இந்தியாவிலேயே முதல்முறை.. சென்னையில் "தாஜ்" நிகழ்த்த போகும் அற்புதம்.. அசர வைக்கும் நம்ம மெட்ராஸ்
சென்னை: இந்தியாவின் முதல் தாஜ் பிராண்டட் வீடுகள் சென்னையில் கட்டப்பட உள்ளது. ரூ.₹6.5 கோடி முதல் ₹19 கோடி வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இந்த திட்டத்தில் அசத்தலான வீடுகள் சென்னையில் கட்டப்பட உள்ளது.
ரியல் எஸ்டேட் நிறுவனமான சென்னையை தளமாகக் கொண்ட அம்பா குழுமத்துடன் இணைந்து, 253 அறைகள் மற்றும் 123 தாஜ்-பிராண்டட் குடியிருப்புகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த தாஜ் ஸ்கை வியூ ஹோட்டல் மற்றும் ரெசிடென்ஸ்களை தொடங்குவதாக அறிவித்துள்ளது. மத்திய சென்னையில் நெல்சன் மாணிக்கம் சாலையில் இந்த குறிப்பிட்ட கிரீன்ஃபீல்ட் திட்டம் அமைய உள்ளது.

அம்பா குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் பழனியப்பன் அம்பா கூறுகையில், 2027 முதல் காலாண்டுக்குள் தயாராகும் இந்த திட்டத்தில் சுமார் ₹850 கோடி முதலீடு செய்யப்படும். 23 மாடிகளை கொண்ட சென்னையின் மிக உயரமான ஹோட்டல் கோபுரமாக இது இருக்கும். குடியிருப்பு சொத்துக்களின் விலை ₹6.5 கோடி (சுமார் 2,500 சதுர அடி) மற்றும் ₹19 கோடி (சுமார் 5,900 சதுர அடி) வரை இருக்கும்.
டெவலப்பர்கள் அதிக நிகர மதிப்புள்ள தனிநபர்கள் (HNIகள்), அல்ட்ரா HNIகள், CXOக்கள் மற்றும் தாஜ் வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்படும். IHCL-க்கு சென்னை ஒரு முக்கிய சந்தையாக இருந்ததைக் குறிப்பிட்டு, இந்த வளர்ச்சி ஒரு புதிய வாய்ப்பைத் திறக்கும் என்று IHCL இன் MD மற்றும் CEO புனீத் சத்வால் கூறி உள்ளார். குடியிருப்புகளுடன் சேர்ந்து, நாள் முழுவதும் உணவு மற்றும் சிறப்பு உணவகங்கள் போன்ற சிறப்பான வசதிகளை இங்கே வழங்குவோம். சென்னையில் டாப் ஸ்டார் ஹோட்டல்களில் இதுவும் ஒன்றாக என்று கூறப்பட்டு உள்ளது.
மற்ற மாவட்டங்கள்: சென்னை மட்டுமின்றி தமிழ்நாட்டில் சென்னை தாண்டி மற்ற மாவட்டங்களில் 5 நட்சத்திர, 3 நட்சத்திர ஹோட்டல்களை திறக்க மிகப்பெரிய ஹோட்டல் நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.
இனி தமிழ்நாட்டின் தொழில்துறைப் பகுதிகளில் வேலை நிமித்தமாகப் பயணம் செய்பவர்கள் விரைவில் நல்ல ஹோட்டல்களில் தங்க முடியும். தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் இருக்கும் இடங்களிலெல்லாம் பெரிய நிறுவனங்கள் ஹோட்டல்கள் கட்டப்பட்டு வருகின்றன.
இந்தியா முழுவதிலும் உள்ள பெரிய ஹோட்டல் பிராண்டுகள் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த பெரிய ஹோட்டல்கள் தொழில்துறைகள் அதிகம் உள்ள சிறிய நகரங்களில் சொகுசு ஹோட்டல்களைத் திறக்கத் திட்டமிட்டுள்ளன. கிருஷ்ணகிரி, ஓசூர், பெருந்துறை, கோவை, தூத்துக்குடி போன்ற இடங்களும், சென்னைக்கு அருகில் உள்ள ஒரகடம்-ஸ்ரீபெரும்புதூர் போன்ற பகுதிகளும் ஹோட்டல் நிறுவனங்களின் கவனத்தை ஈர்க்க தொடங்கி உள்ளன.
இங்கே சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட அதீத முதலீடுகள் காரணமாக தொழிற்புரட்சிகள் நடக்க தொடங்கி உள்ளன. இதை மனதில் வைத்தே ஹோட்டல் நிறுவனங்கள் திறக்கப்பட உள்ளன.
உதாரணமாக, ஐடிசி லிமிடெட் நிறுவனத்துக்குச் சொந்தமான பார்ச்சூன் பார்க் ஹோட்டல் லிமிடெட், ஜனவரி மாதம் கிருஷ்ணகிரியில் 107 அறைகள் கொண்ட ஹோட்டலைத் திறந்தது.ஓசூர் பல தொழிற்சாலைகளுக்கு அருகில் இருப்பதால், அவர்களின் வணிகத்திற்கு பெரும் வாய்ப்பு உள்ளது. மற்றொரு நிறுவனமான ஜிஆர்டி ஹோட்டல் மற்றும் ரிசார்ட்ஸ் தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்தது.
அதேபோல் ஓசூர், ஒரகடம் மற்றும் ஸ்ரீபெரும்புதூரில் புதிய ஹோட்டல்களை கட்ட முடிவு செய்துள்ளது. ஆட்டோமொபைல், பர்னிச்சர் மற்றும் விண்வெளி போன்ற தொழில்களில் திட்டங்கள் மற்றும் தூத்துக்குடி VOC துறைமுகத்தின் மேம்பாடுகளால் இங்கே புதிய பெரிய நிறுவனங்களின் ஹோட்டல்கள் வர தொடங்கி உள்ளன.
மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் தரவுத்தளத்தின்படி, தமிழ்நாட்டில் உள்ள ஆடம்பரமான ஹோட்டல்களில் மொத்தம் 8,600 அறைகள் உள்ளன, மேலும் பல வகையான இடங்களில் வகைப்படுத்தப்படாத அறைகள் உள்ளன. சென்னைக்கு அருகில் உள்ள நல்ல ஹோட்டல்களில் தங்கும் விகிதம் 2019 இல் 65% ஆக இருந்த நிலையில், பிஸியான வணிக நாட்களில் 90% ஆக உயர்ந்துள்ளது.
இது அதிகரித்த காரணத்தால் மற்ற நகரங்களிலும் இதே போன்ற ஹோட்டல்களை அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
பாரம்பரியமாக ஹோட்டல் வணிகத்தில் இல்லாத நிறுவனங்கள் கூட இந்த திட்டத்தில் இறங்குகின்றன. எடுத்துக்காட்டாக, பெங்களூரைச் சேர்ந்த பிரிகேட் குரூப், ரியல் எஸ்டேட் டெவலப்பர், தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி மற்றும் அதிகரித்த வணிக நடவடிக்கைகள் காரணமாக சென்னைக்கு அருகில் ஒரு பெரிய ரிசார்ட்டைக் கட்ட திட்டமிட்டுள்ளது. ஸ்டெர்லிங் ஹாலிடே ரிசார்ட்ஸ் மற்றும் ஏஏபி ரெசிடென்சி ஆகியவை தமிழ்நாட்டின் தொழில்துறை பகுதிகளில் அதிக ஹோட்டல்களைக் கட்டத் திட்டமிட்டுள்ளன.
கிருஷ்ணகிரி, ஓசூர், பெருந்துறை, கோவை, தூத்துக்குடி போன்ற இடங்களில் மிக அதிக அளவில் முதலீடுகள் குவிந்து வருவதே இதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டின் வேகமான பொருளாதார வளர்ச்சியை இது பறைசாற்றுகிறது.
ராணிப்பேட்டையில் டாடா தொழிற்சாலை , ஓசூரில் ஓலா தொழிற்சாலை, தூத்துக்குடியில் விண்பாஸ்ட் தொழிற்சாலை, கோவையில் பல ஐடி நிறுவனங்கள் முதலீடு, டெஸ்லா வருவதற்கான வாய்ப்பு போன்ற பல காரணங்கள் காரணமாக தமிழ்நாட்டில் இப்படி ஸ்டார் ஹோட்டல்கள் குவிய தொடங்கி உள்ளன.












Click it and Unblock the Notifications