கிட்டத்தட்ட ரூ. 25 குறைவு! ஆனால் தப்பி தவறியும் "இந்த" பெட்ரோலை உங்க காரில் போடாதீங்க! ஏன் தெரியுமா
சென்னை: இந்தியாவின் எத்தனால் கலப்புத் திட்டத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக, கடந்த வாரம் E85 எரிபொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை லிட்டருக்கு ரூ. 82.12 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சாதாரணப் பெட்ரோல் சென்னையில் லிட்டர் ரூ. 108க்கு விற்கப்படும் நிலையில், இந்த ரூ.26 விலை வித்தியாசம் வாகன ஓட்டிகளை ஈர்க்கும் வகையில் உள்ளது. ஆனால், இந்த எரிபொருளை நாம் அனைவரும் பயன்படுத்த முடியாதாம். இது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்.
சாதாரணப் பெட்ரோலில் தற்போது 20% வரை எத்தனால் கலக்கப்படுகிறது. இதைத் தான் E20 பெட்ரோல் என்கிறார்கள். ஆனால், E85 என்பது முற்றிலும் மாறுபட்டது. இதில் 85% எத்தனால் மற்றும் வெறும் 15% பெட்ரோல் மட்டுமே கலந்திருக்கும். எத்தனால் அளவு அதிகமாக இருப்பதால், இதைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட சிறப்பு இன்ஜின்கள் மட்டுமே இந்த எரிபொருளில் இயங்க முடியும்.

பயன்படுத்தலாமா
உங்கள் காரில் இதைப் பயன்படுத்தலாமா என்று கேட்டால்.. பெரும்பாலான கார்களில் பயன்படுத்த முடியாது என்பதே பதிலாகும். இந்தியாவில் தற்போது ஓடிக்கொண்டிருக்கும் பெரும்பாலான பெட்ரோல் கார்கள் E85 எரிபொருளுக்கு ஏற்றவை அல்ல. பல நிறுவனங்கள் தங்கள் கார்களை E20 பெட்ரோலில் இயங்கும் வகையில் மேம்படுத்தியிருந்தாலும், அவை E85-க்கு செட் ஆகாது. சாதாரண காரில் E85 எரிபொருளை நிரப்பினால், அது இன்ஜினின் பாகங்களை அரிப்பதோடு, இயந்திரக் கோளாறுகளை ஏற்படுத்தும்.
E85 எரிபொருளைப் பயன்படுத்த உங்கள் வாகனம் "பிளெக்ஸ்-பியூயல்" (Flex-Fuel) வசதி கொண்டதாக இருக்க வேண்டும். இந்த வகை வாகனங்கள் பெட்ரோல் முதல் E85 வரை எந்த விகிதத்தில் எத்தனால் கலந்திருந்தாலும், அதற்கு ஏற்ப இன்ஜின் செயல்பாட்டைத் தானாகவே மாற்றியமைத்துக் கொள்ளும். உதாரணமாக, மாருதி சுஸுகி நிறுவனம் தனது 'வேகன் ஆர்' காரில் பிளெக்ஸ்-பியூயல் மாடலை கொண்டு வந்துள்ளது.
கூட்டி கழித்து பாருங்க
E85 பெட்ரோலை விட 20% விலை குறைவாகத் தெரிந்தாலும், கணக்குப் போட்டுப் பார்த்தால் அது நமக்கு பெரிய லாபம் எல்லாம் இல்லை. இதற்குக் காரணம் 'எரிசக்தி அடர்த்தி'. பெட்ரோலை விட எத்தனாலில் ஆற்றல் குறைவு. எனவே, ஒரு லிட்டர் பெட்ரோலில் கார் செல்லும் தூரத்தை விட, ஒரு லிட்டர் E85ல் கார் செல்லும் தூரம் மிகக் குறைவாக இருக்கும்.சர்வதேச ஆய்வுகளின்படி, E85 எரிபொருளைப் பயன்படுத்தும்போது மைலேஜ் 25% முதல் 30% வரை குறையும்.
ஒரு சிறிய கணக்கு
பெட்ரோல் கார் உங்களுக்கு லிட்டருக்கு 15 கி.மீ மைலேஜ் தருகிறது என்றால் E85 கார் லிட்டருக்கு, 25% குறைந்து 11.25 கி.மீ மட்டுமே மைலேஜ் கிடைக்கும். எனவே, கூட்டிக் கழித்துப் பார்க்கும்போது இரண்டுமே கிட்டத்தட்ட ஒரே அரளவு தான் செலவு வைக்கும்.
மேலும், நவீன கார்களில் உள்ள ஆக்சிஜன் சென்சார்கள் மற்றும் கேட்டலிடிக் கன்வெர்ட்டர் ஆகியவை பெட்ரோல் புகையை ஆய்வு செய்ய வடிவமைக்கப்பட்டவை. E85 புகையினால் இவை குழப்பமடையும். மேலும், எத்தனால் ஒரு கரைப்பான் போலச் செயல்படும். இது சாதாரண கார்களில் உள்ள ரப்பர் குழாய்கள், பிளாஸ்டிக் பாகங்கள் மற்றும் சீல்களை மெல்ல மெல்ல அரித்துவிடும் ஆபத்தும் இருக்கிறது.
என்ன செய்ய வேண்டும்
உங்கள் கார் பிளெக்ஸ்-பியூயல் வாகனம் இல்லை என்றால், தவறுதலாக E85 நிரப்பினால் என்ன செய்ய வேண்டும் என்ற சந்தேகம் வரலாம். அதுபோன்ற சூழல்களில் காரை ஸ்டார்ட் செய்ய வேண்டாம். குறைந்த அளவு, உதாரணமாக 5 லிட்டர் நிரப்பியிருந்தால், மீதி டேங்க் முழுவதையும் சாதாரண உயர்தர பெட்ரோலால் நிரப்பவும். இது எத்தனாலின் வீரியத்தைக் குறைக்கும். அதேநேரம் அதிக அளவு நிரப்பியிருந்தால் காரை ஆன் செய்ய வேண்டாம். உடனடியாக ஒரு மெக்கானிக்கை அழைத்து டேங்கில் உள்ள எரிபொருளை முழுமையாக வெளியேற்றுவதே உங்கள் காரின் இன்ஜினை காப்பாற்ற ஒரே வழி.
E85 என்பது சுற்றுச்சூழலுக்கு உகந்த, இறக்குமதிச் செலவைக் குறைக்கும் ஒரு முயற்சி என்றாலும், அது சாதாரணப் பெட்ரோல் கார்களுக்கு ஏற்றதல்ல. உங்கள் கார் 'Flex-Fuel' கார் என்று உறுதிப்படுத்தப்பட்டால் மட்டுமே இந்த எரிபொருளைப் பயன்படுத்துங்கள்.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications