ஊர்ல ஒருத்தர் விடாம அனைவருமே கோடீஸ்வரர்கள்தான்.. இந்தியாவில் இப்படி ஒரு கிராமமா? ரகசியம் இதுதானாம்
சென்னை: பசுமை பசுமையாய், எளிமையான வாழ்க்கைமுறையுடன் இயற்கையைச் சார்ந்து தான் கிராமங்கள் (Village) இருக்கும் என நாம் நினைக்கும் போது, இந்தியாவில் உள்ள ஒரு கிராமம் மட்டும் அதற்கெல்லாம் மாறாக கோடீஸ்வர்களால் நிரம்பியுள்ளது. குஜராத்தில் உள்ள மதாபூர் கிராமம் உலகின் பணக்கார கிராமமாக விளங்குகிறது. இதில் வங்கிகளில் மட்டும் ரூ.5,000 கோடிக்கு மேல் டெபாசிட் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்த செழிப்புக்குப் பின்னால் உள்ள உண்மை காரணம் என்ன? என்பதை இங்கு பார்க்கலாம்.
கிராமங்கள் என்றாலே நம் மனதில் நினைவுக்கு வருவது மண் வீடுகள், சுற்றிலும் பசுமை வெளிகள், ஆங்காங்கே மேயும் ஆடு, மாடுகள், ஆறுகள், குளங்கள் என இயற்கை காட்சிகள்தான். அமைதியான வாழ்க்கை முறை, விவசாயம் சார்ந்த வாழ்வு, ஆடம்பரம் இல்லாத எளிய மக்கள் என கிராமத்தை பற்றிய நமது பிம்பம் இப்படித்தான் உள்ளது.

இந்தியாவின் கோடீஸ்வர கிராமம்
ஆனால், இந்தியாவில் உள்ள ஒரு கிராமம் இதற்கு முற்றிலும் மாற்றாக உள்ளது. அந்த கிராமத்தில் உள்ள அனைவருமே கோடீஸ்வர்கள்தான்! ஆச்சர்யப்பட வைக்கும் இந்த கிராமம் குஜராத்தில் உள்ளது. உலகிலேயே பணக்கார கிராமமாக அறியப்படும் இந்த மதாபூர் கிராமத்தில் உள்ள வங்கிகளில் டெபாசிட் தொகையாக மட்டும் ரூ. 5,000 கோடிக்கு மேல் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த கிராமத்தில் சுமார் 92,000 மக்கள் வசிக்கிறார்கள். மொத்தம் 7,600 வீடுகள் உள்ளன. இங்குள்ள மக்களுக்காக மட்டும் 17 வங்கி கிளைகள் இயங்குகின்றன. இவற்றில் உள்ள மொத்த டெபாசிட் தொகை ரூ. 5,000 கோடிக்கு மேல்!
குஜராத் மதாபூர் கிராமம்
"இந்த கிராமத்தில் ஏதாவது வைரம், வைடூரியம் போன்ற புதையல் கிடைத்ததா?" என நீங்கள் நினைக்க வேண்டாம். இந்த கிராமத்தின் செழுமைக்கு காரணம், அங்குள்ள குடும்பங்களைச் சேர்ந்த பலரும் வெளிநாடுகளில் வசிப்பதுதான் என்கிறார்கள் அப்பகுதி மக்கள். இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா மற்றும் வளைகுடா நாடுகளில் பலர் வேலை செய்து வருகிறார்கள். அங்கு ஈட்டும் பணத்தை ஊரில் உள்ள குடும்பத்தினருக்கு வங்கிகள் வழியாக அனுப்புகிறார்கள்.
தங்கள் குடும்பத்திற்கும் கிராமத்தின் வளர்ச்சிக்கும் பலர் பணம் அனுப்புகின்றனர். கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு, சமூக நலன் ஆகியவற்றிற்காக செலவு செய்கிறார்கள். இதனால் மதாபூர் கிராமமே நவீன கிராமமாக மாறியுள்ளது.
கோவில்கள் கட்டும் மிஸ்திரி சமூகத்தினர்
மதாபூர் கிராமம் என்று பெயருக்குதான் சொல்ல வேண்டும். உண்மையில் நகரங்களில் உள்ள கட்டமைப்புகளை விட அதிக நவீன வசதிகள் அங்கு உள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், வங்கிகள், பூங்காக்கள், நன்கு பராமரிக்கப்படும் சாலைகள் என மக்களின் வாழ்கை தரம் நகர்புறங்களில் உள்ள மக்களை விட மேம்பட்டதாக இருக்கும்.
அனைத்து வசதிகளும் அங்கு இருக்கின்றதாம். மதாபூர் கிராமத்தை பொறுத்தவரை நீண்ட நெடிய பாரம்பரியம் கொண்டதாக சொல்கிறார்கள். 12 ஆம் நூற்றாண்டிலேயே இந்த கிராமம் பற்றிய தகவல்கள் உள்ளன. இந்த கிராமத்தில் கோவில்கள் உள்ளிட்டவற்றை கட்டும் மிஸ்திரி சமூகத்தினர் வசித்து இருக்கிறார்களாம்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications