இந்திய தபால்துறை.. 2 காலாண்டில் ரூ.8,000 கோடி வருவாய்.. வேற லெவலுக்கு போன போஸ்ட் ஆபீஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு காலத்தில் தபால் என்றாலே கடிதம், போஸ்ட் கார்டு, மணியார்டர் என்றுதான் நமக்கு நினைவுக்கு வரும். ஆனால் இப்போது நம்முடைய இந்திய தபால்துறையின் வருமானத்தை பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது.. ஒரே காலாண்டில் ரூ.4,000 கோடிக்கு மேல் வருவாய் கிடைத்திருக்கிறது. அதுவும் தொடர்ந்து 2 காலாண்டுகளாக இந்த அளவுக்கு வருவாய் வந்துள்ளது... இதைபற்றி இங்கே பார்ப்போம்..!!

நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் இந்திய தபால்துறை ஈட்டிய மொத்த வருவாய் ரூ.8,212.7 கோடியாகும்.. கடந்த வருடம் இதே காலகட்டத்தில் கிடைத்த வருவாயுடன் ஒப்பிடும்போது இது சுமார் 24 சதவீத வளர்ச்சி. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், தபால்துறையின் வருமானம் உயர்ந்ததோடு மட்டுமல்லாமல், அதன் பல்வேறு சேவைகளிலும் வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது.

India Post India Post Growth Post Office Services

அதாவது ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் ரூ.4,009 கோடி வருவாய் கிடைத்தது. ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான 2-வது காலாண்டில் இந்த வருவாய் ரூ.4,201.5 கோடியாக அதிகரித்துள்ளது.. அப்படியானால் முதல் காலாண்டில் கிடைத்த வருவாயைவிட 2-வது காலாண்டில் இன்னும் அதிகமாக வருமானம் வந்திருக்கிறது.

கடந்த வருடம் இதே 2-வது காலாண்டுடன் ஒப்பிடும்போது 25 சதவீத வளர்ச்சியும் பதிவாகியுள்ளது.
தொடர்ந்து 2 காலாண்டுகளாக ரூ.4,000 கோடியை தாண்டியிருப்பது இந்திய தபால்துறையின் வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்

வருவாய் அதிகரிப்பது ஒரு பக்கம் என்றால், அந்த வருவாயை வைத்து செலவுகளை சமாளிக்கும் திறன் அதிகரிப்பதும் முக்கியம்.. ஓய்வூதிய செலவுகளை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் பார்க்கும்போது, செலவுகளை ஈடுகட்டும் விகிதம் கடந்த வருடம் 54 சதவீதமாக இருந்தது. தற்போது இது 62 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இந்த வளர்ச்சி தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தலைமையிலான குழுவினர் தபால்துறையின் செயல்பாடுகளை ஆய்வு செய்தனர்.

ஒரு காலத்தில் கடிதங்களை கொண்டு சேர்ப்பதுதான் தபால்துறையின் முக்கிய அடையாளமாக இருந்தது. . ஆனால் இப்போது பார்சல், காப்பீடு, சேமிப்பு உள்ளிட்ட பல்வேறு சேவைகளின் வழியாகவும் வருவாய் அதிகரித்து வருகிறது... முக்கியமாக தொடர்ந்து 2 காலாண்டுகளில் ரூ.4,000 கோடியை தாண்டியிருப்பது இந்த மாற்றத்தை தெளிவாக காட்டுகிறது... செமல்ல!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+