இனி கடைசி நேரத்தில் டிக்கெட் கேன்சல் செய்தால் நோ ரீஃபண்ட்.. ரயில் டிக்கெட் ரத்து நடைமுறையில் மாற்றம்
சென்னை: ரயில் டிக்கெட்டுகளை, ரயில் புறப்படுவதற்கு முந்தைய 8 மணி நேரத்துக்குள் ரத்து செய்தால் கட்டணம் திருப்பித் தரப்படாது என ரயில்வே அறிவித்துள்ளது. ரயில் டிக்கெட்டை கேன்சல் செய்வது மற்றும் அதற்கான ரீஃபண்ட் பெறுவது தொடர்பான விதிமுறைகளை இந்திய ரயில்வே மாற்றியுள்ளது. ஏப்ரல் 1 முதல் இந்த மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன.
ரயில் டிக்கெட் ரத்து நடைமுறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி, ரயில் டிக்கெட்டுகளை, ரயில் புறப்படுவதற்கு முந்தைய 8 மணி நேரத்துக்குள் ரத்து செய்தால் கட்டணம் திருப்பித் தரப்படாது என ரயில்வே அறிவித்துள்ளது. 8 மணி நேரத்துக்கு முன்பாக 24 மணி நேரத்துக்குள் ரத்து செய்தால் 50% தொகை மட்டுமே திருப்பித் தரப்படும்.

72 மணி நேரம் முதல் 24 மணி நேரத்துக்குள் ரயில் டிக்கெட் ரத்து செய்தால் ரத்து கட்டணம் தவிர, பயணக் கட்டணத்திலும் 25% பிடித்தம் செய்யப்படும். ரயில் புறப்படுவதற்கு 72 மணி நேரம் முன்பாக ரத்து செய்தால் மட்டுமே தற்போதைய நடைமுறைப்படி முழு கட்டணம் திருப்பித் தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் டிக்கெட் ரத்து கட்டணம் தொடர்பான நடைமுறைகளில் புதிய மாற்றங்கள் வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ரயில் டிக்கெட் தொடர்பான பல முக்கிய சீர்திருத்தங்களை இன்று அறிவித்துள்ளார்.
செயல்பாடுகளை மேம்படுத்துதல், டிக்கெட் வழங்குவதில் வெளிப்படைத்தன்மை மற்றும் சரக்குப் போக்குவரத்து ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட பல சீர்திருத்தங்களைச் செயல்படுத்த இந்திய ரயில்வே தயாராகி வருவதாக அமைச்சர் கூறியுள்ளார். ரயில்வே நெட்வொர்க்கை நவீனமயமாக்குவதற்கும், பயணிகள் சேவைகளை மேம்படுத்துவதற்குமான திட்டத்தின் ஒரு பகுதியாக, 5 முக்கிய சீர்திருத்தங்கள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.
அதன்படி, ரயில் புறப்படும் நேரத்திற்கு 8 மணி நேரத்திற்கு முன்பு பயணச்சீட்டை ரத்து செய்தால், அவருக்கு எந்தவிதமான பணமும் திரும்பக் கிடைக்காது. 24 மணி முதல் 8 மணி நேரத்திற்குள் டிக்கெட் ரத்து செய்யப்பட்டால், 50 சதவீத தொகை மட்டுமே திரும்ப வழங்கப்படும். இந்தப் புதிய விதிகளை அமல்படுத்துவதன் மூலம் கள்ளச்சந்தையைக் கட்டுப்படுத்தவும், சாதாரண பயணிகள் எளிதாகப் பயணச் சீட்டுகளைப் பெறுவதை உறுதி செய்யவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய விதிமுறைகளின் கீழ், ரயில் பயணிகள் இனி எந்த ரயில் நிலையத்திலிருந்தும் தங்கள் பயணச் சீட்டுகளை ஆஃப்லைன் முறையில் ரத்து செய்ய முடியும். இதனால், பயணிகள் தாங்கள் டிக்கெட் முன்பதிவு செய்த நிலையத்தில் மட்டுமே கேன்சல் செய்ய முடியும் என்பது மாற்றப்பட்டுள்ளது.
ரயில் புறப்படுவதற்கு 30 நிமிடங்கள் முன்பு வரை ரயிலில் ஏறும் இடத்தை பயணிகள் மாற்றிக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது, பயணிகள் பட்டியல் தயாரிக்கும் வரையே ஏறும் ரயில் நிலையத்தை மாற்றிக் கொள்ளும் வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி












Click it and Unblock the Notifications