என்னது ‛பாரத்’தா? பிரிட்டிஷ்காரர்கள் வைத்த எல்லா பெயரையும் மாற்ற முடியுமா? சரத்குமார் ‛அட்டாக்’
சென்னை: இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. இதற்கும் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி உள்ள நிலையில் நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் முனைப்பில் காங்கிரஸ், திமுக உள்பட 26 கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணிக்கு ‛இந்தியா' என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இதுஒருபுறம் இருக்க இந்தியாவின் பெயரை ‛பாரத்' என மாற்றம் செய்ய மத்திய அரசு முயற்சிப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன. வரும் 18 ம் தேதி முதல் 22ம் தேதி டெல்லியில் நாடாளுமன்ற கூட்டம் தொடங்கி நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பெயர் மாற்ற நடவடிக்கையை மத்திய அரசு கொண்டு வரலாம் என கூறப்படுகிறது.
இதற்கிடையே சில நாட்களுக்கு முன்பு ஜி20 மாநாட்டையொட்டி ஜனாதிபதி திரெளபதி முர்மு இன்று இரவு சிறப்பு விருந்து அளிக்கிறார். இதில் பங்கேற்க தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதற்கான அழைப்பிதழில் ‛President of India' என்பதற்கு பதில் ‛President of Bharat' என அச்சிடப்பட்டு இருந்தது.
அதேபோல் பிரதமர் மோடியின் இந்தோனேசியாவின் சுற்றுப்பயணத்துக்கான அட்டவணையிலும் Prime Minister of Bharat என குறிப்பிடப்பட்டு இருந்தது. இதுதவிர ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடியின் அருகே ‛இந்தியா' என்பதற்கு பதில் ‛பாரத்' என எழுதி வைக்கப்பட்ட பெயர் பலகை தான் வைக்கப்பட்டு இருந்தது. இந்தியாவின் பெயர் பாரத் என மாற்றம் செய்வதாக மத்திய அரசு இன்னும் தெரிவிக்காவிட்டாலும் மேற்கூறி நடவடிக்கைகள் என்பது அதனை உறுதி செய்யும் வகையில் இருப்பதாக விபரம் தெரிந்தவர்கள் கூறுகின்றனர்.
தற்போது இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றம் செய்வதற்கு ஆதரவும், எதிர்ப்பும் ஒருசேர கிளம்பி உள்ளது. இந்நிலையில் தான் நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் ‛‛இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றம் செய்ய முயற்சிப்பதாக கூறப்படுகிறதே?'' என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சரத்குமார் அளித்த பதில் வருமாறு:

இந்தியாவுக்கு பெயர் வைத்தது பிரிட்டிஷ்காரர்கள் என வைத்து கொண்டால் அவர்கள் வைத்த பெயர் அனைத்தையும் நாம் மாற்றி கொண்டு இருக்கிறோமா?. அதனால் இந்த பெயர் மாற்றத்தை தவிர்க்கலாம் என்பது எனது கருத்து. ‛பாரத்' என்பது சில இடங்களில் தேசியகீதமான ஜன கண மன... பாடும்போது ‛பாரத்' என்ற வார்த்தை வருகிறது. இந்தியா என்பது வருவது இல்லை.
அதேபோல் ‛பாரத தாய்' என்கிறோம். ‛இந்திய தாய்' என சொல்வது இல்லை. இவை எல்லாவற்றையும் வைத்து ‛பாரத்' என பெயர் மாற்றலாம் என்ற எண்ணம் வந்திருக்கலாம். இந்த எண்ணத்தில் தவறில்லை. ஆனால் அது சாத்தியமா?. உலகளவில் இந்தியாவின் பெயர் அனைவரின் காதிலும் ஒலித்து சாதித்து விட்டது. இதனால் இந்தியா எனும் பெயரை மாற்றாமல் இருப்பது தான் சிறப்பு என நான் நினைக்கிறேன்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications