சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இவிஎம் மிஷினை "ஹேக்" பண்ணிருவாங்க.. வைஃபையை ஆப் பண்ணுங்க.. தமிழக தேர்தல் ஆணையத்திற்கு பறந்த கடிதம்

Google Oneindia Tamil News

சென்னை: வருகின்ற சட்டசபை தேர்தலில் வாக்காளர்கள் வாக்கு செலுத்தும் போது EVM மெஷின் இருக்கும் இடங்களில் WI-FI தொடர்பு துண்டிக்கப்பட வேண்டும் அதற்கு பதிலாக சிங்கிள் கேமரா வித் பவர் பாயின்டுடன் மெமரி கார்ட் பொறுத்தி வாக்காளர் வாக்கு செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரி தமிழக தலைமை தேர்தல் ஆணையருக்கு விரைவு தபால் அனுப்பியுள்ளது இந்திய தேசிய லீக் கட்சி.

இதுகுறித்து அந்த கட்சி வெளியிட்ட அறிக்கையை பாருங்கள்:

வாக்கு பதிவு முடிந்த பிறகு EVM மெஷினுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணிக்கை நடக்கும் இடத்திற்கு கொண்டு செல்லும் வரை ஹேண்ட் கேமராவில் தேர்தல் அதிகாரி பதிவு செய்ய வேண்டும்.

வைஃபைதான் மேட்டரே

வைஃபைதான் மேட்டரே

அதன் பிறகு வாக்கு எண்ணிக்கை நடக்கும் நாட்கள் வரை EVM மெஷின் இருக்கும் இடங்களில் Wi-Fi தொடர்பு துண்டித்து சிங்கிள் கேமார வித் பவர் பாயிண்டுடன் உதாரணத்திற்கு 40 நாட்கள் என கணக்கிட்டு அதற்கு தகுந்தபடி மெமரி கார்ட் பொறுத்தி இடத்திற்கு தகுந்தபடி 10 கேமரா பொறுத்தப்பட வேண்டும். இடத்திற்கு தக்கபடி சிங்கிள் கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்.

ஹேக் பண்ணிருவாங்க பாஸ்

ஹேக் பண்ணிருவாங்க பாஸ்

WI-FI மூலம் தேர்தல் பார்வையாளர் ( OBSERVER) EVM மெஷினை கண்காணிக்க முற்படும் போது சில சமூக விரோத சக்திகள் மூலம் (HACK) ஊடுருவி தங்களுக்கு சாதகமாக வாக்குகளை மாற்றிக் கொள்ள அதிகமான வாய்ப்புகள் உள்ளது
ஆகவே வாக்காளர்கள் வாக்கு செலுத்தும் இடம் முதற்கொண்டு வாக்கு இயந்திரங்கள் வைத்து உள்ள இடம் வரை கண்டிப்பாக WI-F1 துண்டிக்கப்பட வேண்டும்.

சிங்கிள் கேமரா

சிங்கிள் கேமரா

ஒருவேளை எதாவது தில்லுமுல்லுகள் நடந்துள்ளது என்று புகார் வந்தாலோ அல்லது தேர்தல் அதிகாரிகளுக்கு சந்தேகம் வந்தாலோ சிங்கிள் கேமரா வித் பவர் பாயிண்ட் மெமரி கார்ட் எடுத்து பரிசோதனை செய்து கொள்ளலாம். வாக்கு செலுத்துவது ஜனநாயக கடமை என்றும் கண்டிப்பாக மக்கள் வாக்கு செலுத்த வேண்டும் என தேர்தல் ஆணையம் மக்களுக்கு அறிவுறுத்துவதை ஏற்றுக் கொண்டு வயதான ஆண் வெயிலையும் வரிசையில் பொருட்படுத்தாது நின்று தாங்கள் நோய்வாய்ப்பட்டு நினைத்த சட்டமன்ற பெண்கள் கடும் இருந்தாலும் வேட்பாளரை தேர்ந்தெடுக்க வாக்கு செலுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னெச்சரிக்கை

முன்னெச்சரிக்கை

மதிப்பிற்குரிய திரு தேர்தல் ஆணையர் அவர்கள் EVM மெஷின் இருக்கும் இடங்களில் WI-FI துண்டித்து மக்கள் தேர்ந்தெடுத்த சட்டமன்ற வேட்பாளர் வெற்றி பெற தேர்தல் ஆணையம் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும் என இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக கோருகிறோம். இவ்வாறு, இந்திய தேசிய லீக் கட்சி மாநில தலைவர் அப்துல் ரஹீம் தெரிவித்துள்ளார்.

English summary
Indian National League Party, has requested election commission that, wi-fi should be disconnected in EVM centers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X