விண்ணில் பாய்ந்தது இந்தியாவின் முதல் ரீயூசபிள் ஹைப்ரிட் ராக்கெட்! பாராசூட்டில் மீண்டும் திரும்பும்!
சென்னை: இந்தியாவின் முதல் ரீயூசபிள் ஹைப்ரிட் ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்பட்டது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ரீயுசபிள் ஹைப்ரிட் ராக்கெட்டான RHUMI 1, 3 சோதனை செயற்கைக்கோள்களுடன் மாமல்லபுரம் அருகே திருவிடந்தை கடற்கரையில் இருந்து இன்று காலை 7 மணியளவில் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
தமிழ்நாட்டைச் சேர்த்த ஸ்டார்ட் அப் நிறுவனமான ஸ்பேஸ் ஸோன் என்ற நிறுவனம், மீண்டும் பயன்படுத்தப்படும் வகையிலான சிறிய ராக்கெட்டை உருவாக்கி உள்ளது. ஸ்பேஸ் ஸோன் இந்தியா மார்ட்டின் குழுமத்துடன் இணைந்து மறுபயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் 'மிஷன் ரூமி 2024' திட்டத்தின் கீழ் RHUMI 1 என்ற ராக்கெட்டை உருவாக்கியது.

இந்த ரீயூசபிள் ஹைப்ரிட் ராக்கெட் இன்று சென்னை அருகே மாமல்லபுரம், திருவிடந்தையில் இருந்து விண்ணில் ஏவப்பட்டு உள்ளது. ரீயூசபிள் ஹைப்ரிட் ராக்கெட்டான RHUMI 1, 3 சோதனை செயற்கைக்கோள்களுடன் மாமல்லபுரம் அருகே திருவிடந்தை கடற்கரையில் இருந்து வானில் ஏவப்பட்டது.
3.50 மீட்டர் உயரம் கொண்ட இந்த ராக்கெட் வானில், 80 கி.மீ. உயரத்தில் பறக்கக்கூடிய திறன் கொண்டது. மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டால், ஒரே ராக்கெட்டை பயன்படுத்தி, பல முறை செயற்கைக்கோளை ஏவலாம். இதனால் செலவு மிச்சமாகும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
மொபைல் லாஞ்சரைப் பயன்படுத்தி இந்த ராக்கெட் இன்று விண்னில் ஏவப்பட்டது. இது 3 கியூப் செயற்கைக் கோள்கள் மற்றும் 50 பி.ஐ.சி.ஓ செயற்கைக் கோள்களை துணை சுற்றுப் பாதைக்கு கொண்டு சென்று நிலைநிறுத்துகிறது.
மொத்தம், 60 - 80 கிலோ எடையிலான இந்த சோதனை ராக்கெட்டில், 'நைட்ரஸ் ஆக்சைடு' உள்ளிட்ட எரிபொருள்கள் நிரப்பப்பட்டுள்ளன. இந்த ராக்கெட்டில் செல்லும் 3 செயற்கைக்கோள்கள், புறஊதா கதிர் வீச்சு, காமா கதிர் வீச்சு, காற்றின் தரம், ராக்கெட் செல்லும்போது ஏற்படும் அதிர்வு உள்ளிட்ட தகவல்களை சேகரிக்கும்.

செயற்கைக்கோள்களை ஏவிய பின் மீண்டும் பூமிக்கு திரும்பும் வகையில் ராக்கெட் தயாரிக்கப்பட்டுள்ளது. ராக்கெட்டின் சில பாகங்கள் தவிர, முக்கிய பாகம், பாராசூட் வாயிலாக மீண்டும் பூமிக்கு திரும்பும். அதனை எடுத்து சிறிய மாற்றங்கள் செய்து, மீண்டும் பயன்படுத்தலாம்.
விண்வெளி கண்டுபிடிப்புகளில், உலகளாவிய அளவில் முன்னணி இடத்திற்கு, இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது. இதற்கு, நிலையான மற்றும் செலவு குறைந்த தீர்வுகளின் தேவை மிகவும் அவசியம். அதன்படி, மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டால், ஒரே ராக்கெட்டை பயன்படுத்தி, பல முறை செயற்கைக்கோளை ஏவலாம். இதனால் செலவு மிச்சமாகும் எனக் கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications