பெட்ரோல் 1 லிட்டர் வெறும் 82 ரூபா.. மத்திய அரசு அறிமுகம் செய்த E85 வகை.. உங்கள் வண்டியில் ஊற்றலாமா?
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கவும், சுற்றுச்சூழல் மாசைக் கட்டுப்படுத்தவும் மத்திய அரசு தற்போது ஒரு மிக முக்கியப் நடவடிக்கையைக் கையில் எடுத்துள்ளது. பெட்ரோலில் 80 முதல் 85 சதவீதம் வரை எத்தனால் (Ethanol) கலக்கப்பட்ட புதிய E85 என்ற மாற்று எரிபொருளை, மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி டெல்லியில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்துள்ளார்.
இந்தியாவில் ஃபிளெக்ஸ் ஃபுயல் (Flex-Fuel) எனப்படும் மாற்று எரிபொருள் வாகனப் போக்குவரத்தை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கில் இந்த மெகா திட்டம் அமலுக்கு வந்துள்ளது.

மாருதி வேகன்ஆர் மற்றும் ஸ்பிளெண்டர்
மத்திய அரசின் இந்த அதிரடி அறிவிப்புக்கு இணையாக, இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களான மாருதி சுசூகி (Maruti Suzuki) மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) ஆகிய நிறுவனங்கள் தங்களின் அதிகம் விற்பனையாகும் மாடல்களான வேகன்ஆர் (WagonR) கார் மற்றும் ஸ்பிளெண்டர் (Splendor) பைக்கின் புதிய ஃபிளெக்ஸ் ஃபுயல் வேரியண்ட்டுகளை (Flex-Fuel Variants) ஏற்கனவே சந்தையில் அறிமுகம் செய்து உற்பத்தியைத் தொடங்கியுள்ளன.
3 வருடத்தில் பணம் வாபஸ்
இந்த எத்தனால் வாகனங்களின் பயன்பாடு குறித்துப் பேசிய அமைச்சர் பூரி, "ஃபிளெக்ஸ் ஃபுயல் தொழில்நுட்பம் என்பது சாமானிய நடுத்தர மக்களுக்குப் பொருளாதார மற்றும் நிதியியல் ரீதியாகப் பெரும் லாபத்தைத் தருவதாக இருக்க வேண்டும். தற்போது சந்தையில் இருக்கும் E20 மற்றும் சாதாரண பெட்ரோல் விலையை விட இந்த E85 எரிபொருளின் விலை மிகக் குறைவாகவே நிர்ணயம் செய்யப்படவுள்ளது. இதன் மூலம் கிடைக்கும் எரிபொருள் சேமிப்பைக் கணக்கிட்டால், ஒரு நுகர்வோர் புதிய ஃபிளெக்ஸ் ஃபுயல் வாகனத்தை வாங்குவதற்காகச் செலவழித்த கூடுதல் தொகையை அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் முழுமையாகத் திரும்பப் பெற்றுவிட முடியும்" என்ற ஆய்வுகளை கூறுவதாக விளக்கியுள்ளார்.
வரி தள்ளுபடி
பொதுமக்கள் மத்தியில் எத்தனால் எரிபொருள் குறித்து நிலவி வந்த பல்வேறு சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, மத்திய அரசின் திங்க் டேங்க் அமைப்பான நிதி ஆயோக் (NITI Aayog) ஒரு மிக முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. E85 போன்ற உயர் எத்தனால் கலவை கொண்ட எரிபொருளில் இயங்கும் ஃபிளெக்ஸ் ஃபுயல் வாகனங்களை (FFVs) அதிகாரப்பூர்வமாக பூஜ்ஜிய உமிழ்வு வாகனங்கள் (Zero-Emission Vehicles) என்று நிதி ஆயோக் வகைப்படுத்தியுள்ளது. இதற்காகப் புதிய வாகனங்களுக்குச் சாலை வரிச் சலுகைகள் (Road Tax Concessions) வழங்கவும் கொள்கை ரீதியாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
உங்கள் வாகனத்தில் E85 எத்தனால் ஊற்றலாமா?
இந்த செய்தின் மிக முக்கியமான பகுதி இதுதான்; சாமானிய மக்கள் அனைவரும் எளிதில் புரிந்துகொள்ள வேண்டிய உண்மை என்னவென்றால், இந்த E85 எரிபொருளை நாம் அனைவரும் தற்போதைய சாதாரண வண்டிகளில் பயன்படுத்த முடியாது. ஏனெனில், E85 எரிபொருளில் 85 சதவீதம் எத்தனால் கலந்துள்ளதால், அதைத் தாங்கக்கூடிய பிரத்யேக இன்ஜின் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஹார்டுவேர் (Upgraded Hardware) கொண்ட ஃபிளெக்ஸ் ஃபுயல் வாகனங்களில் மட்டுமே இதனை ஊற்ற வேண்டும்.
தற்போதைய சாதாரண கார் அல்லது பைக்கில் இந்த E85 எரிபொருளை ஊற்றினால், அது வண்டியின் எரிபொருள் குழாய்களைக் (Fuel Lines) அரித்து, ரப்பர் சீல்களைப் பாதித்து, ஒட்டுமொத்த இன்ஜினையும் முற்றிலும் செயலிழக்கச் செய்துவிடும். தற்போது இந்தியாவில் சாதாரண வண்டிகளுக்காக 20 சதவீதம் எத்தனால் கலக்கப்பட்ட E20 பெட்ரோல் மட்டுமே நாடு முழுவதும் விற்கப்படுகிறது. எனவே, இனிவரும் காலங்களில் நீங்கள் மாருதி வேகன்ஆர் ஃபிளெக்ஸ் ஃபுயல் போன்ற பிரத்யேக இன்ஜின் கொண்ட புதிய மாடல் வண்டிகளை வாங்கினால் மட்டுமே இந்த மலிவான, மாசு இல்லாத E85 எரிபொருளைப் பயன்படுத்திப் பயன்பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ரீடைல் விற்பனை
E85 எரிபொருள் சில்லறை விற்பனைக்கு (Retail Sale) கிடைக்கிறது. இந்திய அரசு பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுடன் இணைந்து, உலக சுற்றுச்சூழல் தினமான 5 ஜூன் 2026 முதல் இதன் சில்லறை விற்பனையைத் தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக, இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 50 எரிபொருள் நிலையங்களில் E85 விநியோகிக்கப்படுகிறது. டெல்லி-NCR,மும்பை, புனே, நாக்பூர் ஆகிய நகரங்களில் சில பெட்ரோல் பங்களில் மட்டும் விற்கப்படுகிறது.
விற்பனை விலை
டெல்லியில் E85 எரிபொருள் ஒரு லிட்டர் ரூ.82.12 என்ற விலையில் விற்கப்படுகிறது. இது சாதாரண E20 பெட்ரோலை விட லிட்டருக்கு ரூ.20 வரை மலிவானது என்பதால், வாகன ஓட்டிகளுக்கு பெரும் பணச்சேமிப்பைத் தரும்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications