"அக்னி 5".. சீனாவிற்கு எதிராக இந்தியாவின் மாஸ் "ஆபரேஷன்".. திடீரென சோதனை செய்தது ஏன்? செம பிளான்
சென்னை: அக்னி 5 ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக மீண்டும் சோதனை செய்துள்ளது கவனம் பெற்றுள்ளது. இந்தியாவின் இந்த சோதனை சீனாவிற்கு மிகப்பெரிய பதிலடியாக அமைந்துள்ளது. அதேபோல் சீனாவிற்கு இந்த சோதனை பெரிய தலைவலியை கொடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அக்னி 5 ஏவுகணை கண்டம் விட்டு கண்டம் தாக்கும் ஏவுகணை ஆகும். இது 7 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சென்று தாக்கும் திறன் கொண்டது. சீனாவின் எந்த எல்லையில் உள்ள பகுதியையும் இதன் மூலம் தாக்க முடியும்.
7000 கிமீ தாக்கும் திறன் கொண்டது என்று இந்திய ராணுவம் சொன்னாலும் இதன் உண்மையான தாக்குதல் தூரம் பெரும்பாலும் 15 ஆயிரம் கிலோ மீட்டருக்கும் அதிகமாக இருக்கும் என்று உலக நாடுகள் பல தெரிவித்து வருகின்றன.

அக்னி 5
இந்த புதிய சோதனையில் அக்னி 5ன் எடை குறைக்கப்பட்டு உள்ளது. இதில் பயன்படுத்தப்பட்ட ஸ்டீல் பொருட்களை டிஆர்டிஓ புதிய காம்போசைட் பொருட்களை வைத்து மாற்றி உள்ளது. இதனால் அந்த பொருட்கள் எடை குறைவாக இருக்கும். அதே சமயம் அதிக வலிமையாக, அதிக வெப்பம் தாங்கும் திறன் கொண்டும் இருக்கும். இதனால் அக்னி 5ன் உண்மையான தாக்குதல் தூரம் மேலும் அதிகரித்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த எடை மாற்றம் என்பது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

எவ்வளவு
அதன்படி அக்னி 5 ஏவுகணையின் மொத்த எடையில் 20 டன் எடை வரை குறைத்து உள்ளனர். இதனால் இந்த ஏவுகணையை கூடுதல் குண்டுகளை பயன்படுத்த முடியும். அதிக எடை கொண்ட அணு ஆயுதங்களை எளிதாக நீண்ட தூரம் கொண்டு செல்ல முடியும். இதன் மூலம் சீனாவின் தலைநகர் பெய்ஜிங் தொடங்கி வடகிழக்கு எல்லை வரை எளிதாக தாக்குதல் நடத்த முடியும். சமீபத்தில் இந்தியா - சீனா இடையே அருணாசலப் பிரதேசத்தில் மிகப்பெரிய மோதல் நடைபெற்றது. இந்த மோதலில் இரண்டு தரப்பு ராணுவத்தினருக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில்தான் இந்தியா தற்போது அக்னி 5 ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்து சீனாவிற்கு பிரஷர் கொடுத்துள்ளார்.

கண்காணிப்பு
இதை கண்காணிக்கவே சீனாவின் அதிநவீன உளவு கப்பலான யுவான் வாங் 5 இந்திய பெருங்கடல் அருகே இலங்கை கடல் பகுதியில் கடந்த சில நாட்களாக வட்டமடித்து வந்தன. கடைசியில் இந்தியா இந்த ஏவுகணையை சோதனை செய்வதற்கு 2 நாட்களுக்கு முன்புதான் யுவான் வாங் 5 சீனாவிற்கு திரும்பியது. இந்தியா இதுவரை சோதனை செய்த அக்னி ஏவுகணைகளில் அக்னி 5 ஏவுகணைதான் அதிக சக்தி வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அக்னி 5ன் உண்மையான தூரம் என்ன என்பதை சோதனை செய்வதற்காக மீண்டும் இதை டெஸ்ட் செய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த அக்னி 5 canister-launch ஏவுகணை என்பதை இதை உடனே எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்ல முடியும். இதை மெயிட்டெயின் செய்வதும் எளிதானது.

தூரம்
சீனாவிடம் Dong Feng-41 (12,000-15,000-km) ஏவுகணை உள்ளது. அந்த ஏவுகணை இந்தியாவின் எந்த பகுதியை வேண்டுமானாலும் தாக்கும் திறன் கொண்டது. அந்த ஏவுகணையை விட அக்னி 5 அதிக திறன் கொண்டதாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. சீனாவுடன் மோதல் நடக்கும் நிலையில் இந்த ஏவுகணை சோதனை சீனாவிற்கான பதிலடியாக பார்க்கப்படுகிறது. ஒரு பக்கம் சீனா - இன்னொரு பக்கம் பாகிஸ்தான் இரண்டு நாடுகளும் இந்தியாவிற்கு பாதுகாப்பு ரீதியாக நெருக்கடி கொடுத்து வரும் நிலையில்தான் அக்னி 5 சோதனை மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

சோதனை
சமீபத்தில் கூட அக்டோபர் மாதம் அக்னி 5 சோதனை நடைபெற்றது. இந்த ஏவுகணை வெற்றிகரமாக சென்று இலக்கை தாக்கியது. துல்லியமாக இலக்கை தாக்கி அழித்ததாக டிஆர்டிஓ தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணையில் 3 கட்ட திட எரிபொருள் எஞ்சின்கள் உள்ளது. இந்தியாவின் மற்ற ஏவுகணைகளை விட இது அதிகம் துல்லியம் கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இது 17 மீட்டர் நீளம் மற்றும் 2 மீட்டர் அகலம் கொண்டது.அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்க கூடிய திறன் கொண்டது. நிலப்பரப்பில் இருந்து மட்டுமின்றி கடலில் கப்பலில் இருந்தும் இந்த அக்னி 5 ராக்கெட்டை ஏவ முடியும். ஆனால் கப்பலில் இருந்து ஏவும் இந்த சோதனை இன்னும் அக்னி 5 ராக்கெட்டிற்கு இன்னும் முழுமையாக செய்யப்படவில்லை. இந்தியாவின் அணு ஆயுத ஏவுகணைகளில் அக்னி 5தான் இப்போது அதிக தூரம் சென்று தாக்குதல் நடத்த கூடிய ஏவுகணை ஆகும்.












Click it and Unblock the Notifications