Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாஜக தோற்குமா? 26 கட்சிகள் இருக்கட்டும்! எதிர்க்கட்சி கூட்டணி எதிர்கொள்ளும் 5 மேஜர் சவால்கள்! ஆஹா

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் நோக்கத்தில் காங்கிரஸ், திமுக உள்பட 26 எதிர்க்கட்சிகள் இணைந்து ‛இந்தியா' என்ற பெயரில் கூட்டணியை உருவாக்கி உள்ளன. இந்நிலையில் தான் 26 கட்சிகளுக்கு அப்பாற்பட்டு பாஜகவை வீழ்த்த வேண்டும் என்றால் 5 முக்கிய சவால்களை இந்த கூட்டணி சுமூகமாக எதிர்கொள்ள வேண்டும் என்ற முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அந்த சவால்கள் என்னென்ன?

அடுத்த ஆண்டு நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. எதிர்க்கட்சிகளின் முதல் ஆலோசனை கூட்டம் பீகார் மாநிலம் பாட்னாவில் கடந்த மாதம் நடந்தது. இதில் மொத்தம் 17 கட்சிகள் பங்கேற்றன. இந்த கூட்டம் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் நடந்து முடிந்தது.

 INDIA vs Modi: Oppositions new alliance which included 26 parties will face 5 Major Challenges, details here

இதையடுத்து எதிர்க்கட்சிகளின் 2வது ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம், நேற்று என 2 நாட்கள் பெங்களூரில் நடந்தது. காங்கிரஸின் சோனியா காந்தி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் மொத்தம் 26 கட்சிகள் பங்கேற்றன.

26 கட்சிகள்: தமிழகத்தில் இருந்து திமுக, விடுதலை சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்டி வேறு சில கட்சிகள் பங்கேற்றன. மேலும் 2 கம்யூனிஸ்ட்டுகள், திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதாதளம், ஐக்கிய ஜனதாதளம், சமாஜ்வாதி, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா உள்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் செயல்பட்டு வரும் 26 கட்சிகள் பங்கேற்றன. இந்த கூட்டத்தில் 26 கட்சிகளை ஒருங்கிணைந்த கூட்டணி உறுதி செய்யப்பட்டது.

இந்தியா என பெயர்: இந்த 26 கட்சிகள் அடங்கிய இந்த கூட்டணிக்கு இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் இந்த கூட்டணிக்கு Indian National Developmental Inclusive Alliance (I-N-D-I-A) என பெயர் வைக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வாய்ப்பில்லை எனக்கூறி வந்த நிலையில் இத்தகைய நிகழ்வு நடந்து முடிந்துள்ளது. இது எதிர்க்கட்சிகளின் முதல் வெற்றி என்றே கூறலாம்.

5 சவால்கள்: இருப்பினும் 2024 நாடாளுமன்ற தேர்தல் வரையும் இந்த கூட்டணியை சுமூகமாக கொண்டு செல்வதும், தேர்தலில் வெற்றி பெற்ற பிறகும் கூட்டணி ஆட்சியை நடத்துவதிலும் பெரும் சவால்கள் இருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றன. அதன்படி பார்த்தால் தற்போது எதிர்க்கட்சிகளின் கூட்டணியை பொறுத்தமட்டில் அவர்களின் முன்பு 5 முக்கிய சவால்கள் உள்ளன.

முதல் சவால்: பாட்னா மற்றும் பெங்களூரில் நடந்த எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் வேட்பாளர் யார்? என்பது பற்றி எந்த கட்சிகளும் வாய்த்திறக்கவில்லை. பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத்பவார் உள்ளிட்டோர் பிரதமர் பதவி மீது கண் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் பிரதமர் பதவியை விட்டு கொடுக்க காங்கிரஸ் வந்துள்ளதாக நேற்று தகவல்கள் வெளியான நிலையில் அந்த கட்சியின் எதிர்கால செயல்பாடு எப்படி இருக்கும் என்பதை கவனிக்க கூடியது.

ஒரு கூட்டணி பல தலைவர்கள்: மேலும் 2 கூட்டங்களிலும் கூட பிரதமர் வேட்பாளர் யார்? என்பது பற்றிய கேள்வியே எழவில்லை. இது எவ்வளவு நாள் இப்படி தொடரும். ஒருவேளை எதிர்க்கட்சிகளின் கூட்டணி வென்றால் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் பிரதமர் பதவி கோரினால் என்ன செய்ய வேண்டும்? என்பதில் தலைவர்கள் முன்கூட்டியே விவாதிக்க வேண்டியது அவசியமாகும். உண்மையில் இது பெரிய சவாலாகவே இருக்கும். ஏனென்றால் ஒரே கட்சியில் உயர்பதவியை பெற பலபேர் போட்டியிடும் இன்றைய நாளில் பல கட்சிகளை சேர்ந்தவர்கள் பிரதமர் பதவியை கேட்கும் பட்சத்தில் அதில் சமரசத்தை கொண்டு வருவது சிரமமான ஒன்றாக தான் இருக்கும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

2வது சவால்: தற்போது கூட்டணியில் இணைந்துள்ள கட்சிகள் மாநிலங்கள் அடிப்படையில் பார்த்தால் ஆளும் கட்சியாகவும், எதிர்க்கட்சியாகவும் உள்ளன. இதனால் நாடாளுமன்ற கூட்டணியை கருத்தில் கொண்டு மாநில அரசியலின்போது ஒருவருக்கொருவர் பிற கட்சிகளை விமர்சனம் செய்யாமல் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் மாநில அரசியல் சார்ந்த விமர்சனங்களை பாஜக கையில் எடுத்து தேசிய அளவிலான கூட்டணியை விமர்சிக்க வாய்ப்புள்ளது. இது நடக்கும் பட்சத்தில் பாஜக அதனை பயன்படுத்தி மக்கள் மத்தியில் எடுத்து செல்லலாம். இதனால் இதில் மிகவும் கூட்டணி கட்சிகள் கவனமாக இருக்க வேண்டும்.

3வது சவால்: கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட கட்சிகள் குறிப்பிட்ட மாநிலங்களில் செல்வாக்குடன் உள்ளன. இதனால் நாடாளுமன்ற தேர்தலில் தொகுதிகளை எப்படி பங்கீட்டு கொள்ள உள்ளனர் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் இத்தகைய பிரச்சனை என்பது வராது. ஏனென்றால் தற்போது திமுக கூட்டணியை பொறுத்தமட்டில் திமுக செல்வாக்குடன் உள்ளது. பிற கட்சிகளும் திமுக கூட்டணியில் தான் உள்ளது. இதனால் தொகுதி பங்கீட்டில் சுமூகமாக முடித்து கொள்ள முடியும். ஆனால் மேற்கு வங்கம், கேரளா, பஞ்சாப், டெல்லியில் நிலைமை அப்படியாக இல்லை.

4 மாநிலத்தில் சிரமம்: உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இந்த 4 மாநிலங்களில் தொகுதி பங்கீடு இது மிகப்பெரிய சவாலாகும். உதாரணமாக மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி செல்வாக்குடன் ஆட்சியில் உள்ளது. அங்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளில் செல்வாக்குகள் குறைந்துள்ளன. இத்தகைய சூழலில் குறைந்த சீட் இருகட்சிகளுக்கு வழங்கினால் காங்கிரஸ் தலைவர்கள் ஏற்கமாட்டார்கள். அதேவேளையில் மம்தா பானர்ஜியும் அதிக இடங்களை வழங்க விரும்பமாட்டார். இப்படி பஞ்சாப், டெல்லியில் ஆம்ஆத்மி மற்றும் காங்கிரஸ் இடையேயும், கேரளாவில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் இடையேயும் கூட்டணி உடன்பாடு ஏற்படுவதில் சிக்கல் ஏற்படலாம். இதனை சுமூகமாக முடித்து வைப்பது இந்தியா என பெயரிடப்பட்ட 26 கட்சிகளின் கூட்டணி முன்பு இருக்கும் 3வது முக்கிய சவாலாகும்.

4வது சவால்: அதாவது கட்சி தலைவர்கள் தற்போது கூட்டணியை முடிவு செய்துவிட்டனர். ஆனால் கட்சி தொண்டர்களின் மனநிலை என்பது வேறு வகையில் இருக்கலாம். உதாரணமாக காலம்காலமாக ஒரு தொகுதியில் குறிப்பிட்ட கட்சியின் வேட்பாளரை ஒருவர் விமர்சனம் செய்து பிரசாரம் செய்து வாக்கு சேகரித்து வரலாம். ஆனால் அந்த தொகுதியில் தற்போது இருவரையும் சேர்ந்து தேர்தல் பணி செய்ய நிர்பந்திக்கும் சூழல் இந்த கூட்டணியால் உருவாகலாம். மேலும் அதில் ஒருவருக்கு மட்டுமே போட்டியிட வாய்ப்பு வழங்கும்போது இன்னொருவக்கு சீட் கிடைக்காது. இதனால் அவர் அதிருப்தி அடைய வாய்ப்புள்ளது. இத்தகைய அதிருப்தியாளர்களை சமாதானம் செய்து இருதரப்பையும் ஒருங்கிணைந்து தேர்தல் பணியாற்ற வைப்பது என்பது மிகப்பெரிய சவாலாக இருக்கும்.

5வது சவால்: 1079, 1980 காலக்கட்டத்தில் இந்தியாவில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக மிகப்பெரிய அதிருப்தி எழுந்தது. இதையடுத்து பல கட்சிகள் கூட்டணியை முன்னெடுத்தன. அந்த வகையில் இந்த நூற்றாண்டில் முதல் முறையாக பாஜகவை எதிர்க்கும் முனைப்பில் 26 எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு கூட்டணி அமைத்துள்ளன. இதனால் முறையான திட்டமிடலும் இந்த கூட்டணி கட்சி தலைவர்கள் பாஜகவுக்கு எதிரான பிரச்சனையை முன்வைத்து தேர்தலை எதிர்கொள்ள வேண்டும். மேலும் கடந்த 2 முறை நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. அப்போது இந்த கட்சிகள் அனைத்து தனித்து செயல்பட்டன. தற்போது ஓரணியில் திரண்டுள்ளதால் ஒவ்வொரு தலைவர்களின் தங்களின் செல்வாக்கு மற்றும் கட்சியை பயன்படுத்தி பாஜகவை வீழ்த்த தீவிரமாக பணியாற்ற வேண்டும். ஒருவேளை இத்தகைய கூட்டணி மூலம் பாஜகவை வீழ்த்தாவிட்டால் உண்மையிலேயே இந்த கட்சிகளும் நாடாளுமன்ற தேர்தல் பெரும் பின்னடைவாக பார்க்கப்படும். இது 5வது சவாலாக பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+