன. பொதுவாக இளைஞர்கள், காதலர்கள் சந்திப்பதற்கு எங்காவது உணவகத்திற்கு செல்வது வழக்கம்.

சாதாரண காபி
ஆனால் அந்த நடைமுறையை மாற்றி காபி டே கடையை திறந்தார் சித்தார்த்தா. கிட்டதட்ட தனது ஒவ்வொரு கடைகளையும் இளசுகளின் மீட்டிங் ஸ்பாட்டாகவே மாற்றியதை யாராலும் மறுக்க முடியாது. இங்கு சாதாரண காபி முதல் வெளிநாட்டைச் சேர்ந்த அனைத்து வகையான காபிகளும் கிடைக்கும்.

50-க்கும் மேற்பட்ட கிளைகள்
பெருநகரங்களான சென்னை, பெங்களூர், மும்பை, டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட இடங்களில் ஏராளமான ஐடி நிறுவனங்கள் இருக்கும். கடும் பணிச்சுமைக்கு மத்தியில் வேலை பார்க்கும் ஊழியர்கள் ரிலாக்ஸ் செய்வது காபி டே போன்ற இடங்களில்தான் என்பது மறுப்பதற்கில்லை. சென்னையில் மட்டுமே 50-க்கும் மேற்பட்ட கிளைகள் இருக்கின்றன.

வெரைட்டிகள்
காபி டேவுக்கு சென்றால் ஐ ஓபனர் எஸ்பிரஸ்ஸோ, கிளாசிக் கப்புசினோ, பில்டர் காபி, கபே லடே, இன்வர்டட் கப்புசினோ, டாப்பி கப்புசினோ, வெண்ணிலா கப்புசினோ, டாப்பி லடே, வெண்ணிலா லடே, மச்சியாடோ, கபே அமெரிக்கனோ, கபே மோச்சா, ஆஸ்டெக் காபி, எத்தியோபியன் காபி, டிரோபிக்கல் ஐஸ்பெர்க், வேகன் ஷேக், காபே பிராப்பி, டாப்பி பிராப்பி, டார்க் பிராப்பி, டெவில்ஸ் ஓன், காப்பி நிர்வானே, ரஸமலாய் ஸ்மூத்தி, ஹாட் கோர்மெட் கோகோ, கிரன்சி பிராப்பி, கோல்ட் கோகோ லடே ஆகிய வெரைட்டிகள் உள்ளன.

ஸ்னாக்ஸ்
மேலும் டீ வகைகளில் மசாலா சாய், அஸ்ஸாம் டீ, கிரீன் டீ, டார்ஜிலிங் டீ, ஐஸ்டு போமோகிரேனேட் லெமன், கிளாசிக் லெமனேடு, கூல் ப்ளூ, டென்டர் கோகோனட் லெமனேட், சுகர்கேன் ரீபிரஸ்ஸெர், வாலட் பிரன்ட்லி, கடாக் சாய், மைட்டி மஞ்சர் உள்ளிட்டவைகளில் பர்கர், டெசர்ட்கள், கேக்குகளும் கிடைக்கும்.

வெற்றிகரமான நிறுவனம்
இது காபி டே கடைகளில் கிடைக்கும் மிகப் பெரிய லிஸ்டில் கொஞ்சம்தான். இன்னும் ஏராளமான காபி வகைகள் இருக்கின்றன. இது போல் விதவிதமான காபிகளை சுவைப்பதற்காகவே காபி டேவுக்கு இளசுகள் செல்கின்றனர். இதற்கு முற்றிலும் காரணம் சித்தார்த்தாவின் கடும் உழைப்பு என்பதை தவிர வேறென்னவாக இருக்க முடியும். உழைப்பில்லாமலா ஆசியாவின் மிகப் பெரிய காபி நிறுவனத்தை நடத்தி வருகிறார்? உழைப்பும், விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் இருந்தால் யாருடைய உதவியும் இல்லாமல் தனிப்பட்ட முறையில் ஒரு சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கலாம் என்பதற்கு சித்தார்த்தா ஒரு உதாரணமாவார். ஆயிரக்கணக்கானோருக்கு வேலை கொடுத்த நீங்கள் தோற்கவில்லை சித்தார்த்தா.
-
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது!












Click it and Unblock the Notifications