Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

போய் வந்த உயிர்..பாகிஸ்தானிக்காக துடிக்கும் இந்திய ‘இதயம்’! அள்ளிக் கொடுத்த உறவுகள்.. சாதித்த சென்னை

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு டெல்லியைச் சேர்ந்தவரின் இதயம் சென்னையில் பொருத்தப்பட்டிருக்கிறது. கையறு நிலையில் தவித்த இளம் பெண்ணிற்கு தமிழகத்தின் தொண்டு நிறுவனம் ஒன்றின் மூலம் கைகொடுக்க மரணத்தை அருகில் நின்று பார்த்து விட்டு திரும்பியிருக்கிறார் அந்த பெண்..

இந்தியாவின் மருத்துவ தலைநகரமாக சென்னை பார்க்கப்படுகிறது. காரணம் நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கிலான அறுவை சிகிச்சைகள் இங்கு செய்யப்படுகின்றன. மிக சிக்கலான மூளை அறுவை சிகிச்சை இருதய மாற்று அறுவை சிகிச்சை போன்றவை கூட சென்னையில் சாதாரணமாக செய்யப்படுகிறது.

Indian heart beats inside 19 year old girl from Karachi pakistan

இதன் காரணமாக அமெரிக்கா இங்கிலாந்து போன்ற வளர்ந்த நாடுகளில் இருப்பவர்கள் கூட மருத்துவ சுற்றுலா மூலம் சென்னையில் வந்து தங்கி இருந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

இதய மாற்று சிகிச்சை: ஆனால் பணக்காரர்களுக்கு மட்டுமே இருந்த அந்த வசதி தற்போது பாகிஸ்தானை சேர்ந்த வறுமையில் வாடிய ஏழைப் பெண் ஒருவரின் உயிரையும் காப்பாற்றி இருக்கிறது. நேற்று இளம் பெண்ணுக்கு இதயமாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட தகவல்கள் வெளியாகி பலரையும் நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கிய நிலையில் அந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது எப்படி? அவருக்காக உதவிய நல்ல உள்ளங்கள் யார் என்பது குறித்து தற்போது பார்க்கலாம்

பாகிஸ்தான் பெண்: பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரைச் சேர்ந்த 19 வயது இளம் பெண்ணான ஆயிஷா, 2019ஆம் ஆண்டு இதய நோய் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டது. தொடர்ந்து சிறப்பு சிகிச்சைக்காக சென்னை வந்த போது அவரது உடல்நிலை மேலும் மோசமானது. மீண்டும் மீண்டும் சென்னைக்கு வந்த அவர் எம்ஜிஎம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் குறிப்பாக 2019ஆம் ஆண்டு அவர் சென்னை வந்த போது அவருடைய இதயம் செயல்படாமல் போய்விட்டது. தொடர்ந்து சிபிஆர் மூலம் அந்த பெண்ணின் உயிரை காப்பாற்றினார் சென்னை மருத்துவர்கள்.

சென்னையில் சிகிச்சை: மீண்டும் பாகிஸ்தானுக்குச் சென்ற அவரின் உடல்நிலை மோசமானதையடுத்து அங்குள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு போதிய உபகரணங்கள் இல்லாததை அடுத்து அவர் மீண்டும் சென்னை வந்தார். இருந்த போதும் பாகிஸ்தானை சேர்ந்த அந்த இளம் பெண்ணுக்கு பொருளாதார ரீதியாக பல சிக்கல்கள் இருந்தது. தந்தையை இழந்த அவர் தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வந்தார். இதை அடுத்து பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகள் அரசு வழிமுறைகளுக்குப் பிறகு அவருக்கு இந்தியாவிலேயே இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

உதவிய உள்ளங்கள்: இதயத்திற்காக இந்தியாவைச் சேர்ந்த பலர் காத்திருந்த நிலையில் சுமார் பத்து மாதங்களுக்கு பிறகு ஆயிசாவுக்கு இந்தியர் ஒருவரின் இதயம் கிடைத்தது. இதையடுத்து டெல்லியை சேர்ந்த ஒருவரின் இதயம் விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டு ஆயிஷாவுக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. தற்போது பூரண நலத்துடன் இருக்கிறார் ஆயிஷா.. தற்போது ஆயிஷா நலமாக இருக்கும் நிலையில் இந்தியாவில் இருக்கும் போதும் தான் தனது சொந்த வீட்டில் இருப்பதைப் போல உணர்வதாகவும் பாகிஸ்தான் பெண்ணுக்குள் ஒரு இந்திய இதயம் துடிக்கிறது என நினைக்கும் போது தனக்கு மிகவும் நெகிழ்ச்சிகரமாக இருக்கிறது என கூறுகிறார் ஆயிஷாவின் தாயான சனோஃபர்.

நெகிழ்ச்சியுடன் நன்றி: இந்த நிலையில் ஆயிஷாவுக்கு இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய மத்திய அரசும் ஏராளமான நல்லுள்ளங்களும் உதவி செய்திருப்பது தற்போது தெரிய வந்திருக்கிறது. ஆயிஷாவுக்கு செய்யப்பட்ட சிகிச்சைக்கு சுமார் 40 லட்சம் ரூபாய் வரை செலவாகும் நிலையில் ஐஸ்வரியம் என்ற தொண்டு நிறுவனத்தின் மூலம் பலர் அவருக்கு உதவி செய்திருக்கின்றனர். அது மட்டும் இல்லாமல் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருந்த போதும் மத்திய அரசு அவருக்காக பல்வேறு விதிமுறைகளை தளர்த்திய பிறகு அவருக்கு இதயம் கிடைத்திருக்கிறது. . இதன் மூலம் இந்தியர்கள் பலரது உதவியின் மூலமே தான் தற்போது உயிரோடிருப்பதாகக் கூறுகிறார் ஆயிஷா.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+