Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியாவின் மகிழ்ச்சியான 10 மாநிலங்கள்.. லிஸ்ட்டில் இருக்கும் தென் மாநிலம் எதுன்னு பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: நம் நாட்டில் எந்த மாநிலம் மகிழ்ச்சியான மாநிலம் என்ற டாப் 10 லிஸ்ட் வெளியிடப்பட்டுள்ளது. இந்த லிஸ்டை ஹேப்பி பிளஸ் கன்சல்டிங் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் இமாச்சல பிரதேசம் முதலிடத்தை பிடித்துள்ளது. டாப் 10 லிஸ்டில் ஒரே ஒரு தென் மாநிலம் தான் இடம்பெற்றுள்ளது. தமிழ்நாடு எத்தனையாவது இடத்தினை பிடித்துள்ளது என்பது பற்றி இங்கு பார்ப்போம்.

இந்தியா பல்வேறு இனம், கலாசாரத்தை கொண்ட மாநிலமாகும். ஒவ்வொரு பகுதியிலும் மக்களின் பொருளாதாரம், சமூக நிலை ஆகியவற்றை அங்குள்ள கால நிலை, உள்கட்டமைப்புகள் என பல்வேறு காரணிகள் நிர்ணயிக்கின்றன.

indias-10-happiest-states-do-you-know-which-is-only-state-from-south-india-is-in-the-list

டாப் 10 லிஸ்ட்

அந்த வகையில், திருப்தியான வாழ்க்கை முறை, உணர்வு ரீதியான சுதந்திரம் பொருளாதார நிலை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு 'ஹேப்பி பிளஸ் கன்சல்டிங்' என்னும் நிறுவனம் இந்தியாவில் மகிழ்ச்சியான 10 மாநிலங்களை பட்டியலிட்டுள்ளது. இந்த பட்டியலில் தென் இந்தியாவில் இருந்து ஒரே ஒரு மாநிலம் மட்டுமே இடம் பெற்றுள்ளது. ஹேப்பி பிளஸ் கன்சல்டிங் நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள நாடுகள் விவரம் வருமாறு:-

இமாச்சல பிரதேசம்:

நாட்டிலேயே மகிழ்ச்சியான மாநிலத்தின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது இமாச்சல பிரதேசம் ஆகும். இமயமலையை ஒட்டி அமைந்து இருக்கும் இந்த மாநிலம் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களை கொண்டது. அமைதியான சூழல், தூய்மையான காற்று உள்ளிடவற்றை இந்த மாநிலத்தை மகிழ்ச்சியான மாநிலங்களின் பட்டியலில் முதலிடத்தில வைத்துள்ளது. இந்த மாநிலத்தில் குற்ற விகிதம் குறைவு, சமூக ஒழுக்கம், அமைதியாக நகரும் லைஃப் ஸ்டைல் உள்ளிட்டவையும் மக்களின் மன அழுத்தத்தை குறைத்து மகிழ்ச்சியான வாழ்க்கை முறையை அளிக்கிறது.

மிசோரம்:

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரம் இந்த பட்டியலில் இரண்டாவது இடம் வகிக்கிறது. இந்த மாநிலத்தில் கல்வி அறிவு பெற்றவர்கள் அதிகம். சமத்துவம் மற்றும் வலுவான கலாசார பிணைப்பை இந்த மாநிலம் கொண்டுள்ளது. பழங்குடியின கலாசாரம், சமூக திருப்தி உள்ளிட்டவை மகிழ்ச்சி குறியீட்டை அதிகரிக்க செய்திருக்கின்றன.

அந்தமான் நிகோபார்:

அந்தமான் நிகோபார் தீவுகளில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் அழகு, தூய்மையான காற்று, ஆழமான கலாசாரம் ஆகியவை மக்கள் மனநலனை மேம்படுத்துகின்றன. அந்தமான் நிகோபாரில் குற்ற விகிதங்களும் குறைவு.

பஞ்சாப், குஜராத்

இந்த பட்டியலில் 4 வது இடத்தில் பஞ்சாப் உள்ளது. வேளாண்மையை முக்கியமான வாழ்வாதாரமாக இந்த மாநிலம் கொண்டுள்ளது. 5-வது இடத்தில் குஜராத் உள்ளது. பொருளாதார செழுமை மற்றும் மாறாத கலாசாரம், வேலை வாய்ப்பு அதிகரிப்பு , மக்களின் அடிப்படை வசதிகளுக்கு அளிக்கப்படும் முன்னுரிமை உள்ளிட்டவை இந்த மாநிலம் 5-வது இடத்தில் இருப்பதற்கு முக்கிய பங்காற்றுகிறது.

இந்த பட்டியலில் 6-வது இடத்தில் சிக்கிம் உள்ளது. வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் காணப்படும் தூய்மையான சூழல், வளமான கலாசாரம், பாரம்பரியம், தீவிர சுற்றுச்சூழல் கொள்கைகள் ஆகியவை முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக உள்ளது.

புதுவை, கேரளா

* தமிழகத்திற்கு அருகில் உள்ள புதுவை யூனியன் பிரதேசம் மகிழ்ச்சியான மாநிலங்கள் பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. லிஸ்டில் 8-வது இடத்தில் மற்றொரு வடகிழக்கு மாநிலமான அருணாசல பிரதேசம் உள்ளது. இந்த மாநிலத்தில் உள்ள கலாசாரம், வலுவான சமூக உறவுகள், பாதுகாப்பு, இயற்கையான கால சூழல் ஆகியவை காரணமாக 8-வது இடத்தில் உள்ளது.

* கடவுளின் தேசம் என்று வர்ணிக்கப்படும் கேரளா, மகிழ்ச்சியான மாநிலங்கள் பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. முதல் 10 இடங்களுக்குள் இருக்க கூடிய ஒரே தென் இந்திய மாநிலம் கேரளாதான். கேரளாவை பொறுத்தவரை அங்குள்ள இயற்கை அழகு, இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறை என அதன் பெருமையை சொல்லிக்கொண்டே போகலாம்.

* கல்வி, சுகாதாரத்தில் முன்னிலையில் கேரளா உள்ளது. இருந்த போதிலும் கேரளாவில் ஏற்படக்கூடிய இயற்கை பேரிடர்கள் ஆகியவை மகிழ்ச்சியின் குறியீட்டின் அளவைக் குறைத்துள்ளது. இதனால், 9-வது இடத்தில் உள்ளது.

தமிழ்நாடு எத்தனையாவது இடம்

* இந்தியாவின் மகிழ்ச்சியான மாநிலங்கள் லிஸ்டில் பெரும்பாலும் வடகிழக்கு மாநிலங்களே ஆதிக்கம் செலுத்துவதை பார்த்து இருப்போம். அந்த வகையில் பட்டியலில் 10-வது இடத்திலும் வடகிழக்கு மாநிலமான மேகாலயாவே உள்ளது. அங்குள்ள தனித்துவமான பழங்குடியின கலாசாரம் உள்ளிட்டவை மகிழ்ச்சி குறியீட்டில் முன்னிலை வகிக்க காரணமாக உள்ளது.

இந்த பட்டியலில் தமிழ்நாடு எத்தனையாவது இடத்தில் இருக்கிறது தெரியுமா? 29-வது இடத்தில் உள்ளது. இயற்கை சூழல், மாறாத சமூக அமைப்புகள் காரணமாக மேகாலயா மகிழ்ச்சியான மாநிலங்களின் வரிசையில் 10-வது இடத்தில் இடம்பெற வைத்திருக்கிறது. இந்த பட்டியலில் தமிழ்நாடு 29-வது இடத்தில் இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+