புதிய உச்சம் தொட்ட ஜிஎஸ்டி வருவாய்.. ஜனவரி மாதம் படைக்கப்பட்ட ரெக்கார்ட்.. ப்பா இவ்வளவு வசூலா?
நேற்று தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் ஜிஎஸ்டி வருவாய் அதிகரித்து வருகிறது. ஜிஎஸ்டி அதிகம் வசூலானதே சிறு, குறு தொழில்களின் வளர்ச்சி அதிகரித்துள்ளது என்பதை காட்டுகிறது
சென்னை: கடந்த ஜனவரி மாதம் ஜிஎஸ்டி வருவாய் 1.55 லட்சம் ரூபாய் என்ற நிலையை எட்டி உள்ளது. இந்திய வரலாற்றில் இது இரண்டாவது அதிக ஜிஎஸ்டி வருவாய் ஆகும்.
2023- 2024ல் பொருளாதார வளர்ச்சி 6-6.8% ஆக இருக்கும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. தற்போது நடக்கும் 2022-2023 நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 7 ஆக இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில் அடுத்த நிதி ஆண்டில் இது 6-6.8% ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் 2023-24ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். நிதியமைச்சராக பொறுப்பேற்று தொடர்ந்து அவர் தாக்கல் செய்யும் 5வது பட்ஜெட் இது.

ஜிஎஸ்டி
நேற்று தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் ஜிஎஸ்டி வருவாய் அதிகரித்து வருகிறது. ஜிஎஸ்டி அதிகம் வசூலானதே சிறு, குறு தொழில்களின் வளர்ச்சி அதிகரித்துள்ளது என்பதை காட்டுகிறது, என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் ஜிஎஸ்டி வருவாய் 1.55 லட்சம் ரூபாய் என்ற நிலையை எட்டி உள்ளது. இந்திய வரலாற்றில் இது இரண்டாவது அதிக ஜிஎஸ்டி வருவாய் ஆகும். இது தொடர்பாக நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனவரி - 31, 2023 அன்று மாலை 5:00 மணி வரை மொத்த GST வருவாய் ₹ 1,55,922 கோடி செய்யப்பட்டு உள்ளது.

அறிக்கை
செஸ் ₹ 10,630 கோடி (பொருட்களின் இறக்குமதியில் வசூலான ₹ 768 கோடி உட்பட) என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ஜிஎஸ்டி வரியில் மத்திய ஜிஎஸ்டி ₹ 28,963 கோடி , மாநில ஜிஎஸ்டி ₹ 36,730 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ₹ 79,599 கோடி ரூபாய் ஆகும். கடந்த வருடம் ஜனவரி மாதம் வாங்கியதை விட 24 மடங்கு அதிக வருவாய் இந்த வருடம் ஜிஎஸ்டி மூலம் ஜனவரி மாதம் கிடைத்து உள்ளது. இதோடு மூன்றாவது முறையாக ஜிஎஸ்டி வருவாய் 1.50 லட்சம் கோடியை தாண்டி உள்ளது.

ஜிஎஸ்டி வருவாய்
இதற்கு முன்பாக கடந்த ஏப்ரல் 2022ல் ஜிஎஸ்டி வசூல் 1.68 லட்சம் கோடியாக இருந்தது. அதற்கு பின் இப்போது மொத்த GST வருவாய் ₹ 1,55,922 கோடி செய்யப்பட்டு உள்ளது. ஜிஎஸ்டி வருவாய் அதிகரிப்பு என்பதன் மூலம் வியாபாரங்கள் அதிகரித்து உள்ளன. சிறு, குறு தொழில்கள் அதிகரித்து உள்ளன. ஜிஎஸ்டி ரிட்டர்ன் அதிகமாக தாக்கல் செய்யப்படுகிறது. பொருளாதாரம் சரியான நிலையில் இருக்கிறது என்பதை காட்டுவதாக நிதித்துறை தனது அறிக்கையில் கூறியுள்ளது.

எத்தனை பேர்
கடந்த 2022 அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் இந்தியாவில் 2.42 கோடி பேர் ஜிஎஸ்டி ரிட்டர்ன் தாக்கல் செய்துள்ளனர். அதற்கு முன்னதாக 2021ல் அதே காலாண்டில் 2.19 கோடி பேர் இதை தாக்கல் செய்தனர். இதன் மூலம் ஜிஎஸ்டி தாக்கல் செய்வது அதிகரித்து உள்ளது உறுதியாகிறது. பெருந்தொற்றில் இருந்து இந்தியா வேகமாக மீண்டுள்ளது. பொருளாதார ஜிடிபி வளர்ச்சியானது உள்நாட்டு தேவை மற்றும் முதலீடு ஆகியவற்றின் மூலம் உயரும் என்ற நம்பிக்கை உள்ளது, என்று இந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications