பயணிகளுக்கு கட்டண சலுகை.. ரயில்வே கொடுத்த ஆஃபர்.. ரயில் ஒன் செயலி இருக்கா? உங்களுக்கு தான்!
சென்னை: பயணிகள் ரயில் ஒன் செயலியில் டிக்கெட் முன்பதிவு செய்வதை ஊக்குவிக்கும் விதமாக எந்த வகையான டிஜிட்டல் பேமெண்ட் தளத்தில் இருந்து கட்டணம் செலுத்தினாலும் இனி முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளுக்கு 3 சதவீத தள்ளுபடி தரப்படும் என்று ரயில்வே அறிவித்துள்ளது.
ரயில் ஒன் செயலி வழியாக முன்பதிவு டிக்கெட் புக்கிங் செய்யும் போது, ரயில்வே வேலட்டில் இருந்து பேமெண்ட் செலுத்தினால் 3 சதவீத தள்ளுபடி அளிக்கப்படுகிறது. ஆனால், பிற டிஜிட்டல் தளம் வாயிலாக பேமெண்ட் செய்தால் தள்ளுபடி கிடையாது என்று இருந்தது.

ஆன்லைன் டிக்கெட் புக்கிங்
ரயில்களில் தற்போது டிஜிட்டல் முறையில் டிக்கெட் எடுப்பது அதிகரித்து வருகிறது. கவுண்ட்டர்களில் கால் கடுக்க நின்று டிக்கெட் எடுப்பது தற்போது கணிசமாக குறைந்துவிட்டது. பெரும்பாலான பயணிகள் செல்போன் செயலி வாயிலாகவே தங்கள் டிக்கெட்டுகளை எடுக்கிறார்கள்.
அலைச்சல் மிச்சம், லைனில் காத்து கிடக்க வேண்டியது இல்லை, வீட்டில் இருந்தபடியே டிக்கெட் புக் செய்துவிடலாம் என்பதால் தற்போது ரயில்வேயின் செயலிகள் வாயிலாகவே பெரும்பாலான பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்வதை விரும்புகிறார்கள். தட்கல் டிக்கெட் சுமார் 89 சதவீதம் பேர் ஆன்லைன் வழியாகவே புக்கிங் செய்கிறார்கள்.
ரயில் ஒன் செயலி
அந்த அளவுக்கு தற்போது ரயில் டிக்கெட்டுகளில் டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்துள்ளது. முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளை யுடிஎஸ் செயலி வழியாக எடுக்க முடியும். இந்த செயலி வழியாக தொலை தூர ரயில்களுக்கு மட்டும் இன்றி லோக்கல் மின்சார ரயில்களுக்கும் டிக்கெட் எடுக்கும் வசதி உள்ளது.
ரயில்வேயை பொறுத்தவரை கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ரயில் ஒன் என்ற சூப்பர் செயலியை அறிமுகம் செய்தது. ஐஆர்சிடிசி, யுடிஎஸ், ரயில்வே புகார்களுக்கான செயலி என ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு செயலி இருப்பதற்கு மாற்றாக ஒரே செயலியாக ரயில் ஒன் என்ற செயலி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த செயலி வழியாக எக்ஸ்பிரஸ் ரயில்கள், புறநகர் மின்சார ரயில்களுக்கான டிக்கெட்டுகளையும் பயணிகள் எடுக்க முடிகிறது.
3 சதவீத தள்ளுபடி
தற்போது இந்த செயலி வழியாக முன்பதிவு டிக்கெட் புக்கிங் செய்யும் போது, ரயில்வே வேலட்டில் இருந்து பேமெண்ட் செலுத்தினால் 3 சதவீத தள்ளுபடி அளிக்கப்படுகிறது. ஆனால், பிற டிஜிட்டல் தளம் வாயிலாக பேமெண்ட் செய்தால் தள்ளுபடி கிடையாது.
இந்த நிலையில், பயணிகள் ரயில் ஒன் செயலியில் டிக்கெட் முன்பதிவு செய்வதை ஊக்குவிக்கும் விதமாக எந்த வகையான டிஜிட்டல் பேமெண்ட் தளத்தில் இருந்து கட்டணம் செலுத்தினாலும் இனி முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளுக்கு 3 சதவீத தள்ளுபடி தரப்படும் என்று ரயில்வே அறிவித்துள்ளது.
ரயில்வே அமைச்சகம் கடிதம்
பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாளான 14.01.2025 முதல் 14.07.2026 வரை இந்த கட்டண சலுகை அளிக்கப்படுகிறது. ஏற்கனவே ரயில் ஒன் செயலியில் வாலட்டில் இருந்து டிக்கெட் கட்டணம் செலுத்தினால் அளிக்கப்படும் 3 சதவீத தள்ளுபடியும் தொடர்ந்து அமலில் இருக்கும் எனவும் ரயில்வே தெரிவித்துள்ளது. ரயில் ஒன் செயலியை தவிர வேறு எந்த தளத்தில் டிக்கெட் செய்தாலும் இந்த ஆஃபர் கிடையாது என்றும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
டிஜிட்டல் முன்பதிவுகளைப் பரவலாக்கும் நோக்கில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக, மென்பொருள் அமைப்பில் தேவையான மாற்றங்களை செய்ய வேண்டும் என்று ரயில்வே டிக்கெட் முன்பதிவுக்கான மென்பொருள் பணிகளை மேற்கொள்ளும் CRIS-க்கு ரயில்வே அமைச்சகம் இன்று கடிதம் அனுப்பியுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications