மெரினாவை தொடர்ந்து தாம்பரம் விமானப்படை தளத்தில் சாகச நிகழ்வு.. தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த தளபதி!
சென்னை: இந்திய விமானப்படையின் 92து ஆண்டு விழாவை கொண்டாடும் விதமாக சென்னை தாம்பரம் விமானப்படை தளத்தில் விமானங்களின் சாகச நிகழ்வு மற்றும் விமானப்படை வீரர்களின் அணிவகுப்பு நிகழ்வு நடைபெற்று வருகிறது.
இந்திய விமானப்படையின் 92வது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் விமானப் படை சாகச நிகழ்ச்சி நேற்று முன்தினம் (அக்டோபர் 6) நடைபெற்றது. சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியைப் பார்வையிட லட்சக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் சென்னை மெரினா கடற்கரையில் திரண்டனர்.

இதனால் மெரினா கடற்கரை சுற்றுவட்டாரத்தில் மிகக் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதற்கிடையே, விமான சாகச நிகழ்வைப் பார்க்க நீண்ட நேரம் வெயிலில் நின்றதாலும், நீர்ச்சத்து இழப்பு ஏற்பட்டதாலும் நூற்றுக்கணக்கானோர் மயக்கமடைந்தனர். அவர்களில் 5 பேர் உயிரிழந்தனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இந்திய விமானப்படையின் 92து ஆண்டு விழாவை கொண்டாடும் விதமாக சென்னை தாம்பரம் விமானப்படை தளத்தில் விமானங்களின் சாகச நிகழ்வு மற்றும் விமானப்படை வீரர்களின் அணிவகுப்பு நிகழ்வு இன்று நடைபெற்று வருகிறது.
தாம்பரம் விமானப்படை தளத்தில் விமானப்படை வீரர்கள், பல்வேறு சாகச நிகழ்வுகளை அரங்கேற்றியுள்ளனர். சென்னை மெரினாவில் நடைபெற்றது போலவே பல்வேறு விமானங்கள், ஹெலிகாப்டர்கள் வானில் சாகசங்கள் செய்தன. மேலும், விமானப்படை வீரர்கள் மிடுக்கான அணிவகுப்பு நடத்தினர்.
மெரினா கடற்கரையில் நடந்த விமான சாகச நிகழ்வுக்கு சிறப்பான ஒத்துழைப்பு அளித்த தமிழ்நாடு அரசு, சென்னை நிர்வாகத்திற்கு நன்றி என 92வது விமானப்படை தினத்தை முன்னிட்டு தாம்பரம் விமானப்படை தளத்தில் நடந்த நிகழ்ச்சியில் விமானப்படை தளபதி அமர் ப்ரீத் சிங் பேசியுள்ளார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications