Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிட்டத்தட்ட ரூ.1000 கோடி சொத்து.. இந்தியாவின் பணக்கார சிஎம் யார்? லிஸ்டில் தமிழக முதல்வர் எங்கே! அப்போ ஏழை சிஎம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவிலேயே பணக்கார முதல்வர்கள் மற்றும் ஏழ்மையான முதல்வர்கள் யார் என்பது குறித்த பட்டியல் இப்போது வெளியாகியுள்ளது. அதன்படி நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியலில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும், ஏழ்மையான முதல்வர்கள் லிஸ்டில் மம்தாவும் உள்ளனர். மற்ற முதல்வர்களின் சொத்து எவ்வளவு.. இதில் முதல்வர் ஸ்டாலின் எந்த இடத்தில் இருக்கிறார் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

இந்தியாவில் உள்ள பணக்கார மற்றும் ஏழை முதல்வர்கள் குறித்த புதிய ரிப்போர்ட் இப்போது வெளியாகியுள்ளது. ஏடிஆர் எனப்படும் ஜனநாயகச் சீர்திருத்தங்களுக்கான சங்கம் இந்த லிஸ்ட்டை வெளியிட்டுள்ளது. தேர்தலின்போது தாக்கல் செய்யப்படும் பிரமாணப் பத்திரங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தப் பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது.

India s Richest and Poorest CMs Chandrababu Naidu Tops and Mamata Poorest Where is Tamil nadu CM

சந்திரபாபு நாயுடு

இந்த லிஸ்டின்படி ஆந்திரப் பிரதேச முதல்வர் என். சந்திரபாபு நாயுடு இந்தியாவின் பணக்கார முதல்வராகத் தொடர்ந்து இருக்கிறார். சந்திரபாபு நாயுடுவின் சொத்து மதிப்பு ₹931 கோடிக்கு மேல் உள்ளது. அவரது செல்வத்தின் பெரும்பகுதி பிரபலப் பால் கம்பெனியான ஹெரிடேஜ் ஃபுட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து வந்திருப்பது தெரியவந்துள்ளது. சந்திரபாபு நாயுடு தான் ஹெரிடேஜ் ஃபுட்ஸ் நிறுவனத்தை 1992ல் தொடங்கினார். இப்போது அதை இவர் நடத்துவதில்லை என்றாலும் கூட இவருக்கு அந்நிறுவனத்தில் குறிப்பிடத்தக்கப் பங்குகள் இருக்கிறது. அதில் இருந்தே இவருக்கு பெருந்தொகை கிடைத்துள்ளது.

இவருக்கு அடுத்தபடியாக அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா காண்டு ₹332 கோடி சொத்துக்களுடன் இரண்டாவது பணக்கார முதல்வராக இருக்கிறார். மொத்தம் 31 முதல்வர்களின் சொத்துகள் ஆய்வு செய்யப்பட்ட நிலையில், இந்த இரண்டு தலைவர்கள் மட்டுமே ரூ.100 கோடிக்கும் அதிகமான சொத்துகளைக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த லிஸ்டில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மூன்றாவது இடத்தில் இருந்தாலும் அவரது ஒட்டுமொத்தச் சொத்துகளே ₹51 கோடி மட்டும் ஆகும்.

ஏழ்மையான முதல்வர்கள்

நாட்டின் ஏழையான முதல்வர்கள் பட்டியலில் மேற்கு வங்க முதல்வர் மம்தா இடத்தில் இருக்கிறார். மம்தா பானர்ஜி ₹15 லட்சத்திற்கும் சற்று அதிகமான சொத்துக்களுடன் நாட்டின் ஏழ்மையான முதல்வராகத் தொடர்கிறார். மம்தா பானர்ஜி 2021ல் பவானிபூர் இடைத்தேர்தலுக்குத் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தின்படி, அவரிடம் ₹69,255 ரொக்கமும், வங்கிக் கணக்கில் ₹13.5 லட்சமும் இருந்தது. இதில் அவரது தேர்தல் செலவுக் கணக்கில் ₹1.5 லட்சமும் அடங்கும். மேலும், அவரிடம் 9 கிராம் தங்கம் உள்ளதாம். அவரது பெயரில் நிலமோ அல்லது குடியிருப்பு வீடோ இல்லை.

மற்ற முதல்வர்கள்

மம்தா பானர்ஜியின் அறிவிக்கப்பட்ட சொத்துக்கள் காலப்போக்கில் குறைந்து வந்துள்ளன. 2020-21 வருமான வரிக் கணக்கின்படி, அவரது சொத்து மதிப்பு ₹15.4 லட்சம். 2016 சட்டப்பேரவைத் தேர்தலின்போது இது ₹30.4 லட்சமாக இருந்தது. அது இப்போது கிட்டத்தட்ட ரூ.15 லட்சமாகக் குறைந்துவிட்டதாம். மம்தாவை தொடர்ந்து ஜம்மு காஷ்மீரின் ஒமர் அப்துல்லா ₹55 லட்சம் சொத்துக்களுடன், ஏழையான முதல்வர்கள் வரிசையில் 2வது இடத்தில் இருக்கிறார். அவரை தொடர்ந்து கேரள முதல்வர் பினராயி விஜயன் ₹1 கோடிக்கும் சற்று அதிகமான சொத்துக்களுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின்

தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ₹30 கோடி சொத்துக்களுடன் ஏழாவது பணக்கார முதல்வராக உள்ளார். தமிழ்நாட்டின் முதல்வர் மு.க. ஸ்டாலின் ₹8 கோடி சொத்து மதிப்புடன் 14-வது இடத்தில் இருக்கிறார். நாட்டின் மொத்தமுள்ள 31 முதல்வர்களின் சொத்து மதிப்பு சுமார் ₹1,630 கோடி ஆகும். சராசரியாக ஒரு முதல்வரின் சொத்து மதிப்பு ₹52.59 கோடியாக உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+