முக்கிய கட்டத்தை எட்டிய இந்தியா.. மகப்பேறு விகிதம் 1.9 ஆக குறைந்தது.. அடுத்து என்ன நடக்கும்?
சென்னை: ஐக்கிய நாடுகள் மக்கள்தொகை நிதியம் (UNFPA) நேற்று வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியாவின் மொத்த மகப்பேறு விகிதம் (Total Fertility Rate - TFR) தற்போது 1.9 ஆக உள்ளது. இது மக்கள் தொகை நிலைநிறுத்த விகிதமான 2.1-ஐவிட குறைவாகும்.
மொத்த மகப்பேறு விகிதம் என்பது, ஒரு பெண் தனது வாழ்நாளில் பெற்றெடுக்கும் குழந்தைகள் எண்ணிக்கையின் சராசரி. மக்கள் தொகை நிலைநிறுத்த (replacement) விகிதம் 2.1 ஆகும். அதாவது, ஒரு தலைமுறை மக்கள் எண்ணிக்கை அடுத்த தலைமுறையிலும் அதே அளவு தொடர, ஒரு பெண் சராசரியாக 2.1 குழந்தைகள் பெற்றெடுக்க வேண்டும்.
கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவர் வயதாகி இறந்துவிட்ட பிறகு அவர்களுக்கு ஈடாக 2 பேர் இந்த உலகத்தில் இருக்க வேண்டுமல்லவா. அதனால்தான் 2 என்ற நிலைநிறுத்த விகிதம் முக்கியமானது. இதில் 0.1 என்பது குழந்தை மரணம், பாலின விகிதம் போன்ற காரணிகளுக்காக சேர்க்கப்படுகிறது. 2.1 என்ற அளவுக்கு இருந்தால்தான், 2 பேருக்கு ஈடாக இன்னும் 2 பேர் இந்த உலகில் பிறப்பார்கள் என்று அர்த்தம். இப்போது அது 1.9க்கு குறைந்துள்ளதாம்.

மகப்பேறு விகிதம் குறைவதால் என்ன நடக்கும்?
- மகப்பேறு விகிதம் 2.1-ஐவிட குறைவாகும் போது, ஒரு தலைமுறை மக்கள் எண்ணிக்கை அடுத்த தலைமுறையிலும் அதே அளவு தொடர முடியாது.
- இதனால், நீண்ட காலத்தில் மக்கள் தொகை வளர்ச்சி மெல்ல குறைந்து, ஒரு கட்டத்தில் குறையத் தொடங்கும்.
- தற்போது இளம் மக்கள் அதிகம் இருப்பதால், மக்கள் தொகை இன்னும் சில ஆண்டுகள் அதிகரிக்கும். ஆனால் பிறப்புகள் குறைவதால், 30-40 ஆண்டுகளில் மக்கள் தொகை வளர்ச்சி நின்று, பின்னர் குறையத் தொடங்கும்.
Replacement Rate (நிலைநிறுத்த விகிதம்) என்றால் என்ன?
- நிலைநிறுத்த விகிதம் என்பது, ஒரு பெண் வாழ்நாளில் சராசரியாக 2.1 குழந்தைகள் பெற்றெடுக்க வேண்டும் என்பதாகும்.
- இரண்டு பெற்றோர்களுக்கு ஈடாக அவர்களுக்கு 2 குழந்தைகள் வேண்டும்; கூடுதலாக 0.1 என்பது குழந்தை மரணம், பாலின விகிதம் போன்றவற்றுக்காக சேர்க்கப்படுகிறது.
- இது 2.1-ஐவிட குறைவாகும் போது, மக்கள் தொகை நீண்ட காலத்தில் குறையத் தொடங்கும்.
1.9 என்றால் என்ன அர்த்தம்?
- இந்தியாவில் ஒரு பெண் சராசரியாக 1.9 குழந்தைகள் மட்டுமே பெற்றெடுக்கிறார்.
- இது 2.1-ஐவிட குறைவாக இருப்பதால், நீண்ட காலத்தில் மக்கள் தொகை குறையும்.
2025ஆம் ஆண்டுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பின் மதிப்பீட்டின்படி, இந்தியாவின் மக்கள் தொகை தற்போது சுமார் 1.46 பில்லியன் (146 கோடி) ஆக உள்ளது. இது உலகில் மிக அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா தொடரும் என்பதை உறுதி செய்கிறது. மகப்பேறு விகிதம் குறைந்தாலும், இளம் மக்கள் தொகை அதிகம் இருப்பதால் இன்னும் சில ஆண்டுகள் மக்கள் தொகை வளர்ச்சி தொடரும்.
தற்போதைய நிலையில், இந்திய மக்களின் 24% பேர் 0-14 வயது குழுவில், 68% பேர் வேலை செய்யும் வயதான 15-64 வயது குழுவில் உள்ளனர். முதியோர் (65 வயது மேல்) மக்கள் தொகை தற்போது 7% ஆகவும், எதிர்காலத்தில் இது அதிகரிக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை 1.7 பில்லியன் வரை அதிகரித்து, அதன் பிறகு குறையத் தொடங்கும் என ஐ.நா. அறிக்கைகள் தெரிவிக்கின்றன
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications