நடந்தது என்ன? அந்த 8 மணி நேரம்.. சுகோய்-30MKI ஜெட்களை வானிற்கு அனுப்பிய விமானப்படை! நடுவானில் திடுக்
சென்னை: இந்திய விமானப்படை கடந்த சில நாட்களாக திடீரென வான்வெளி பயிற்சியை அதிகரித்து உள்ளது பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
சமீபத்தில்தான் இந்திய விமானப்படை ரபேல் விமானங்களை வைத்து ரோந்து பணிகளை செய்தது. இந்திய பெருங்கடலில் 4 ரபேல் விமானங்கள் திடீரென 6 மணி நேர நீண்ட பயிற்சியில் ஈடுபட்ட சம்பவம் கவனத்தை ஈர்த்து உள்ளது.
பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே கடந்த 2020ம் ஆண்டு இந்தியாவின் விமான படையில் ரபேல் விமானங்கள் இணைக்கப்பட்டது. ஏற்கனவே பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரபேல் விமானங்கள் இந்தியா வந்த நிலையில் கடந்த சில வருடங்களில் கூடுதல் விமானங்கள் இந்தியா வந்துள்ளன.

2016ல் போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி 36 ரபேல் விமானங்கள் இந்தியா வர வேண்டும். மீதி விமானங்கள் இந்தியாவில் ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனம் மூலம் , பிரான்சின் டஸால்ட் நிறுவனத்தின் உதவியுடன் தயாரிக்கப்படும்.
இந்தியாவிற்கு 2020ல் ஜூன் மாதம் ஒரு ரபேல் விமானம் வந்தது. அதன்பின் 5 ரபேல் விமானங்கள் ஜூலை 29ம் தேதி வந்தது. இந்த ரபேல் விமானங்கள் இந்திய விமானப்படையுடன் இணைக்கப்பட்டது. இதற்கான இணைப்பு விழா திருவிழா போல நடந்தது. ஹரியானாவில் இருக்கும் அம்பாலா படைத்தளத்தில் இந்த விமானங்கள் இந்திய விமானப்படையுடன் இணைக்கப்பட்டது.
அதன்பின் மீண்டும் கூடுதலாக 5 ரபேல் விமானங்கள் இந்திய ராணுவத்துடன் இணைக்கப்பட்டது. இதற்கான விழா அம்பாலாவில் நடந்தது. ரபேல் விமானங்களை இந்திய ராணுவத்துடன் இணைக்கும் விழாவிற்கு பிரான்ஸ் பாதுகாப்பு துறை அமைச்சர் புளோரன்ஸ் பார்டி மற்றும் இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் வந்தனர். மிக பிரம்மாண்டமாக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
ரோந்து: கடந்த ஒரு வாரத்திற்கு முன்புதான் ரபேல் விமானங்களை வைத்து இந்தியா ரோந்து பணிகளை செய்தது. இந்த நிலையில் நேற்று இந்திய விமானப்படையின் Su-30MKI போர் விமானம் இந்தியப் பெருங்கடல் பகுதியில் எட்டு மணி நேர பயணத்தை மேற்கொண்டது.
சுகோய் சமீபத்தில் மேற்கொண்ட மிக நீண்ட கடல் ஆபரேஷனாக இது பார்க்கப்படுகிறது. இந்த விமானம் நடுவானில் எரிபொருள் நிரப்பி சோதனைகளை செய்தது. அதேபோல் சில சிறிய ரக விமானங்கள் உடன் பயணித்தன. நாட்டின் கிழக்கு மற்றும் மேற்கு கடற்பரப்புகளில் ரோந்து பணிகளை இந்த விமானங்கள் செய்தன.
சமீபத்தில்தான் மேற்கு வங்கத்தில் இருக்கும் ஹசிமாரா போர் விமான தளத்தில் இருந்து 4 ரபேல் விமானங்கள் அதிரடி போர் பயிற்சிகளை நேற்று மேற்கொண்டன. ரபேல் விமானங்கள் இந்திய பெருங்கடலில் வேகமாக சீறிப்பாய்ந்து பயிற்சி மேற்கொண்டது. 6 மணி நேரம் விடாமல் இந்த பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.
பல விமானங்களுக்கு நடுவே செல்வது, அதிக ஜி போர்சை அடைவது, இலக்கை தாழ்வாக வேகமாக அடைவது, துல்லியமாக தாக்குவது, குறித்த நேரத்தில் திரும்பி வருவது போன்ற பயிற்சிகளை, சோதனைகளை வெற்றிகரமாக இந்த ரபேல் விமானங்கள் செய்து முடித்தன.
இந்திய பெருங்கடலில் இந்தியாவிற்கு சீனா அச்சறுத்தல் அளித்து வரும் நிலையில்தான் ரபேல் விமானங்களை இந்தியா களமிறக்கி உள்ளது. சீனாவிடம் சுகோய் விமானங்கள் மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 5ம் தலைமுறை விமானங்கள் நிறைய இருக்கிறது. அதேபோல் சீனாவிடம் ரபேலுக்கு பதில் ஜெ 20 போன்ற அதே திறன் கொண்ட விமானங்கள் உள்ளது. இதனால் சீனாவின் ஜெ வகை விமானங்களுக்கு பதிலடி கொடுக்க எங்களிடமும் விமானம் உள்ளது என்பதை பறைசாற்றும் விதமாக இந்தியா ரபேல் விமானங்களை களமிறக்கி உள்ளது.

ரபேல் விமானம்: ரபேல் இரண்டு இன்ஜின் கொண்ட மல்டி ரோல் வகை காம்பேட் ரக MMRCA வகை விமானம் ஆகும். ரபேல் என்பது ஒரு வகையான, புதிய தலைமுறை போர் விமானம் ஆகும். இதன் மூலம் போர் சமயங்களில் ஒரு நாடு எளிதாக தாக்குதல் நடத்த முடியும். சர்ஜிக்கல் ஸ்டிரைக்குகளை எளிதாக தூரத்தில் இருந்து செய்ய முடியும். அமெரிக்காவின் எப் 14ஐ விட இது சக்தி வாய்ந்தது. அணு ஆயுதங்களை ஏந்தி சென்று தாக்கும் வல்லமை கொண்டது இந்த விமானங்கள். மிக மோசமான சூழ்நிலையில் கூட இது தாக்கு பிடிக்கும்.
ரபேலை வாங்குவதற்காக பல நாடுகள் இதற்காக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. முதலில் அமெரிக்கா, ஐரோப்பா, ரஷ்யா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் மற்ற நாடுகளை விட குறைந்த விலையில் விமானம் தருவதாக பிரான்ஸ் கூறிய காரணத்தால் இந்த ஒப்பந்தம் பிரான்ஸ் நாட்டுடன் போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications