ஈரானிடம் இருந்து தப்பிக்க இந்தியாவிடம் ஆயுதம் வாங்கும் UAE.. 'இந்த' 2 ஏவுகணைக்கு தான் டிமாண்ட்!

Subscribe to Oneindia Tamil

இந்தியா தனது முக்கிய பாதுகாப்பு அமைப்புகளை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு (யுஏஇ) விற்பனை செய்யும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. இந்தியாவில் சொந்தமாக தயாரிக்கப்பட்ட பிரம்மோஸ் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணை மற்றும் ஆகாஷ்தீர் வான் பாதுகாப்பு அமைப்புகளை வாங்குவதற்காக ஐக்கிய அரபு அமீரக அரசு, இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

ஈரானுடனான சமீபத்திய போரில் யுஏஇ தீவிர தாக்குதலுக்கு உள்ளானது. இதைத் தொடர்ந்து, தனது பாதுகாப்பு திறனை விரைவாக அதிகரிக்க யுஏஇ முயற்சி செய்து வருகிறது. குறிப்பாக, தனது நாட்டில் உற்பத்தி செய்யப்படும் எரிபொருள் ஏற்றுமதிக்கு முக்கியமான ஹோர்முஸ் நீரிணையை பாதுகாக்க விரும்புகிறது.

BrahMos Missile

இந்த நிலையில், இந்தியாவின் மேம்பட்ட ஆயுத அமைப்புகளில் யுஏஇ ஆர்வம் காட்டியுள்ளது. இது இந்தியாவுக்கு பெரிய ஏற்றுமதி வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவில் தயாரிக்கப்படும் ஆயுதங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யும் திட்டத்தில் மத்திய அரசும், அரசு நிறுவனங்களும் மிகவும் ஆர்வமாக இருக்கும் வேளையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் வரவு ஜாக்பாட் ஆக மாறியுள்ளது.

பிரம்மோஸ் மற்றும் ஆகாஷ்தீர் பற்றி

பிரம்மோஸ் ஏவுகணை இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து உருவாக்கிய உலகின் வேகமான க்ரூஸ் ஏவுகணைகளில் ஒன்று. இது நிலம், கடல் மற்றும் வானத்தில் இருந்து ஏவ முடியும்.

ஆகாஷ்தீர் என்பது பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் உருவாக்கிய முழு தானியங்கி வான் பாதுகாப்பு அமைப்பு ஆகும். இது இந்திய ராணுவத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது.

பேச்சுவார்த்தை எந்த நிலையில் உள்ளது?

இந்தியா மற்றும் யுஏஇ இடையேயான பேச்சுவார்த்தை ஆரம்ப கட்டத்தில் இருந்தாலும், வேகமாக முன்னேறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. யுஏஇ தனது ஆயுத கொள்முதலை பல்வகைப்படுத்த முயற்சித்து வருகிறது.

இதற்கு முன் யுஏஇ தென் கொரியாவுடன் 35 பில்லியன் டாலர் மதிப்பிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதி துறைக்கு இது ஒரு முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. அடுத்த சில மாதங்களில் இந்த பேச்சுவார்த்தை எப்படி முடிவுக்கு வருகிறது என்பதை இரு நாடுகளும் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+