கோமியம் குடித்தால் காய்ச்சல் குணமாகுமா? சென்னை ஐஐடி இயக்குநருக்கு கால்நடை ஆராய்ச்சியகம் வார்னிங்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோமியம் குடித்தால் காய்ச்சல் குணமாகும் என சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையான நிலையில் அவ்வாறு பசுவின் கோமியத்தை குடிப்பது உடலுக்கு கேடு விளைவிக்கும் என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் கோமியத்தில் தீங்கு விளைவிக்கும் 40 வகையான பாக்டீரியாக்கள் இருப்பதும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அந்த ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

madras iit cow urine

சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள கோ சம்ரக்ஷனா கோ சாலையில் மாட்டுப் பொங்கலுக்கு கோ பூஜை நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பங்கேற்றார்.

இதில் காமகோடி பேசுகையில் எனது அப்பாவுக்கு காய்ச்சல் இருந்தது. ஒரு சன்னியாசி எங்கள் வீட்டிற்கு வந்தார். அவரிடம் மருத்துவரை கூப்பிடலாமா என கேட்டார். அந்த சன்னியாசியின் பெயர் மறந்துவிட்டது. எனது அப்பா கேட்ட உடனே கோமியத்தை சன்னியாசி குடிக்கச் சொன்னார்.

உடனே கோமியத்தை எடுத்து வந்து அப்பா குடித்தார். 15 நிமிடங்களில் அவருக்கு காய்ச்சல் போய்விட்டதாம்.பாக்டீரியா, பூஞ்சை, செரிமான கோளாறு உள்ளிட்ட உடல் உபாதைகளை எதிர்க்க கோமியம் சிறந்த மருத்துவ குணத்தை கொண்டது. இந்த மருத்துவ குணம் கொண்ட கோமியத்தை நாம் எடுத்து கொள்ள வேண்டும் என அவர் பேசியுள்ளார்.

இவரது பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் கூறியிருப்பதாவது: பசுக்கள், எருமைகளின் சிறுநீரை ஆராய்ச்சி நடத்தியதில் அதில் 40 வகையான பாக்டீரியாக்கள் இருப்பது தெரியவந்தது.

எனவே மனிதர்கள் கோமியத்தை குடிப்பது உகந்தது அல்ல. இதை மனிதர்கள் அருந்தினால் பல மோசமான நோய்கள் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கோமியம் மனித உடலுக்குள் சென்றால் வயிறு, குடல்களில் தொற்று உள்ளிட்ட நோய் பாதிப்புகளை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அறிவியல் பூர்வமாக கோமியம் குடிப்பதற்கு உகந்தது அல்ல எனும் போது கோமியத்தை குடித்தால் ஜூரம் சரியாகும் என சென்னை ஐஐடி இயக்குநரே பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக பசு கோமியத்தை நம் வீடுகளில் லட்சுமி கடாட்சம் கிடைக்க வேண்டும் என பயன்படுத்துவோம். அதை கூட தெளிப்போமே தவிர உள்ளுக்குள் குடிக்க மாட்டோம். நோன்பு காலங்களில் நோன்பு கயிறுகளை அலச இந்த கோமியத்தை பயன்படுத்துவார்கள். அது போல் வீட்டில் திதி கொடுக்கும் நாளில் கூட இந்த கோமியத்தை பயன்படுத்துவார்கள். வாசலில் கோமியத்தை தெளிப்பார்கள். இப்படித்தான் பயன்படுத்த வேண்டுமே தவிர இதை உள்ளுக்குள் பயன்படுத்துவது நல்லதல்ல என்கிறார்கள்.

சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி கோமியம் குறித்து போலி அறிவியல் விஷயங்களை பரப்புவதை ஏற்க முடியாது என சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் காமகோடி தான் சொன்ன கருத்தை வாபஸ் பெற வேண்டும் என பல அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. மேலும் பொதுவெளியில் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனமான மெட்ராஸ் ஐஐடியின் இயக்குநரே இப்படி மூடநம்பிக்கைக்குரிய வகையில் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+