சென்னையில் பிரிந்த உயிர்.. நெஞ்சுவலியால் இந்திய கடலோர காவல்படை தலைமை இயக்குநர் ராகேஷ் பால் மரணம்
சென்னை: இந்திய கடலோர காவல்படையின் தலைமை இயக்குநர் ராகேஷ் பால் நெஞ்சுவலியால் சென்னையில் இன்று மரணமடைந்தார். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் காலமானார்.
தமிழக முன்னாள் முதல்வரும், திமுகவின் மாஜி தலைவருமான மறைந்த கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி அவரது நினைவை போற்றும் வகையில் 100 ரூபாய் நினைவு நாணயம் இன்று வெளியிடப்பட்டது. சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த விழாவில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 100 ரூபாய் நினைவு நாணயத்தை வெளியிட்டார். அதனை முதல்வர் ஸ்டாலின் பெற்று கொண்டார்.

முன்னதாக சென்னையில் கடலோர காவல்படையின் கடல்சார் மீட்பு மற்றும் ஒருங்கிணைப்பு மையத்தின் புதிய கட்டடத்தை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று திறந்து வைத்தார். இந்த விழாவை ஒருங்கிணைக்கும் பணிக்காக இந்திய கடலோர காவல்படையின் தலைமை இயக்குநர் ராகேஷ் பால் சென்னை வந்திருந்தார்.
இந்நிலையில் தான் இன்று மதியம் சுமார் 2 மணியளவில் இந்திய கடலோர காவல்படையின் தலைமை இயக்குநர் ராகேஷ் பாலுக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் பரிசோதனைகள் செய்யப்பட்டனர். மேலும் ஆஞ்சியோ பரிசோதனை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். இத்தகைய சூழலில் தான் திடீரென்று இன்று மாலையில் ராகேஷ் பால் இறந்தார்.
மரணமடைந்த ராகேஷ் பால் உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர். இவர் இந்திய கடலோர காவல்படையின் (ஐசிஜி) 25 வது தலைமை இயக்குநராக கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டார். இந்திய கடற்படை அகாடமியின் முன்னாள் மாணவரான அவர், ஜனவரி 1989ல் இந்திய கடலோர காவல்படையில் சேர்ந்தார். கொச்சியில் உள்ள இந்திய கடற்படை பள்ளி துரோணாச்சார்யாவில் கன்னேரி மற்றும் ஆயுத அமைப்புகளில் தொழில்முறை நிபுணத்துவத்தையும், இங்கிலாந்தில் எலக்ட்ரோ-ஆப்டிக்ஸ் ஃபயர் கன்ட்ரோல் சொல்யூஷன் படிப்பையும் பெற்றுள்ளார்.
34 ஆண்டுகால அனுபவம் பெற்றுள்ள அவர், காந்திநகரின் கமாண்டர் கடலோர காவல்படை மண்டலம் (வடமேற்கு), துணை தலைமை இயக்குநர் (கொள்கை மற்றும் திட்டங்கள்) மற்றும் டெல்லி கடலோர காவல்படை தலைமையகத்தில் கடலோர காவல்படை கூடுதல் தலைமை இயக்குநர். இது தவிர, டெல்லியில் உள்ள கடலோரக் காவல்படை தலைமையகத்தில் இயக்குநர் (உள்கட்டமைப்பு மற்றும் பணிகள்) மற்றும் முதன்மை இயக்குநர் (நிர்வாகம்) போன்ற பல்வேறு மதிப்புமிக்க பணியாளர் பொறுப்புகளை வகித்துள்ளார்.
ஐசிஜிஎஸ் சமர்த், ஐசிஜிஎஸ் விஜித், ஐசிஜிஎஸ் சுசேதா கிருபளானி, ஐசிஜிஎஸ் அகல்யாபாய் மற்றும் ஐசிஜிஎஸ் சி -03 ஆகிய கப்பல்களில் தலைமை பொறுப்பு வகித்துள்ளார். இவரது சேவையை பாராட்டி கடந்த 2013-ம் ஆண்டு கடலோர காவல்படை பதக்கம் வழங்கப்பட்டது. முன்னதாக கடந்த 2018ம் ஆண்டு குடியரசுத் தலைவர் கடலோர காவல்படை பதக்கமும் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications