இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு அதிரடியாக குறைந்தது- குணமடைந்தவர்கள் எண்ணிக்கை உயர்வு
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 20 ஆயிரம் பேருக்கு கீழே குறைந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
சென்னை: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 16,051 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. ஒரே நாளில் கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை ஆக உள்ளது. கடந்த 24மணிநேரத்தில் 206 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பினால் 2,02,131 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு மூன்றாம் அலையில் மூன்று லட்சம் பேருக்கு மேல் பதிவானது. கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்தது.

கடந்த மாதத்தில் ஒரு லட்சத்திற்கும் மேல் பதிவான கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து 50 ஆயிரத்திற்கும் மேலே பதிவானது. தற்போது கொரோனா தினசரி பாதிப்பு 20 ஆயிரத்திற்கும் கீழே குறைந்துள்ளது. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 16,051 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்புகள் 4,28,38,524 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,21,24,284 ஆக உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் 206 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 5,12,109 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 2,02,131 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தினசரி கொரோனா பாதிப்பு விகிதம் 1.93% ஆக உள்ள நிலையில் இதுவரை 176 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16ஆம் தேதி தொடங்கியது. முதற்கட்டமாக முன்களப் பணியாளர்கள், இணை நோய் உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில், தற்போது 15 வயதுக்கு மேற்பட்ட சிறார்களுக்கும் தடுப்பூசி செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சனிக்கிழமை இரவு வரையிலான புள்ளி விவரங்களின் படி, இந்தியாவில் 176 கோடி டோஸுக்கு மேலாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட 2 கோடிபேருக்கு கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications