ஸ்கெட்ச் போட்ட ‘ரா’..ஆறப் போட்டு பாகிஸ்தானை பந்தாடிய இந்தியா! இனிமே தான் எல்லாமே..மேஜர் மதன் கணிப்பு
சென்னை: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் இந்தியா மீது பாகிஸ்தான் எதிர் தாக்குதல் நடத்தினால் கராச்சி நாகூர் நகரங்கள் தீ பற்றி எரியும் என்றும், பத்து மடங்கு பாகிஸ்தானுக்கு அடி விழும் என எச்சரித்திருக்கிறார் ஓய்வு பெற்ற மேஜர் மதன்குமார்.
ஜம்மு காஷ்மீரின் பகல் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது ராணுவ உடையில் வந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திவிட்டு தப்பினர். இது தொடர்பான விசாரணையில் அவர்கள் லஷ்கர் - இ - தொய்பாவின் டிஆர்எஃப் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.
மேலும் தாக்குதலில் ஈடுபட்ட ஹாசீம் மூசா என்ற தீவிரவாதி பாகிஸ்தானின் சிறப்பு பாதுகாப்பு படையில் பாரா கமெண்ட்டாக பணியாற்றி லஸ்கர் -இ- தொய்பா அமைப்பில் இணைந்தது தெரியவந்தது. இதனால் இந்தியா எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

அதே நேரத்தில் இந்தியாவில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெறும் என அறிவிக்கப்பட்டதால் தாக்குதல் நடத்த தாமதமாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்தியா தெரிவித்திருக்கிறது.
இந்தியாவின் நடவடிக்கைக்கு பதில் தாக்குதல் நடத்தப்படும் என பாகிஸ்தான் கூறிவரும் நிலையில் இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர்களும், பாதுகாப்புத்துறை நிபுணர்களும் அது தொடர்பாக தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் பேசி உள்ள ஓய்வு பெற்ற ராணுவ மேஜரான மதன் குமார் கூறுகையில்," பெண்களின் நெற்றியில் இருந்த குங்குமத்தை அழித்த பாகிஸ்தானுக்கு ஆபரேஷன் சித்தூர் என பெயர் வைத்து பிரதமர் மோடி பதிலடி கொடுத்திருக்கிறார்.
உளவுத்துறை பாதுகாப்புத்துறை இணைந்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது. ஆணிவேரில் அடி விழ வேண்டும் என்பதற்காகவே இத்தனை நாட்கள் பொறுமை காத்தது இந்தியா அதிகாலையில் 9 பயங்கரவாத முகாம்கள் தரைமட்டமாக்கியுள்ளது. இது மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தியாவில் தாக்குதல் நடந்த உடனே பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ராணுவம் வேறு இடத்தில் பத்திரமாக வைத்திருந்தது. அதை நமது 'ரா' உளவுத்துறை கண்டுபிடித்து தொழில்நுட்பம் மூலம் தரவுகளை நமக்கு அனுப்பியது.
பாதுகாப்பு படைகளும் அரசும் ராஜதந்திரமாக செயல்பட்டு தாக்குதல் நடத்தி இருக்கிறது. கப்பற்படையை வைத்து பாகிஸ்தானில் திசை திருப்பிய நிலையில், போர் ஒத்திகை எனவும் அறிவித்து பாகிஸ்தானின் கவனத்தை அதை நோக்கிய வைத்திருந்தோம். ஆனால் எதிர்பாராத விதமாக தாக்குதலை நடத்தி 26 நிமிடங்களில் தீவிரவாதிகளை முடித்துள்ளது.
இந்தம் தாக்குதலில் உயிரிழந்த அனைவருமே பயங்கரவாதிகள் தான். பொதுமக்கள் யாருமே பாதிக்கப்படவில்லை. இது பாகிஸ்தானுக்கு விழுந்த பெரிய அடி. இந்தியாவைப் பொறுத்தவரை பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதை கண்டித்து வந்திருக்கிறது. அதனால் தான் பயங்கரவாதிகளின் ஆணிவேரில் கை வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு பதிலடி தருவோம் என பாகிஸ்தான் கூறுகிறது. ஒருவேளை நம் மீது பாகிஸ்தான் பதில் தாக்குதல் நடத்த வேண்டும் என்று நினைத்தால் கராச்சி உள்ளிட்ட பாகிஸ்தானின் முக்கிய நகரங்கள் தீப்பற்றி எரியும். பத்து மடங்கு அடி விழும் என்பதை பாகிஸ்தான் கவனிக்க வேண்டும்" என கூறியுள்ளார்.
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
ஜப்பானில் பாகிஸ்தான் கட்டிய மசூதி.. இடிக்க அதிரடியாக உத்தரவிட்ட அதிகாரிகள்.. என்ன காரணம்? -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு












Click it and Unblock the Notifications