பட்டாசு! சென்னையில் மீண்டும் ஃபார்முலா 4 கார் பந்தயம்.. எப்போ தெரியுமா? அடுத்து கோவையிலும்!
சென்னை: சென்னையில் மீண்டும் ஃபார்முலா 4 கார் ரேஸ் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோவையில் உள்ள கரி மோட்டார்ஸ் ஓடுதளத்தில் நடைபெற இருந்த இந்தியன் ரேசிங் ஃபெஸ்டிவல் கார் பந்தயம், சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்தியன் ரேசிங் ஃபெஸ்டிவல், ஃபார்முலா 4 கார் பந்தயத்தின் 3வது சுற்று, சென்னையில் வரும் செப்டம்பர் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
இந்தியன் ரேசிங் லீக் ஃபார்முலா 4 கார் பந்தயத்தின் முதல் சுற்று போட்டிகள் சென்னை இருங்காட்டுகோட்டையில் உள்ள மெட்ராஸ் சர்வதேச கார் பந்தய ஓடுதளத்தில் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து இதன் 2-வது சுற்று போட்டிகள் சென்னை தீவுத்திடலில் கடந்த ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் இரவு நேர ஃபார்முலா 4 கார் பந்தயம் ஸ்ட்ரீட் ரேசாக நடத்தப்பட்டன.

சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற இந்த இரண்டாவது சுற்று போட்டிகளை தமிழ்நாடு அரசு, விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் RPPL நிறுவனம் இணைந்து நடத்தின. தெற்காசியாவிலேயே இதுதான் முதல் இரவு நேர ஃபார்முலா 4 ரேஸ் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கார் ரேஸை சிறப்பாக நடத்தி முடித்த விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை பல்வேறு தரப்பினரும் பாராட்டினர்.
அதைத்தொடர்ந்து இந்த ஃபார்முலா 4 கார் ரேஸின் 3-வது சுற்று போட்டிகள் கோவையில் நடைபெறும் என்றும், 4 மற்றும் 5வது சுற்று போட்டிகள் கோவா மற்றும் கொல்கத்தாவில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கோவையில் நடைபெற இருந்த 3வது சுற்று போட்டிகள் தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.
தற்போது RPPL நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கோவை கரி மோட்டார்ஸ் ஓடுதளத்தில் நடைபெறவிருந்த 3-வது சுற்று போட்டிகள் சென்னை இருங்காட்டுகோட்டை மெட்ராஸ் சர்வதேச கார் பந்தய ஓடுதளத்தில் செப்டம்பர் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் கோவா அல்லது கொல்கத்தாவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்த 4வது சுற்று போட்டி கோவை கரி மோட்டார்ஸ் ஓடுதளத்தில் அக்டோபர் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்றும், 5-வது சுற்று போட்டிகள் நவம்பர் 16 மற்றும் 17 ஆம் தேதிகளில் நடைபெறும் எனவும், ஃபார்முலா ரேஸ் நடைபெறும் இடத்தை RPPL விரைவில் அறிவிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications