பவரை காட்டிய இந்தியா! ஹார்முஸ் நீரிணையை கடந்து வரும் மேலும் 2 எண்ணெய் கப்பல்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஈரான் போர் பதற்றம் காரணமாக, ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டிருக்கிறது. இருப்பினும், ஈரானுடன் இந்தியா தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில், மேலும் 2 எண்ணெய் கப்பல்கள், நீரிணையை தாண்டி இந்தியா வரும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஏற்கெனவே மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையின் விளைவாக சிவாலிக், நந்தா தேவி என 2 எல்பிஜி கப்பல்கள் இந்தியா வந்தன. இந்நிலையில், மேலும் 2 கப்பல்கள் வர இருக்கின்றன.

India

1.புஷ்பக்
2.பரிமல்

ஹார்முஸை கடக்கும் இந்திய கப்பல்கள்

இந்த இரண்டு எண்ணெய் கப்பல்களும் பாதுகாப்பாக இந்தியா வர, மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டது. மொத்தம் 22 எண்ணெய் கப்பல்கள் பெர்ஷியன் வளைகுடாவில் சிக்கியிருக்கின்றன. ஒவ்வொரு கப்பலாக மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த முயற்சியின் காரணமாக தற்போது மேற்குறிப்பிட்ட 2 கப்பல்களும், ஹார்முஸ் நீரிணையை பாதுகாப்பாக கடந்து வர இருக்கிறது.

பவரை காட்டிய இந்தியா

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி இடையே நடந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து, ஈரான் இந்த கப்பல்களுக்கு பாதுகாப்பான பாதையை வழங்கியிருக்கிறது. இவை ஈரானின் கடல் எல்லைக்கு மிக அருகில், அந்நாட்டின் கடற்படையின் கண்காணிப்புடன் ஹார்முஸை கடந்து, ஓமன் வளைகுடா வழியாக இந்தியாவை நோக்கி வந்துக்கொண்டிருக்கின்றன. ஓமன் வளைகுடா அருகே இந்திய கடற்படை கப்பல்கள் ஏற்கெனவே பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருப்பதால் இந்த கப்பல்களுக்கு கூடுதல் பாதுகாப்பு கிடைத்திருக்கிறது.

இது தவிர, ரஷ்யாவிலிருந்து சீனாவுக்கு சென்றுக்கொண்டிருந்த எண்ணெய் கப்பலான 'அக்வா டைட்டன்', இந்தியா நோக்கி திருப்பிவிடப்பட்டிருக்கிறது.

இது போதுமானதா?

மொத்தம் 3 கப்பல்களில், 24-27 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் இருக்கிறது. இந்த அளவு பிரமாண்டமாக தெரிந்தாலும், இதில் சிக்கல் இருக்கிறது. அதாவது, இந்தியாவுக்கு ஒரு நாளைக்கு 57-60 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் தேவை. எனவே, இந்த கப்பல்களில் இருக்கும் எண்ணெய் 10-12 மணி நேரத்திற்கு மட்டுமே போதுமானது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+