திமுக Vs அதிமுக Vs பாஜக? காங்கிரஸுக்கு எண்ட் கார்டு? எக்ஸிட் போல் வாக்கு சதவீதத்தால் கலக்கம்?
சென்னை: தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலில் பாஜக 14% வாக்குகளைப் பெறும் என எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவித்திருப்பது திமுக, அதிமுகவைத் தவிர்த்து காங்கிரஸின் இருப்புக்கே உலை வைக்கப் போகிறதா? என்கிற கேள்வியை இயல்பாகவே எழுப்புகிறது.
2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியே 38 இடங்களில் வென்றது. பாஜக- அதிமுக கூட்டணி ஒரு இடத்தில்தான் வென்றது.

2019 தேர்தல் வாக்கு சதவீதம்: 2019 -ம் ஆண்டு தேர்தலில் திமுக கூட்டணி மொத்தம் 53.15% வாக்குளைப் பெற்றது. திமுக கூட்டணியில் திமுக 33.52%; காங்கிரஸ் 12.61% வாக்குகளைப் பெற்றிருந்தன. பாஜக- அதிமுக கூட்டணி மொத்தம் 30.57% வாக்குகளைப் பெற்றது. இதில் அதிமுக 19.39%, பாஜக 3.66% வாக்குகளைப் பெற்றிருந்தன.
திமுக அணி வெல்லும்: தற்போதைய 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக, பாஜக தனித்துப் போட்டியிடுகின்றன. இந்த தேர்தலில் திமுக கூட்டணிதான் அதிக இடங்களில் வெல்லும் என்பது அனைத்து கருத்து கணிப்புகளின் முடிவு. India Today-Axis My India 2024 தேர்தலில் தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் பெறக் கூடிய வாக்கு சதவீதத்தை கணித்திருக்கின்றன.
India Today-Axis My India எக்ஸிட் போல் வாக்கு சதவீத கணிப்பு:
இந்தியா கூட்டணி- 46%
திமுக 26
காங்கிரஸ் 10
இதர கட்சிகள் 10
அதிமுக கூட்டணி 21%
அதிமுக 19%
தேமுதிக 2%
பாஜக கூட்டணி 22%
பாஜக -14%
பாமக, தமாகா, அமமுக - 8%
நாம் தமிழர் கட்சி 7%
இதில் பாஜகவுக்கு 14% வாக்குகள் கிடைக்கும் என குறிப்பிட்டிருப்பதுதான் கவனிக்கத்தக்கதாகும்.

பாஜகவுக்கு 14% வாக்கு எப்படி சாத்தியம்?: 2019-ம் ஆண்டு தேர்தல் வாக்கு சதவீத்தை விட பாஜக 11% வாக்குகளைக் கூடுதலாகப் பெறப் போகிறதாம். அப்படியானால் 2019-ம் ஆண்டு தேர்தலை ஒப்பிடுகையில் 2024-ல் திமுக 7%; காங்கிரஸ் 2% குறையும்; இதர கட்சிகளின் வாக்குகளில் 2% குறையும். இவை அனைத்தும் இணைந்தால் தற்போதைய எக்ஸிட் போல் முடிவுகளின் படி பாஜகவால் 12% வாக்குகளைப் பெற முடியும்.
திமுக Vs அதிமுக Vs பாஜக ?: தற்போதைய எக்ஸிட் போல் முடிவுகளின் அடிப்படையில் வாக்கு சதவீத அடிப்படையில் தமிழ்நாட்டில் திமுக, அதிமுகவை அடுத்து காங்கிரஸ் என்ற நிலைமையை பாஜக முடிவுக்கு கொண்டு வந்துவிடும் என்பதாக அமைகிறது. என்னதான் திமுக கூட்டணியில் இருந்தாலும் காங்கிரஸின் வாக்கு சதவீதம் குறைவது என்பதும் பாஜக விஸ்வரூபம் எடுப்பது என்பதும் திமுக Vs அதிமுக Vs பாஜக என்கிற நிலை எதிர்காலத்தில் உருவாகும் என்பதாகவே அமையலாம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
-
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி! -
கூண்டோடு கலைஞ்சிருச்சா?" பாஜகவின் சைலண்ட் கேம்... தனித்து விடப்பட்டாரா அமமுக டிடிவி தினகரன்? -
பாஜகவை விட்டு விலகிய முன்னாள் MP நரசிம்மன்.. அண்ணாமலை பேச்சை கேட்டிருந்தா இந்நேரம் பாஜக ஆட்சியாம்! -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை












Click it and Unblock the Notifications