Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கம் என்றாலே பலருக்கும் முதலில் நினைவிற்கு வருவது ஆபரணங்கள்தான்.. ஆனால் கடந்த சில ஆண்டுகளில் பொருளாதார சூழல் மாறியதன் காரணமாக, தங்கம் என்பது ஒரு அலங்காரப் பொருளாக மட்டும் அல்லாமல் அவசர காலங்களில் கைகொடுக்கும் நம்பகமான முதலீட்டாகவும் மாறி வருகிறது.. இதில் வங்கிகளின் பங்கும் முக்கியம் வாய்ந்தவை. அந்தவகையில், இந்தியன் வங்கியின் சிறப்பு லோன் திட்டம் பற்றி சுருக்கமாக தெரிந்து கொள்ளலாம்.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டிருப்பதால், பலர் தங்களிடம் உள்ள நகைகளை அடமானம் வைத்து உடனடி நிதி தேவைகளை பூர்த்தி செய்து கொள்வது அதிகரித்து வருகிறது..

Indian Bank Gold Loan

இந்தியன் வங்கி நகைக்கடன்

ஒரு காலத்தில் நகைக்கடன் என்றாலே மக்கள் முதலில் நினைத்தது தனியார் நிதி நிறுவனங்களைத்தான்.. ஆனால் தற்போது அந்த நிலை மாறி, பாதுகாப்பான மற்றும் குறைந்த வட்டி வசதியை நாடி பலர் பொதுத்துறை வங்கிகளை நோக்கி திரும்பத் தொடங்கியுள்ளனர்.. அந்த வகையில் இந்தியன் வங்கி வழங்கும் நகைக்கடன் திட்டங்கள் பலரின் கவனத்தை ஈர்த்து வருகின்றன..

இந்தியன் வங்கியில் நகைக்கடன் பெறுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, தங்கத்தின் மதிப்பில் கணிசமான அளவு வரை கடன் வழங்கப்படுவதுதான்..

பொதுவாக ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின்படி, தங்கத்தின் மதிப்பின் சுமார் 75 சதவீதம் வரை கடன் வழங்கப்படலாம்.. சில விவசாயத் தொடர்பான திட்டங்களில் இதைவிட அதிக அளவிலும் கடன் வழங்கப்படும் வாய்ப்பு இருக்கிறது.. இதனால், உடனடி பணத் தேவையை சமாளிக்க பலருக்கும் இந்த வசதி மிகவும் உதவிகரமாக உள்ளது..

அக்ரி லோன் திட்டம்

விவசாயிகளை பொருத்தவரை இந்தியன் வங்கியின் "அக்ரி கோல்டு லோன்" திட்டம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.. இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகள் தங்களிடம் உள்ள தங்க நகைகளை அடமானம் வைத்து 3 லட்சம் ரூபாய் வரை கடன் பெற முடியும்..

இதற்கான வட்டி விகிதம் பொதுவாக குறைவாக இருக்கும் என்பதால், கிராமப்புறங்களில் இந்த திட்டம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.. விவசாய நடவடிக்கைகள், விதை வாங்குதல், உரம் வாங்குதல் போன்ற தேவைகளுக்கு இந்த கடன் பலருக்கும் உதவியாக இருக்கிறது..

மேலும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கும் தங்க நகைகளை அடமானம் வைத்து கடன் பெறும் வசதி வழங்கப்படுகிறது.. இதனால் தொழில் வளர்ச்சிக்குத் தேவையான ஆரம்ப நிதியை எளிதாகப் பெற முடிகிறது.. பொதுவாக நகைக்கடன் பெறுவதற்கு மிகக் குறைந்த ஆவணங்களே போதுமானதாக இருக்கும்.. ஆதார் கார்டு, பான் கார்டு போன்ற அடிப்படை அடையாள ஆவணங்கள் இருந்தால் கடன் பெறும் செயல்முறை விரைவாக முடிவடையும்..

வட்டி விகிதம் - கடன் கட்டண விவரங்கள்

மற்றொரு முக்கிய அம்சம், வங்கிகளில் கடன் பெறும் போது வட்டி விகிதம் மற்றும் கட்டண விவரங்கள் வெளிப்படையாக இருக்கும் என்பதுதான்.. மறைமுகக் கட்டணங்கள் இல்லாமல், வாடிக்கையாளர்கள் எளிதாக கடனைப் பெறவும் திருப்பிச் செலுத்தவும் வசதி செய்யப்பட்டுள்ளது.. சில திட்டங்களில் மாதந்தோறும் வட்டி செலுத்தும் முறையும், சில திட்டங்களில் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு தொகையை செலுத்தும் வசதியும் வழங்கப்படுகிறது..

இன்றைய பொருளாதார சூழலில் தங்க நகைகள் பலருக்கும் பாதுகாப்பான நிதி ஆதாரமாக மாறி வருகின்றன.. அதனால் தனியார் நிறுவனங்களில் அதிக வட்டிக்கு கடன் வாங்குவதை விட, நம்பகமான பொதுத்துறை வங்கிகளில் நகையை அடமானம் வைத்து கடன் பெறுவது பலருக்கும் பாதுகாப்பான மற்றும் சிக்கனமான தேர்வாக பார்க்கப்படுகிறது..

சரியான தகவல்களை அறிந்து கொண்டு கடன் பெறும் போது, தங்க நகைகள் அவசர நேரத்தில் உண்மையான நிதி ஆதரவாக மாறும் என்பது நிச்சயம்..!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+