இந்தியன் வங்கி.. சேமிப்பு கணக்கு இருக்கா? சென்னை அசோக் நகர் இந்தியன் வங்கியில் என்னாச்சு தெரியுமா?
சென்னை: வங்கி கணக்குகளில், மோசடி பேர்வழிகளின் கைவரிசை பெருகிவருவதால், பொதுமக்கள் அலர்ட்டாக இருக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தியபடியே உள்ளனர்.
சென்னை எம்ஜிஆர் நகர் சத்யா நகரில் வசித்து வருபவர் ஏழுமலை. இவர் மாநகரப் பேருந்து பஸ் கண்டக்டராக கே.கே. நகர் பணிமனையில் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த மாதம் 24- ந் தேதி அசோக் நகர் பகுதியில் இருந்து கேகே நகர் டிப்பேவுக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார்..

அப்போது அந்த வழியாக அதே பணிமனையில் டிரைவராக பணிபுரிந்து வரும் அலெக்சாண்டர் ராஜா என்பவர், ஏழுமலையின் பைக்கில் லிப்ட் கேட்டு ஏறியிருக்கிறார்.
பஸ் டிப்போ: கேகே நகர் பஸ் டிப்போ அருகில் வந்தபோது, பைக் திடீரென விபத்துக்குள்ளானது.. இதில் 2 பேருமே கீழே விழுந்துவிட்டனர். அப்போது, ஏழுமலையின் பர்ஸிலிருந்து, ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு போன்ற ஆவணங்களும் கீழே விழுந்துள்ளன.. இதை நைசாக, அலெக்சாண்டர் ராஜா எடுத்து தன்னுடைய பாக்கெட்டில் எடுத்து வைத்துக் கொண்டுள்ளார்.
ஏழுமலைக்கு அசோக் நகர் இந்தியன் வங்கியில் சேமிப்பு கணக்கு உள்ளதால், அதே வங்கிக்கு சென்றார் அலெக்சாண்டர் ராஜா.. ஆதார் கார்டு, ஏடிஎம் கார்டு போன்றவற்றை வங்கியில் காண்பித்து, தன்னுடைய பாஸ்புக் காணவில்லை என்றும், அக்கவுண்ட்டில் பணம் எடுக்க வேண்டும் என்றும் சொல்லி 800 ரூபாயை, ஏழுமலையின் அக்கவுண்ட்டிலிருந்து எடுத்துள்ளார்.
கையெழுத்து: அச்சுஅசலாக ஏழுமலையின் கையெழுத்தை போலவே போலியாக போட்டு அந்த 800 ரூபாய் எடுத்துள்ளார்.. கையெழுத்தில் வித்தியாசம் இருக்கிறதே என்று வங்கியில் கேட்டதற்கு, ரொம்ப நாளாகவே, இப்படிதான் கையெழுத்து மாறிவிட்டது, அதனால்தான் வங்கிக்கு நேரடியாக வந்து பணம் எடுப்பதாக சொல்லி சமாளித்துள்ளார் அலெக்சாண்டர் ராஜா.
அதுமட்டுமல்ல, ஏழுமலையின் ஆதார் அட்டையில் போலியாக தன்னுடைய போட்டோவை மார்பிங் செய்து தந்து, வங்கியிலிருந்து புதிய பாஸ்புக் வேண்டும் என்றும் கேட்டாராம்.. இதைவிட பெரிய ஹைலைட் என்னவென்றால், 10 லட்ச ரூபாய் தனக்கு கடன் வேண்டுமென்றும், இந்தியன் வங்கிக் கிளையில் கேட்டு அதற்கான விண்ணப்பத்தையும் பூர்த்தி செய்து தந்திருக்கிறாராம் அலெக்சாண்டர் ராஜா.
விசாரணை: கடந்த 13-ந் தேதி 800 ரூபாய் வங்கி கணக்கில் எடுக்கப்பட்டதாக மெசேஜ் வந்ததுடன், அதல், இந்தியன் வங்கி மூலம் 10 லட்ச ரூபாய் கடன் பெற்றுக் கொள்ளலாம் என்று மெசேஜ் வரவும் பதறியடித்து கொண்டு சென்றிருக்கிறார் ஏழுமலை.. அப்போதுதான், மொத்த விஷயமும் தெரியவந்துள்ளது. அந்த நேரம் பார்த்து, வங்கிக்கு வந்த அலெக்சாண்டர் ராஜாவை, வங்கி ஊழியர்கள் கையும் களவுமாக பிடித்து, போலீசிலும் ஒப்படைத்துள்ளனர். விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது.
சமீபகாலமாகவே, வங்கிகளின் பெயர்களை சொல்லி மோசடி வேலைகள் அரங்கேறி கொண்டிருக்கின்றன.. அதனால்தான், வாடிக்கையாளர்கள் யாரும், தங்களுடைய வங்கிக்கணக்கு குறித்த அனைத்து விவரங்களையும் ரகசியமாக வைக்க வேண்டும், யாரிடமும் பகிர வேண்டாம். மோசடியாளர்கள் புதுவிதமான வகையில் அணுகலாம் என்று வங்கிகள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றன.
போலீஸ் அலர்ட்: அதேபோல, வங்கி மேலாளர்கள் ஒருபோதும் ஓடிபி கேட்கவே கேட்கவே மாட்டார்கள். அதனால், யாரேனும் உங்கள் வங்கி கணக்கில் இணைக்கப்பட்டுள்ள செல்போன் எண்ணுக்கு வந்த ரகசிய எண்ணை கேட்டால், தெரிவிக்க வேண்டாம்.. இணைப்பையும் துண்டித்துவிடுங்கள் என்று அறிவுறுத்தியபடியே உள்ளனர் போலீசார்..!!
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications