India Post: போஸ்ட் ஆபிஸ் வேலைக்கு விண்ணப்பித்து இருந்தீங்களா? மெரிட் லிஸ்ட் வந்தாச்சு உடனே செக் பண்ணுங்க
சென்னை: இந்திய போஸ்ட் ஆஃபிசில் (India Post offic job) அறிவிக்கப்பட்ட 28,740 ஜிடிஎஸ் பணியிடங்களுக்கான மெரிட் லிஸ்ட் தற்போது வெளியாகி இருக்கிறது. விண்ணப்பித்தவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முடிவுகளை பார்க்கலாம். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மார்ச் 23க்குள் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறவுள்ளது. அதன் பின்னர் மருத்துவ பரிசோதனை மற்றும் பணி நியமனம் நடைபெறும்.
இந்திய அஞ்சல் துறை நாட்டில் அதிக ஊழியர்கள் பணியாற்றும் மத்திய அரசு துறைகளில் ஒன்றாக உள்ளது. தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அஞ்சல் துறையில் பல ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள்.

போஸ்ட் ஆஃபிஸ் வேலை
போஸ்ட் ஆபிஸில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மத்திய அரசு சம்பளம், சலுகைகள், குடியிருப்பு என வசதிகள் கிடைக்கும். கவுரவமான வேலை, பணி பாதுகாப்பு ஆகியவற்றால் அரசு வேலை கனவுடன் காத்திருக்கும் பலரும் போஸ்ட் ஆபிஸ் வெளியிடும் இந்த தேர்வு அறிவிப்பை ஆர்வத்துடன் எதிர்பர்த்து இருப்பார்கள்.
குறிப்பாக போஸ்ட் ஆபிஸில் ஜிடிஎஸ் பணியிடங்களுக்கு தேர்வு எதுவும் இன்றி 10 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பபடுகின்றன. பல ஆயிரம் பணியிடங்கள் இந்த முறையில் நிரப்பபடுவதால் தேர்வர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை இந்த அறிவிப்பு ஏற்படுத்து.
மெரிட் லிஸ்ட் வெளியீடு
இந்த ஆண்டுக்கான அறிவிப்பு கடந்த ஜனவரி மாதம் வெளியானது. மொத்தம் 28,740 காலியிடங்களும் தமிழ்நாட்டில் மட்டும் 2,009 காலியிடங்களும் அறிவிக்கப்பட்டன. ஜிடிஎஸ் (அஞ்சல் பணியாளர்), உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் பணிக்கு ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பித்து இருந்த நிலையில், இதற்கான மெரிட் லிஸ்ட் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
இந்த மெரிட் லிஸ்ட்டை https://indiapost.gov.in/gdsonlineengagement என்ற இணையதளத்தில் தேர்வர்கள் பார்க்கலாம். தேர்வு செய்யப்பட்டவர்களின் டிவிஷன் அலுவலகம், போஸ்ட் ஐடி, போஸ்ட் பெயர், பதிவெண், பெற்ற மதிப்பெண்களின் சதவீதம் உள்ளிட்ட விவரங்களுடன் கூடிய பிடிஎப் வெளியிடப்பட்டுள்ளது.
சான்றிதழ் சரிபார்ப்பு எப்போது?
இதில் தேர்வர்கள் விவரங்களை பார்த்து உறுதி செய்துகொள்ளலாம். அடுத்தபடியாக சான்றிதழ் சரிபர்ப்பு நடைபெறும். மார்ச் 23 ஆம் தேதிக்குள் இந்த பணிகள் முடிவு அடையும். விண்ணப்பதாரர்கள் அசல் சான்றிதழ் மற்றும் சான்றிதழ்களின் நகல்கள், அடையாள அட்டை, சாதி சான்றுதல், குடியிருப்பு சான்றிதழ் ஆகியவற்றுடன் அழைக்கப்பட்ட நாளில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு செல்ல வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்த பிறகு மெடிக்கல் பரிசோதனை நடைபெறும். இதையடுத்து பணி நியமன ஆணை வழங்கப்படும்.
சம்பளம் எவ்வளவு?
தேர்வு செய்யப்படுபவர்கள் விண்ணப்பிக்கும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி இடங்களில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் தமிழ் மொழி தெரிந்தவர்களாக இருப்பது அவசியமாகும்.
சம்பளத்தை பொறுத்தவரை கிளை உதவி போஸ்ட் மாஸ்டர், ஜிடிஎஸ் பணிகளுக்கு மாதம் ரூ. 10,000 முதல் ரூ.24,470 வரை சம்பளமாக கிடைக்கும்.பிபிஎம் பணிகளுக்கு ரூ. 12,000 முதல் ரூ. 29,380 வரையில் சம்பளம் அளிக்கப்படும்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications